சிவசித்தரின் பாமாலை|003|

சிவகுருவே சரணம்

அல்லலுற்றவற்கு அரு மருந்தாம் எம் வாசி
ஆற்றலை பெருக்கும் அமிர்தம் எம் வாசி
இன்னலைப் போக்கி இன்பமளிக்கும் எம் வாசி
ஈசனும் சிவசித்தனும் ஒன்றே என உணர்த்திய எம் வாசி
உன்னதம் மந்திரத்தை உணரச் செய்த எம் வாசி
ஊனை உருக்கி உள்ளொளி ஏற்றும் எம் வாசி
என்றும் பதினாறு இளமை அளிக்கும் எம் வாசி
ஏழு ஜென்மத்தின் புண்ணியம் எம் வாசி
ஐந்தெழுத்து மந்திரத்தை அறியச் செய்த எம் வாசி
ஒப்பில்லை இதற்கு இணைத்துக்கூற எம் வாசி
ஓங்காரத்தை என்னுள் உணரச் செய்த எம் வாசி
ஒளஷதம் உடல் பிணியை நீக்கும் எம் வாசி
அக்தே எம் ஆற்றலுக்கு நிகர் வேறு இல்லை என்ற எம் வாசி

‘ன’ கரக் கவிகள்

சிவசித்தரே!
அனந்தனே அலைம் அன்னவரே நீரே
அன்பனுக்கு வாசி அன்வயி – கொடுக்க
அன்னம் ருசித்த்து நோவு மடிந்தது
அனுக்கிரகம் கிட்டியது நின்னால்
– முடிவில்லாத நிலைத்த தன்மை கொண்ட நெருப்பே நீர் சிவசித்தரே, பக்தர்களாகிய எங்களுக்கு வாசி எனும் அருமருந்தை தொடர்ந்து நீர் கொடுக்க, சாப்பிட முடியாமல் இருந்தோர் கூட ருசித்து சாப்பிட்டு நோய்களை விரட்டி தங்கள் அனுக்கிரகத்தால் நீடீழி வாழ்கின்றனரே

sivssiththan 2  (15)சிவசித்தரே!
ஆன்ம தரிசனம் உடல் சார்ந்ததல்ல
ஆன்மா சார்பு பெற்றதென – உணர்த்திய
ஆன்ற மைந்த வள்ளலே ஆனந்தம்
ஆன்றவர் மூலம் கிட்டியதே
– தன்னை உணரும் அறிவு என்பது வெறும் உடல் சார்ந்த விஷயமல்ல, அது உயிர் சார்ந்ததென்று உணர்த்திய நீர் குணந்தாலும், கல்வியாலும் நிறைந்த காரணத்தாலேயே அடக்கத்தோடு இருக்கும் நபரே.. உங்கள் அறிவுச் சுடரால் நாங்கள் பேரின்பம் அடைகிறோம்.

சிவசித்தரே!
இனிமை கூடுமே வாசி உணர்ந்தால்
இன்னே சேர்ந்திடு உண்மை – இழக்காதே
இனை செய் நோயெனும் பேயை
இனிய சிவகுரு சிவசித்தராலே.
– வாசியோகம் செய்வோரும் துன்பம் வரும் போதெல்லாம் அதை எளிதில் தீர்ப்பர், சேராதவர் இன்றே சேர்ந்தால், அவர்கள் இழந்து கொண்டுருக்கும் உண்மை காக்கப்படும், எத்தகைய நோயையும் அழித்து விடலாம், இனிமை குணம் கொண்ட சிவசித்தரால்

சிவசித்தரே!
ஈனல் ஒன்று உண்டெங்கில் இறப்பும்
ஈனுமே அப்விறப்பு இருத்தல் – கூடாதே
ஈனமாய் ஐக்கிய மாகிடு சிவசித்தர் பால்
ஈனோல் காக்கப் படுவரே.
– பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்பதும் கட்டாயம் உண்டு, அந்த இறப்பினை இழிவானதாக இருக்கக் கூடாது என்பதால் சிவசித்தரிடம் விரைவாய் சேர்ந்திடு.. உலக மக்கள் அனைவரையும் அவர் காப்பாரே.

சிவசித்தரே!
உன்னதம் பெற்றோம் நின்தன் வாசியால்
உன்னலர் அறிந்தோம் நின்தன் – உண்மையால்
உன்னிப்பு கூடினோம் நின்தன் பார்வையால்
உன்று நின்றோம் நின்னை
– உயர்பு பெற்றோம் நீங்கள் பயிற்றுவித்த வாசி யோகத்தால், பகைவரின் கூற்றறிந்தோம் நீர் உணர்த்திய உண்மையால், அறிவுக் கூர்மை அடைந்தோம் உங்கள் பார்வை பட்ட்துமே, நினைக்கின்றோம் எக்கணமும் உங்களையே.