சிவசித்தரின் பாமாலை|003|

சிவகுருவே சரணம்!

IMG_20150409_062010வாசி வாசி வாசியப்பா!
ஈரெழுத்தாம் வாசியை
நாசி வழியில் ஏற்றி
முழுதாய் சுவாசி வாசியை
உனக்கு என்றும் துணை இருக்கும் சிவகுருவின் ஆசி!

********************************************

அறிவாய், ஆற்றலாய்,
இன்பமாய், ஈகையாய்,
உண்மையாய், ஊழ்வினையாய்,
என்றுமாய், ஏகாந்தமாய்,
ஐஸ்வர்யமாய், ஒளியாய்,
ஓங்காரமாய், ஒளடதமாய்,
அ@துமாகி, எ@துமாகி,
எங்களுள் என்றென்றும் நிறைந்திருக்கும்
உண்மையின் சொரூபனாவனருக்கு
எங்கள் சமர்ப்பணம்!

********************************************