எல்லோருக்கும் கழிவு உண்டு
மேலோர் என்றும் கீழோர் என்றும்
எண்ணுகின்ற மானிடனே! யாவருக்கும் உடல்
ஒன்று! எவருக்கும் அவ்வுடலிலே
கழிவுண்டு! அது பொதுவான ஒன்று!
சுத்த தேகம் கொண்டுள்ளேன் என்று
தற்பெருமை பேசுகின்ற பேதைகளே!
வாசிதேக குருகுலத்தில் சேர்ந்து பார்!
வாசிகலை பயின்று பார்! உன்கழிவு
எதுவென்று உன்னையே அறியவைக்கும்
விந்தைதனை அறிந்திடுவாய் அறிந்த கணமதினில்
எம் குருவைப் பணிந்திடுவாய்! கழிவது வெளியேறி
சுத்ததேகம் அடைந்திடுவா சித்தமலம்
வெளியேறி சித்தசுத்தி பெற்றிடுவாய்!
சுழுமுனையும் அறிந்திடுவாய் அக்கணமதில்
எம் ஆசானை ஈசனாய் போற்றிடுவாய்!
போற்றி தொழுதிடுவாய் மானிடனே!
ஆலயத்தில் அருள் வந்து குதித்தாடும்
பக்தர்கள் அடையாத ஆனந்தமதை
இருவரி மந்திரத்தின் உச்சரிப்பில்
சிவச்சூடாம் சுளிமுனைதனை உணரவைத்த
சுந்தரரே! எம் சிவசித்தனே! உம்மை
சிரம் பணிந்து பணிகின்றேன்!
சிவகுருவின் பக்தன்,
ம.சண்முக பாண்டியன்,
வாசியோக வில்வம் எண்: 10 11 001