எதிர்மறை எண்ணமே பயமாகுமே!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

பயம் என்பதில்லையே
எதிர்மறை எண்ணமே பயமாகுமே!

பயங்கொள்ளாதே அகமே
உன்னுள்ளே ‎சிவசித்தன் இருக்கயிலே!

ஒலியால் உரைத்திட
ஒளியாய் உள்தோன்றியே
ஒழிப்பான் பயமென்னும் ‎பெருங்கழிவையே!

உள்உறவை நாடிவிடு
உத்தமனை கண்டுவிடு
உயிர் மெய்யாகிவிடு
‎சிவசித்தனை சரணடைந்துவிடு!

நன்றி ‎சிவசித்தனே!!!

ஐவகை கழிகவற்றிய ஐந்தலை நாகனாய்…

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

#Sivasithan (2)நெற்றியின் பின்னே பெருவலியால்

என்னை மறந்து தன்னை அறியாமல்

கண்களை மூடிய வேளை

விழியே சுடும் அளவு நெருப்பு

ஒளியாய் என்னுள் பரவ உணர்ந்தேன்……

விழியை மூடிய வேளை

அதில் தோன்றிய கதிரின் ஒளியில்

காந்தம் இழுக்கும் பார்வையால்

காலநாதன் சிவசித்தப்பேரொளியான் தென்பட

படபடத்த நெஞ்சம் சற்றே சாந்தம் பெற்றது

சிவசித்த வில்வநாயகனின் நாமம் உரைக்க

சுளீர் என்று நெற்றியில் வலி

சுளிமுனையாய் சுட்டிட

ஆனந்த வலியில் அயர்ந்த அரைநொடி

சொல்லிடும் எம் பிறப்பினை…….

செந்நிற செங்கதிரோனாய் என்

சிவசித்தஅக்னிதற்பரன் சர்ப்பமாய்

ஐவகை கழிகவற்றிய ஐந்தலை நாகனாய்

அற்புதமாய் அருங்காட்சியாய்

அர்ப்பனிற்கு திருக்காட்சி தந்து என்னை

மெய்யாய் மெய்யில் உரையவைத்த

திருக்காட்சி கண்டேன்! என் அருளாளன்

சிவசித்தனின் வான்வாசி அளித்த

திருவுடல் தனிலே!

சிவகுருவின் கொடையால்

வான்வாசியின் மீது உள்ள உண்மையில்

இக்காட்சி என் மனதின் காட்சியாக!!!!


வாசியோக பக்தன்

ர.சுந்தர்

வாசியோக வில்வம் எண் :  13 09 205

சின்னமனூர்.தேனி மாவட்டம்.

 

ஒளியால் வெளியை அளிப்பவனே

சிவகுரு சிவசித்தன் தாள் சரணம்

DSC00263

உள்ளத்தில் உறைந்த உள் ஒளியே
மருள் நீக்கும் செம்மலே
உன்மெய் ஒளிரச் செய்பவனே
உள் ஒளியால் எனக் கொளி அளித்தவனே
ஒளியால் வெளியை அளிப்பவனே
ஒளியே வெளிஎன உரைப்பவனே
ஒளியுள் ஒளியாய் ஒலிந்தவனே
ஒளியே மதியான அற்புதமே

 

 

 

சிவகுரு சேவையில்,

எஸ்.அரவிந்த்

வாசியோக வில்வம் எண் : 1112208