சிவசித்தனின் வாசி. . . . . . .
வாசி வெளிக்கொணரும் உன்னில்உள்ள வாசியை
(திறமை முதியவற்றில் வேறுபாடு)
வாசி மாற்றியமைக்கும் உன் வாசியை (இயல்பை)
வாசி புரியவைக்கும் உன் வாசியை (தனித்தன்மையை)
வாசி மேம்படுத்தும் உன் வாசியை (தகுதியை)
வாசி அடக்கும் உன் மனம் எனும் வாசியை (குதிரை)
வாசி உடலை லேசாக்கும் வாசியின் சிறகுபோல (பறவை)
வாசி கற்றால் தெரிந்துகொள்வாய் வாசியை (நியாயம்)
வாசி உனைகொண்டுசெல்லும் வாசிக்கு (நல்ல நிலைமை)
வாசி சிவசித்தனால், உன்வாழ்வெனும் வாசியை (இசைக்குழலை)
வாசிக்கும் இனிமையாய் (ஒலிக்கச் செய்யும்).
கையில் கிடைத்த சிந்தாமணி
சிவசித்தனே!
சிந்தாமணியில் தோன்றிய சிந்தாமணி நீ!
அரிதிலும் அரிதாய் கையில் கிடைத்தும் நீ,
அறிகிலர் இல்லை கிடைத்தற்கரிய நீ
உண்மையான சிந்தாமணி என நீ!
ஏ மனமே!
உண்மை அறியாமல் பொய்நாடும் நீ,
அவ்வளவு எளிதில் கிடைக்குமோ சிந்தாம நீ!
நமக்கென என நம்பமனம் மயங்குதோ? – நீ
விழித்துக்கொள், மனமே இன்றாவது நீ!
சிவசித்தன் என்றொரு நாமமுண்டு, நீ
கண்டுகொண்ட சிந்தாமணிக்கு என நீ
உணர்வாயா, விரைவில் நீ!
(சிந்தாமணி – பொருள்:
‘விரும்பியதை தரவல்ல தெய்வீக ரத்தினக்கல்’)
சிவகுரு பக்தை ,
த.இரா.பூர்ணிமாய்,
வாசியோக வில்வம் எண்: 12 09 108