பயனை மட்டும் அனுபவிக்க நினைப்பது ஏனோ?

வணக்கம் சிவகுருவே,

VILVAM (259)

‎குயிலை பிடித்து கூண்டில் அடைத்து பாட சொல்லும்உ லகம்,
‎மயிலை பிடித்து காலை உடைத்து ஆட சொல்லும் உலகம்,
‎சிவசித்தனின் உண்மையையும் உணர்வுகளையும் ஏற்காது அவன் கலையை கற்றுத்தர சொல்லும் உலகம்.
இயற்கையின் இயல்பதுவே,
இயல்பாய் உணர்ந்த உணர்வை,
அழகாய் குரல் கொண்டு, நடனம் கொண்டு, மொழி கொண்டு
உயிரினங்கள் வெளிப்படுத்துமே!

மனிதன் அவன் மன எண்ணம் கொண்டு இயற்கை இயல்பை மாற்றி,
‎சுய நலம் மட்டும் மனதில் கொண்டு,
பணம், செல்வன், சிற்றறிவு கொண்டு இயற்கையைத் துன்புறுத்தி தன் தேவையைத் தனிக்கிறானே,
அங்கு இயற்கை மேல்
‎அன்பு இல்லை,
‎அக்கறை இல்லை,
‎பணிவு இல்லை,
‎நன்றிக்கடன் இல்லை,
தொலைநோக்கு பார்வை இல்லை,

எனக்கு என்ன வேண்டும்?
அது கிடைக்க என்ன வழி?
யாரைப் பயன்படுத்தலாம்?
என்ற சிந்தனை மட்டுமே உள்ளது!

சிவசித்தன் அவன் அக உண்மை அன்பு உணர்ந்தால்,
மனிதனுக்கு எந்தத் துயரமும் இல்லை என்பதற்காக,
தன் கலையின் மூலம்
இறை உணர்வு உணர்த்தி,
வெற்றிடமான அகம் படைத்து,
இயற்கை உணர்வுகளை இயல்பாய் உணர்த்தியே!
நோய் அற்ற,
கவலை அற்ற,
உண்மை அன்பு நிறைந்த,
இயற்கையை உணர்ந்து,
‎மதித்து,
‎பணிந்து ,
‎யாசிக்க பழகி
‎பொது நலம் கொண்டு,
வருங்கால சந்ததியை கருத்தில் கொண்டு,
எல்லா உயிரின் உண்மை தேவையை உணர்ந்தே வாழும் வாழ்வைக் கொடுத்தானே!

அவன் வாழ்வின் உண்மையை ஏற்காத இவ்வுலகம்,
தனக்கு அவன் படைத்த கலையின் பயனை மட்டும் அனுபவிக்க
நினைப்பது ஏனோ?

குயிலை பிடித்து கூண்டில் அடைத்து பாட சொல்லும் உலகம்
மயிலை பிடித்து காலை உடைத்து ஆட சொல்லும் உலகம்
சிவசித்தனின் உண்மையை உணர்வை ‎உதாசினம் செய்து,
உண்மைக் கலை அவர்அவர் நலம் அதைக்கருத்தில் கொண்டும்,
சிவசித்தன் ‎அகவலியை மறந்தும் கலையை கற்றுத்தர சொல்லும் இவ்வுலகம்!

‎நன்றி சிவசித்தனே!

Vaasi Yogam July 03, 2014 at 10:31AM

DSC00750

19 ம் ஆண்டின் தொடக்கம் மதுரை சிவசித்தன் வாசியோகம்
*********************************************************************************
19 ம் ஆண்டின் தொடக்கம் இன்று ( 26.06.2014) வாசியோகம் செய்யும் அனைத்து வாசியோக அன்பர்களுக்கும், இனி புதியதாய் சேர இருக்கும் அனைத்து அன்பர்களுக்கும்,என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.
*************************************************
வாசியோக செய்து உடல் உண்மையை உணர்வாக சொல்லும் உண்மை நிலையை,உலகம் எங்கும் மதுரை வாசியோகத்தின் உண்மையின் வெளிப்பாட்டையும்,

உடல் உண்மைகள்,உடல் பேரின்பம் ,உடல் நலம் பெற்று இறையொளி உணர்வோடு இறப்பை எய்தும் நிலையை அனைவரும் அறிய செய்திட வேண்டும்———–சிவசித்தன்