வாசிஉணர்த்தும் அணுபொறியானவன்

 

sivssiththan 2  (29)

மண்ணகத்தே வாழ்ந்து எம் வாசியால்

வாழச் செய்தவன். —————– சிவசித்தன்

 

           எம் வாசிதான் உன்னுடல் இயக்கத்துள்ளும்

           அமைப்புக்கும் ஊன்றுகோல் உண்மைதனை

           உடல் உணர்த்தும். —————-சிவசித்தன்


           எம் வாசியை உண்மையை உணர்த்தும்

           வாசிபரிபூரணன், முறை தவறாமல் கற்பிப்பேன்

           முறையோடு காத்தல் எம் இறைமை. —————-சிவசித்தன்

                                               

           வாசியால் எம் செயல்

           வாசியோடு கலந்து உள்பொருள்

           வாசிஉணர்த்தும் அணுபொறியானவன்

           வாசியான சிவசித்தன் பரந்த

           வாசியில் ஐந்தெழுத்தை உடலாலே உணர்த்தும்

           வாசியின் நெருப்பான சிவசித்தன் யாமே.. —————-சிவசித்தன்

 

**************************************************************************

ஆயுள் வரை சுகம் பெற வாசியை ஏற்று

 

1)    உடல் கழிவால் உடலெல்லாம் அழிந்து உயிர் தன்னை

இழந்தால் உடல் பேரின்பம் இல்லையே. —————-சிவசித்தன்

 

2)    வாசியால் உடல் உணர்ந்த இவ்வின்பத்தை இன்னதென்று

எம்மால் சொல்ல முடியாதது என்பது உண்மை. —————-சிவசித்தன்

 

3)    வாசியோகத்தால் அடையும் இருபெரும் பயன்

கவலை இல்லாமையும், மகிழ்ச்சியும். —————-சிவசித்தன்

 

4)    வெட்டவெளியிலே காணாத கடவுளைக் காட்சியாக

காண்பதும் உன்னுள்ளே நானுமாய் நிற்கும்

காலம் உள்ளதே. —————-சிவசித்தன்