சிவசித்தரின் பாமாலை|002|

சிவசித்தரின் பாமாலை – 01

 

சிவகுரு சிவசித்தரே !!!

    

Copy of Vilvam  (10)எங்களின் எண்ணமும் நீரே !

     எங்களின் செயலும் நீரே !

 

நன்மையும் நீரே !

     நெருப்பும்  நீரே !

 

எங்களின் பயனும் நீரே !

     எங்களின் வினையும் நீரே !

 

ஆதியுமான எங்கள் சிவகுருவே

     நீரே அந்தமும் என அறிவித்தீரே !

 

அனைத்து செயல்களுக்கும் ஆரம்பமும் நீரே !

     அதன் முடிவும் நீரே !

 

எங்களின் நடைமுறை உண்மையும் நீரே !

     அதனை பொய்மையாக்குவதும் நீரே !

 

சக்தியும் நீரே ! சிவனும் நீரே !

 

மொத்தத்தில்

     வாசியோக பக்தனின் முதலும் நீரே !!

                                  முடிவும் நீரே !!

 

சிவசித்தரின் பாமாலை – 02

 

உண்டு அழித்த உடலுடன்
உனை அடைந்தேனே, உன் வாசியால்
ஊனை உருக்கி உயிரற்ற என்
உடலதனை உயிர் கொடுத்து
எனையும் உணர வைத்தாயே வாசியால் !!

 

 

சிவகுரு சேவையில்,

மா.மணிகண்டராஜன்

வாசியோக வில்வம் எண் :  1311001

+918940002685

சிவசித்தரின் பாமாலை|003|

சிவகுருவே சரணம்

அல்லலுற்றவற்கு அரு மருந்தாம் எம் வாசி
ஆற்றலை பெருக்கும் அமிர்தம் எம் வாசி
இன்னலைப் போக்கி இன்பமளிக்கும் எம் வாசி
ஈசனும் சிவசித்தனும் ஒன்றே என உணர்த்திய எம் வாசி
உன்னதம் மந்திரத்தை உணரச் செய்த எம் வாசி
ஊனை உருக்கி உள்ளொளி ஏற்றும் எம் வாசி
என்றும் பதினாறு இளமை அளிக்கும் எம் வாசி
ஏழு ஜென்மத்தின் புண்ணியம் எம் வாசி
ஐந்தெழுத்து மந்திரத்தை அறியச் செய்த எம் வாசி
ஒப்பில்லை இதற்கு இணைத்துக்கூற எம் வாசி
ஓங்காரத்தை என்னுள் உணரச் செய்த எம் வாசி
ஒளஷதம் உடல் பிணியை நீக்கும் எம் வாசி
அக்தே எம் ஆற்றலுக்கு நிகர் வேறு இல்லை என்ற எம் வாசி