சிவசித்தனின் படைப்புலகத்தில்…..

சிவசித்தனின் படைப்புலகத்தில்…..

 656

  • நோய் என்பது இல்லை………

சிவசித்தனின் படைப்புலகத்தில்.

 

உடலில் தேங்கும் கழிவுகளே

உடலின் உபாதைகள்.

 

கழிவுகள் மனித உடலை ரணமாக்குகிறது

கண்டதையும் தின்று நடைபிணமாகிறான் மனிதன்.

 

சிவசித்தனின்….

வாசியோகம் கழிவுகளை அகற்றுகிறது

உணவுமுறைகள் உபாதைகளைத் தீர்க்கிறது

 

எனவே

நோய் என்பது இல்லை………

சிவசித்தனின் படைப்புலகத்தில்.

 

  • ஆசை என்பது இல்லை….

சிவசித்தனின் படைப்புலகத்தில்.

 

மனதில் ஏங்கும் எண்ணங்களே

மனதின் தீராபிரச்னைகள்.

 

ஆசைஎண்ணங்கள் மனிதனை ஆட்டுவிக்கின்றன.

நீளும் ஆசையில் சுயம் தொலைக்கிறான் மனிதன்

 

சிவசித்தனின்….

வாசியோகம் எண்ணங்களை சீர்செய்கிறது

சிவகுருமந்திரம் பிரச்சனைகளை தீர்க்கிறது.

 

எனவே

ஆசை என்பது இல்லை…

சிவசித்தனின் படைப்புலகத்தில்.

 

  • கடவுள் அப்பாற்பட்டவர் என்பது இல்லை….

சிவசித்தனின் படைப்புலகத்தில்.

 

அகத்தில் இருக்கும் அறியாமையே

அகமறிய தடைகல்.

 

இறைதேடி அலைபாய்கிறது மனதுவீணே

இருக்கும் இடத்தை உணரமறுக்கிறான் மனிதன்.

 

சிவசித்தனின்….

வாசியோகம் கடவுளை அறியச்செய்யும்

உண்மையாக இருந்தால் தடைகல்லை அகற்றும்.

 

எனவே

கடவுள் அப்பாற்பட்டவர் என்பது இல்லை….

சிவசித்தனின் படைப்புலகத்தில்.

 

சிவகுருவின் பக்தை,

                                                           த.பூர்ணிமாய்

                                     வாசியோக வில்வம் எண் : 12 09 108