புண்ணாகி உடல் நொந்து வந்தவரை…

சிவகுருவே சரணம்

sivssiththan 2  (27)

 

புது யுகம் படைத்து புத்துயிர் தந்தீர்

புனிதராம் சிவசித்தரே

பூத்துக் குலுங்கும் புது மலராக

எம்மை மாற்றி அமைத்தீர், சிவசித்தரே

புற்றில் இல்லை நாகம்

மனிதனுள் ஆட வைக்கும்

வில்வத்தில் ஆடுது நாகம்

புன்னகையோடு வலிஇன்றி

வாழச் செய்தீர் சிவகுருவே.

 

 

 

சிவகுரு சேவையில்,

D.பத்மாசினி

வாசியோக வில்வம் எண் : 12 05 126

“நான்” என்பதின் செயல்

#Sivasithan (25)நான் என்பதின் செயல்

 

 

“நான்” நானாக என்னுள்

“நானாகி” வந்தீர் சிவகுருவே

“நான்” நானாக்க எம்மை

நாணேற்றிணீர் சிவகுருவே

நாதன் உம்நற் செயலாலே

“நானி” யற்றினே னொருநாழி கையின் காலில்

நாயகமே நற்றுணையே நமசிவயமே

“நான்” நாணாகி விட்டேன் நற்செயல் புரிய

“நானி” லத்திலுன் புகழ்பாட இனி

நாணமும் ஓடிடும் நற்குருவாலே

நம்பினேன் நம்பியாரின் புதல்வனே

 

 

சிவகுருவின் பக்தன்

 என்.அசோக்குமார்  

வாசியோக வில்வம் எண் : 1010001

அலை பேசி : +919443931073