சிவசித்தரின் பாமாலை|008|

சிவகுருவே சரணம்

DSC07939விடியலைக் காட்டும் கதிரவன்போல்
சிந்தமணிச் சிவசூரியனின்
சிறுபார்வை என்மேல் பட்டால்
என் அக இருள் நீங்கி
அறிவு ஒளி பிரகாசிக்கும்
சிவசித்தனே, உன்நெற்றிக்கண்
திறப்பினும், புடம் போட்ட
பொன்னாய் மின்னுவேன்
உலகத்திற்கு ஒளிதரும்
ஆதவனும் ஒன்றே
இருளில் ஒளி தரும்
சந்திரனும் ஒன்றே
நோயால் நலிவிற்றவர்க்கு
நலம் தரும் சிவசித்தனும்
ஒருவரே.
மானிடஉயிருக்கு ஒளியூட்டும்,
வாசியும் ஒன்றே
சிவசித்தனின் உண்மை, உணராதவன்
கண்ணிருந்தும் குருடனே.
மெய்யிருந்தும் முடவனே
அறிவிருந்தும் மூடனே
சிவகுருவே, உம்மை உணர்ந்தவன்
உலகிலே உயர்ந்த உத்தமனாவான்.