சிவசித்தரின் பாமாலை|001|

சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்

 

இயற்கையே தண்டிக்கும்

 

பொன்னுடல் தந்தனர் பெற்றவர் உமக்கு

புன்னுடல் ஆக்கினீர் உம்செயலால் உமக்கே

நன்னுடல் பேணிட நாடியே வந்தனீர்

நாடியைத் தொட்டதும் நல்வினை வந்தது

சிவசித்தர் வாசியுன் நாசியில் புகுந்ததே

சீவனின் உள்ளொளி உண்மையா யுரைந்ததே

கெடுமதி எங்ஙனம் எவ்வழி நுழைந்ததோ

கெட்டபின் வந்திடின் மீட்டிட இயலுமோ

கொஞ்சிடும் தாயிவன் கொட்டிடும்

கொழுப்பினை இழந்திடின் கேடது மறையுமே

உன்னடி பற்றியே பல்லுயிர் இருப்பதை

உணரப்பா உண்மையின் அருளிங்கு சேரும்

ஒருதரம் உனக்கந்த ஒளியினி அருளுமே

மருளுடன் கூடினால் ஒருத்தலும் மறையுமே.

 

என்றும் சிவகுருவின் பக்தன் ,

என். அசோக்குமார்

வி.எண்: 10 10 001