பணம் :

பணம் :

 084

 • பணம் சேர்ப்பது உன் உடல் அணுவை அழிப்பதற்கு சமம்.
 • அளவோடு உண்ணும் உணவே உண்மையை அறியச் செய்யும்.
 • அளவோடு சேர்க்கும் பணமே உன் வாழ்வை பெருக்கும்.

 

 • பணமே உன் ஒழுக்கத்தை அழிக்கும். சிவகுருவின் வாசியே உன் ஒழுக்கத்தை நிலைநிறுத்தும்.
 • வாசி அறியாமல் உன் உடல் உயிர் பெறாது. உடல் உயிர் பெறுவது வாசியாலே! பணத்தால் அல்ல.
 • இறக்கும்போது உடல் அறிவது வாசி. வாசியால் இறக்கும்போது மனநிறைவு பெறுவது இறைவனின் உணர்வே.

 

 • இறக்கும்போது உடல் அழிவது பணத்தாலே. நீ உண்ணும் உணவாலும், நீ சேர்த்த பணத்தாலும், இவையாவும் இல்லாத ஒழுக்கத்தால்.
 • இறப்பின் ஆனந்தம் உணர்வது வாசி, பணத்தால் அல்ல. சிவகுரு வார்த்தை கோடி நன்மை. நீ சேர்க்கும் பணத்தால் கோடானகோடி அணு உன் உடலில் அழியும்.

 

 • பணத்தை அழிப்பது பணமே. அழியாமல் இருக்கும் வாசியை உன் உடலில் ஏற்றடா!
 • பர ஒளி காண உடல் தேவை. உடல் உயிர் பெற வாசி தேவை.
 • உடலை அழிப்பது பணம். உறவை கெடுப்பது பணம். அணுவை அறிந்தால் அழிவது ஏது!

 

 • பணம் சேர்த்து உன் உடல் அழிவது பாவமே. அப்பணத்தால் மற்றவரை அழிப்பதும் பெரியபாவம்.
 • உடல் வாழ்வு பணத்தால் அல்ல. உள்ளத்தின் இறைவனை அறிவதும் பணத்தால் அல்ல. உன் உடல்நலம் பெறுவது பணத்தால் அல்ல.

 

 • கோயிலுக்கு செலவழிக்கும் பணமே உன் உண்மையை அறியும். உண்மை பணமே உன்னை உயர்த்தும்.