சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்
சிவபர ஒளி
செம்மை கொண்டு எழுதுகிறேன்
செம்மையான யாக்கையின் செயலினை
வெம்மை தழுவிய உம தாளில்
வெம்மையின் செயலதை செம்மையாய்!
கருமை கழிவது கறைந்தவுடன்
சிவபர ஒளியின் சிறப்பதனை
சிவசித்தன் சீடனாம் சேவகனின்
சிற்றிடை “இட”மதி வரவமாய்
சிறு உரு கொண்டே சுருண்டிட்டே
செயல்படா நிலையில் இருந்ததை
சிவசித்தன் சீண்டிய வாசியினால்
சீறியே கிளம்பிய வெம்மையினை
சிரசினை நோக்கியே சீராக
எழுப்பினா ரெமது சிவகுருவே
எரிச்சலு முதுகினி லினைந்திட்டே
காந்தலசம் கண்டத்தில் கலந்திட்டே
வேலையில் வேதனை ஆனந்தமாய்
வெளிப்பட்ட தேனது அமுதமாய்
சுளிமுனையின் செயலது சுகமாகவே
முக்கண் வழியிலே கண்டனஎன்
சிவபர ஒளியினி யகத்தை
சிவசித்த னருலினாலே சிறப்பித்தேன்
கேளுமின் கேளுமின் மானுடரே
குண்டலினி இனிஇனி எந்நாளும்
கூறுமின் கூறுமின் சிவபர ஒளியாமென்றே.
சிவகுருவின் பக்தன்
என்.அசோக்குமார்
வாசியோக வில்வம் எண் : 1010001
அலை பேசி : +919443931073