கோளும் நாளும் சிவசித்த வாக்கிற்கு இணங்குமே…

கோளும் நாளும் சிவசித்த வாக்கிற்கு இணங்குமே#Sivasithan (5)

 

ஜாதகத்தில் கால நேரம் சரியில்லை

என்று பரிகாரம் தேடி அலையாதீர்கள்

அத்தைகைய தருணமதில் சிவசித்தன் வாசி

யோகம் செய்பவரின் தீய எண்ணமும்

சுத்தப்படுத்தி தூய எண்ணமாக மாற்றப்

படுவதால் அவரது ஜாதகமும் சாதகமாக

மாறுவதை கண்கூடாய் காணலாமே!

ஸ்ரீவில்வ வாசிதேகக் கூடமதிலே! பிறகெதற்கு

பரிகாரம்? பணம் செலவாவதைத் தடுத்து

உங்கள் மனம் நலமாவதற்கு சிவசித்தனின்

வாசிகலை பயின்றால் போதுமே!


 

சிவகுரு வித்திட்ட விதிமுறைப்படி

அவர் கூறும் வழியே சிவசித்தன்

கற்று அருளிய வழியறிந்து செய்யும்

மனிதனுக்கு நவகோள் செய்யும் வலி என்செய்யும்

காணாமல் போகுமே! காலாலே

கடவுளை அறியலாம் என்பதே எம்ஆசான்

சிவகுரு சிவசித்தனின் கூற்று!


 

நவகோள்களின் செயலறிந்து நாளையும்

பொழுதையும் கணிக்கின்ற சோதிடத்தை

நாடி செல்பவர்களே! அணுவறிந்து வாசி

தரும் எம் ஆசானை நாடி வாசிகலை

பயில் மனமே! நாளும், பொழுதும்

உமக்கு வசமாகும்! இயற்கையும் உமக்கு

இசையும்! உன் ஜாதகமும் உமக்கு

சாதகமாகும்! என்ற உண்மைதனை

அக்கணமதில் அறிந்திடலாம்! இயற்கையும்

நாமும் ஒன்றென்ற உண்மைதனை அறிந்திடலாம்!

கற்சிலையில் கடவுளைத்தேடும்

மானுடர்கள் மத்தியிலே! கற்கின்ற

உயிர்க்கலையில் கண்டிடலாம் கடவுளதை!

எம் சிவசித்தன் உயிர்க்கலையில் அத்தனையும்

வசப்படுமே! ஆதிசிவ சோதியில் மனம்

லயப்படுமே! வாசிகலை பயிலவா நல்மனமே!


 

சிவகுருவின் பக்தன்,

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001