எம் சிவசித்தனுக்கு சூடும் பாமாலை

சிவசித்தனின் வாசியோகக்கலை

ஸ்ரீ வில்வம் யோகா மையம்

சின்ன அனுப்பானடி,

சிந்தாமணி,

மதுரை.

 

வணக்கம் சிவகுருவே!

 

எம் சிவசித்தனுக்கு சூடும் பாமாலை

 

அன்னையே அன்பிற்கும் அன்பானவனே! அச்சம்தவிர்த்து

அகத்தில் நிறைந்தவனே!

ஆனந்தம் அடைசெய்தவனே! ஆழ்ந்த சிந்தனைக் கொண்டவனே!

ஆடம்பரம் அறியாது எம் சிவசித்தனின் ஆலயமே!

இன்னல்களை போக்கியவனே! இல்லறத்தில் நல்சுகம்

புரிந்து இறைநிலை உணர்த்தியவனே!

ஈகையை தந்து ஈன்றபொழுதை எமக்கு அளித்தவனே!

உண்டிக்கு உணவை குறைத்து என் சிந்தனைக்கு

விருந்தானவனே!

ஊண் உணவை அழித்து எனக்கு ஊக்கம் தந்தவனே!

எண்ணங்களின் இருளை அகற்றியவனே!

எனக்கு பிடித்தவனே! என் பிள்ளைகளுக்கு நீயே!

எங்களுக்கும் நீயே! எல்லாம் நீயே!

ஏளனம் செய்தவரையும் ஏற்றம் தந்தவனே!

ஐந்தெழுத்தானவனே! ஐயம் போக்கியவனே!

ஐந்துபொருள் ஆனவனே! ஐங்கரனே! ஐம்புலனும் நீயே!

ஒழுக்கம் நிறைந்தவனே! ஒப்பில்லா மாணிக்கமே!

ஒலித்திருத்தலமே!

ஓங்காரநாதனே! ஓம் என்ற மந்திரமே!

ஓங்கி உலகலந்த உத்தமனே!

ஔவைக்கு கனி கொடுத்தவனே!

ஔடதத்தை தவிர்க்கவைத்தவனே!

எஃகு போல் என் அகத்தை உறுதிஆக்கியவனே!

 

நன்றி சிவசித்தனே 

 

பெயர் : க. நீ. ஜெயச்சந்திரன்

வாசியோக வில்வம் எண்  : 14 09 003

வயது : 45