சிவசித்தரின் பாமாலை|004|

சிவகுருவே சரணம்

1. கருவைத் தாங்கும் கருப்பையை
நீ சுமக்க மறுக்கிறாய் பெண்ணே
கழிவுகளை நீக்காமல் கருப்பையை நீக்குகிறாய்!
நீ நன்றி மறந்தது போல்
பத்து மாதம் சுமந்து பெற்ற உன்மகன்
உன்னை மறக்கிறான்.

IMG_20150405_062832 - Copy2. முன் ஜென்மத்தின் வினையும் இல்லை
மூத்தோர் செய்த பாவமும் இல்லை
நீ, உண்ணும் உணவே (கழிவு) தான்
உனக்குத் தரும் தீராத் தொல்லை.

3. உண்மையாம் வாசியை உணர்த்திய சிவகுரு
உம்மையே கதியென்று ஓடி வந்த மானிடற்கு
உடல் பிணி தீர்த்து உவகையுடன் வாழச் செய்தீர்
உம் மந்திரத்தில் மனம் தெளிந்து எண்ணம் பெற்று
உன்னதத்தை உணர்ந்து விட்டோம் சிவகுருவே!

*********************