‘ன’ கரக் கவிகள்

சிவசித்தரே!
அனந்தனே அலைம் அன்னவரே நீரே
அன்பனுக்கு வாசி அன்வயி – கொடுக்க
அன்னம் ருசித்த்து நோவு மடிந்தது
அனுக்கிரகம் கிட்டியது நின்னால்
– முடிவில்லாத நிலைத்த தன்மை கொண்ட நெருப்பே நீர் சிவசித்தரே, பக்தர்களாகிய எங்களுக்கு வாசி எனும் அருமருந்தை தொடர்ந்து நீர் கொடுக்க, சாப்பிட முடியாமல் இருந்தோர் கூட ருசித்து சாப்பிட்டு நோய்களை விரட்டி தங்கள் அனுக்கிரகத்தால் நீடீழி வாழ்கின்றனரே

sivssiththan 2  (15)சிவசித்தரே!
ஆன்ம தரிசனம் உடல் சார்ந்ததல்ல
ஆன்மா சார்பு பெற்றதென – உணர்த்திய
ஆன்ற மைந்த வள்ளலே ஆனந்தம்
ஆன்றவர் மூலம் கிட்டியதே
– தன்னை உணரும் அறிவு என்பது வெறும் உடல் சார்ந்த விஷயமல்ல, அது உயிர் சார்ந்ததென்று உணர்த்திய நீர் குணந்தாலும், கல்வியாலும் நிறைந்த காரணத்தாலேயே அடக்கத்தோடு இருக்கும் நபரே.. உங்கள் அறிவுச் சுடரால் நாங்கள் பேரின்பம் அடைகிறோம்.

சிவசித்தரே!
இனிமை கூடுமே வாசி உணர்ந்தால்
இன்னே சேர்ந்திடு உண்மை – இழக்காதே
இனை செய் நோயெனும் பேயை
இனிய சிவகுரு சிவசித்தராலே.
– வாசியோகம் செய்வோரும் துன்பம் வரும் போதெல்லாம் அதை எளிதில் தீர்ப்பர், சேராதவர் இன்றே சேர்ந்தால், அவர்கள் இழந்து கொண்டுருக்கும் உண்மை காக்கப்படும், எத்தகைய நோயையும் அழித்து விடலாம், இனிமை குணம் கொண்ட சிவசித்தரால்

சிவசித்தரே!
ஈனல் ஒன்று உண்டெங்கில் இறப்பும்
ஈனுமே அப்விறப்பு இருத்தல் – கூடாதே
ஈனமாய் ஐக்கிய மாகிடு சிவசித்தர் பால்
ஈனோல் காக்கப் படுவரே.
– பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்பதும் கட்டாயம் உண்டு, அந்த இறப்பினை இழிவானதாக இருக்கக் கூடாது என்பதால் சிவசித்தரிடம் விரைவாய் சேர்ந்திடு.. உலக மக்கள் அனைவரையும் அவர் காப்பாரே.

சிவசித்தரே!
உன்னதம் பெற்றோம் நின்தன் வாசியால்
உன்னலர் அறிந்தோம் நின்தன் – உண்மையால்
உன்னிப்பு கூடினோம் நின்தன் பார்வையால்
உன்று நின்றோம் நின்னை
– உயர்பு பெற்றோம் நீங்கள் பயிற்றுவித்த வாசி யோகத்தால், பகைவரின் கூற்றறிந்தோம் நீர் உணர்த்திய உண்மையால், அறிவுக் கூர்மை அடைந்தோம் உங்கள் பார்வை பட்ட்துமே, நினைக்கின்றோம் எக்கணமும் உங்களையே.

‘அ’கரக் கவிகள்

1 (1612)

‘அ’கரக் கவிகள்

1. சிவசித்தரே!
அக்கினித்தம்பனை தன்னுள்கொண்ட அகர்நிசமே நின்னை
அக்கதைத் தூவி வணக்குகின்றேன் – அறிவே நீர்
அட்டாவதானி யேநீர் அகளங்கன் தானே
அட்டசித்தி உணர்ந்த அசாத்தியமே.
– எம்பிரானை இரவும் பகலும் உம்முள் கொண்டவரே, உம்மை மஞ்சள் கலந்த முழு அரிசி தூவி வணக்குகின்றேன், ஒரே சமயத்தில் எட்டு வெவ்வேறு செயல்களைக் கவனமாகச் செய்யும் அறிவுச்சுடரே, கலங்கமில்லாதவரே, மற்றவரால் முடியாதது உம்மால் முடியும் அது நீர் உணர்ந்த எண்வகை சித்திகளே.

2. சிவசித்தரே!
ஆழித்தி தடுக்கத தெரிந்த ஆருடனே
ஆரண்யகம் ஆணிவேரல்ல வேநம் – ஆசனமே
ஆசறுதி அதுஇடும் கட்டளையாம் ஆக்ஞை
ஆகிருதி அற்றதே வாசி
– உலகம் அழியக்கூடிய காலத்தில் தோன்றக்கூடிய பெருநெருப்பைத் தடுக்கும் சூட்சுமம் அறிந்த ஜீவமுக்தனே, வேதங்களை விட நம்மை நாமே ஆழமாக உணர உதவுவது நீர் பயிற்றுவிக்கும் ஆசனமே, எங்கள் உடலுக்கு நீர் உணர்த்திய முடிவு எனும் தொடக்கமே, அது உருவமற்ற வாசியே.

3. சிவசித்தரே!
இனனின் றேல்வாசி இன்றேல் உண்மைநீகூற
இன்னில் லாவிடிலும் வாசி – உண்டுகாண்
இறைஞ்சலர்க்கு இறே இறைஞானம் காட்டினீர்
இடங்கமாய் செதுக்கினீர் இந்தியத்தை.
– சூரியன் இல்லையேல் எதுவும் இல்லை என்று யாவரும் கூற வாசி இல்லையேல் எதுவும் இல்லை என்றீரே, வாசி வணக்காதோர்க்கு அவருள் இறைவனை அறியும் அறிவை உணர்த்தி – சிற்பியாய் இருந்து செதுக்கினீர் எம் புலன்களை.

4. சிவசித்தரே!
ஈடேற்றினீரே எம்மை வாசிவழி எனும்பெரு
ஈண்டுநீர் நோக்கி மூடராம் – உறவாம்
ஈனோர் எல்லாம் ஈயினும் தீரவில்லை
ஈனல் செய்தீர் ஈளையை.
– பித்தராம் எங்களை வாசி உணரவைத்து, வழி தவறவிடாமல் உயர்வடையச் செய்யும் சிவசித்தரே, கடலளவு ஈகை செய்தும் இவ்வுலக மக்கள் விடை கிடைக்காத நோயால் கோழையை நீக்கி புதிதாய் பிறப்பித்தீரே!