நாம் பிறரிடம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை சிந்தித்தது உண்டோ?

வணக்கம் சிவகுருசிவசித்தனே!
‎உங்கள் பிள்ளைகள் பொறுமையாய் வாழ ‎

தாய் பொறுமையை கடைபிடித்து வாழவேண்டும்.

20131212_135548

பிறர் நம் இடம்
பொறுமையுடன் நடக்கவேண்டும்
என்று எதிர்பார்ப்பது உண்டு!
ஆனால்
நாம் பிறரிடம்
எவ்வாறு செயல்படுகிறோம்
என்பதை சிந்தித்தது உண்டோ?

பிற ஜீவராசிகள்
போலவே
பெற்றோர் பழக்கவழக்கத்தை
உள்வாங்கி நடப்பது உண்டு,
இவ்வாறு இருக்க
பிள்ளைகள்
எவ்வாறு இருக்கவேண்டும்,
கணவர்
எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்
என்ற எதிர்பார்ப்பு
வைப்பதற்க்கு பதிலாக,

அவர்கள்
உங்களிடம் எவ்வாறு பழகவேண்டும்
என்று எண்ணுகிறீர்களோ
அவ்வாறு
உங்கள் இயல்பை
மாற்றி
நீங்கள் செயல்படுங்கள்.

எடுத்துக்காட்டாக,
நீங்கள் பேசும்போது
பிறர் முழுமையாக கவனிக்கவேண்டும்
என்று
எதிர்பார்கிறீர்கள்
என்றால். பிறர் பேசும்பொழுது
நீங்கள்
எண்ணம் அற்றநிலையில்
பிறர் பேசுவதை கவனிக்கவேண்டும்.
உங்களை
பார்த்து அவர்களும்
கற்றுக்கொள்ளும் சூழல் உருவாகும்!
பெண்கள் பொறுமையை
கடைபிடித்து வாழ்ந்தால்,
பிள்ளைகளும், கணவரும்
அதை பின்பற்ற முயல்வர்!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

சிவசித்தனால், உன்வாழ்வெனும் வாசியை…

சிவசித்தனின் வாசி. . . . . . .

 

#Sivasithan (22)

வாசி வெளிக்கொணரும் உன்னில்உள்ள வாசியை

(திறமை முதியவற்றில் வேறுபாடு)

வாசி மாற்றியமைக்கும் உன் வாசியை (இயல்பை)

வாசி புரியவைக்கும் உன் வாசியை (தனித்தன்மையை)

வாசி மேம்படுத்தும் உன் வாசியை (தகுதியை)

வாசி அடக்கும் உன் மனம் எனும் வாசியை (குதிரை)

வாசி உடலை லேசாக்கும் வாசியின் சிறகுபோல (பறவை)

வாசி கற்றால் தெரிந்துகொள்வாய் வாசியை (நியாயம்)

வாசி உனைகொண்டுசெல்லும் வாசிக்கு (நல்ல நிலைமை)

வாசி சிவசித்தனால், உன்வாழ்வெனும் வாசியை (இசைக்குழலை)

வாசிக்கும் இனிமையாய் (ஒலிக்கச் செய்யும்).

 

 

கையில் கிடைத்த சிந்தாமணி

 

சிவசித்தனே!

 

சிந்தாமணியில் தோன்றிய சிந்தாமணி நீ!

அரிதிலும் அரிதாய் கையில் கிடைத்தும் நீ,

 

அறிகிலர் இல்லை கிடைத்தற்கரிய நீ

உண்மையான சிந்தாமணி என நீ!

 

ஏ மனமே!

 

உண்மை அறியாமல் பொய்நாடும் நீ,

அவ்வளவு எளிதில் கிடைக்குமோ சிந்தாம நீ!

நமக்கென என நம்பமனம் மயங்குதோ? – நீ

விழித்துக்கொள், மனமே இன்றாவது நீ!

 

சிவசித்தன் என்றொரு நாமமுண்டு, நீ

கண்டுகொண்ட சிந்தாமணிக்கு என நீ

உணர்வாயா, விரைவில் நீ!

 

(சிந்தாமணி – பொருள்:

‘விரும்பியதை தரவல்ல தெய்வீக ரத்தினக்கல்’)

 சிவகுரு பக்தை ,

த.இரா.பூர்ணிமாய்,

வாசியோக வில்வம் எண்: 12 09 108