அவன் அன்றி பிறர் சொல் எனக்கு எதிர்மறை எண்ணமே!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!
‎எதிர்மறை எண்ணம் அகத்தில் இருந்து எதிர்கொள் – 002

DSC02265

சிவசித்தன்,
அகம்
அதில் இருக்க,
சிவகுருவாய்
அவன் நெறிப்படுத்த
இருக்க!

உடனடியாக,
மாயையின்
பிடியை விட்டு,
அவன் சொல்லை
வாக்காய் எண்ணி!
அவனை
பின் தொடர்ந்து
சென்றாலே உணர்வாய்
மாயையின் வழியில்
சிக்குண்டதை!

‎உண்மைஅன்பு
உணர்ந்து
‎இறை உணர்ந்து
வாழ சிவசித்தன்
அகம்
அதில் நிலைநிறுத்து,
எதிர்மறை எண்ணம்
அதைக் கண்ட
நொடிப் பொழுதே,
அதை உள் விடாது
அழித்திட வேண்டும்!
அக வலிமை கொண்டு
எதிர்கொள்ள வேண்டும்!!!

என் உண்மையை
உணர்ந்தவன்
சிவசித்தனே,
வேறு எவரும் இல்லை,
இவ்வாறு இருக்க,
அவன் அன்றி
பிறர் சொல்
எனக்கு
எதிர்மறை எண்ணமே!
தன்னை
உணராதவன்
எதிர்மறை எண்ணமே
படைப்பான்!
படைத்தவனே
உண்மையும் அன்பும்
கொண்ட அகஉயிர்
ஆன்மா நல்வழி
பயணிக்க
வழிவகுக்கும் எண்ணம்
படைக்க இயலும்!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

Sivasithan Vaasiyogam July 07, 2014 at 01:20PM

வாசியோகக் கலையை செம்மையாக செவ்வனே செயல்பட வைக்க சிவகுரு சிவசித்தர் ஒருவரால் மட்டுமே முடியும். சிவகுரு சிவசித்தர் மனிதர்கள் மற்றும் உயிர்கள் மேலுள்ள அன்பினால், அவர்கள் படும் கஷ்டங்களைப் வாசியோகப் பயிற்சிகள் மூலம் குணப்படுத்துகிறார் (நீக்குகிறார்). அனைவருக்கும் ஏற்படும் சந்தேகம் ஒன்று உண்டு, வாசியோகத்தால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியுமா? கண்டிப்பாக முடியும்.சிவகுரு சிவசித்தரிடம் வாசியோகம் தனை முழுமையாக கற்றோமானால் நம் உடலில் உள்ள கழிவுகள் முழுமையாக நீக்கப்பட்டு, நம் உடலைப்பற்றிய அனைத்தும் தெளிவாய் அறியப்பட்டு, சிந்தனைத் திறன் மேம்படுவதையும் உணரலாம். அவ்வாறு நமது உடல், உள்ளம், ஆன்மா என அனைத்திலும் சிவகுரு சிவசித்தர் செயல்பட ஆரம்பிக்கும் போது, நம்மைச் சுற்றியும் ஒரு நேர்மறையான ஆற்றல் பரவுவதை உணரலாம்.

சிவசித்தரின் பாமாலை|001|

சிவகுருவே சரணம்

எட்டெட்டு அகவையிலே
எழுதுகிறேன் என் உள்எண்ணமதை
ஓரெட் டெடுக்க இயலாத முடமாகி
தவழ்ந்தேன் நாற்காலில்
இருகாலும் புண்ணாகி முன்னொருகால்

கர்ம வினையோ
செய் வினையோ
எவரெவர் இட்ட சாபமோ
ஏழரைச் சனியின் ஏவலோ
எம்மாதின் கும்பி கொதிப்போ
என்றென்னை கண்மறைந் தேளனம் செய்தனர்.

அங்கமெல்லாம் நொந்து புண்ணாகி
மெய்யெல்லாம் (துர்)நீர் வடியத்
துவண்ட எனை எமனவனும் துரத்த
நம்பி வந்தேன் எம் சிவகுரு
சிவகுரு சிவசித்தரே சரணமென்று
தஞ்ச மடைந்தேன் சிவஒளித் திருத்தலம் தனை

காலால் தாங்கினார்
காலை உணர்த்தினார்
‘கரி’ காலனாய் வந்த என்னை
பொன் காலனாய் மாற்றினார்
பொன், மண், பெண் மூவாசை போக்கினார்
பலரைத்தொழும் புண்ணியனாய் ஆக்கினார்
வேலா யுதனாய் காலனையும் விரட்டினர்
ஆதலின்,
சிவகுருவே என் நாடி
சிவகுருவே என் சுவாசம்
சிவகுருவே என் நரம்பு
சிவகுருவே என் குருதியோட்டம்
சிவகுருவே என் ஆன்மா
சிவகுருவே என் பரமான்மா
சிவகுருவே நட்சத்திரங்கள், நவகோள்கள்
சிவகுருவே சூரிய, சந்திரர்
சிவகுருவே பிரபஞ்சம்
சிவகுருவே என் ஈசன், என் இறை.
சகலமும் சிவகுரு சிவசித்தரே
சர்வமும் சிவகுரு சிவசித்தரே
அனைத்தும் சிவகுரு சிவசித்தருள் அடக்கம்.

குரு வழிபாடு தேவையா?
குருவின் பாதம் தொடலாமா?
குருவும் இறையும் ஒன்றா?
என்பவருக்கு,
சிவகுரு சிவசித்தரின் வாசியோகம் பயின்று பார்!
சிவகுரு சிவசித்தரை உணர்ந்து பார்!
உயிரற்ற ஊனுடலில் வாசியேற்றிப் பார்!
சிவபரவொளி நெருப்பாற்றல் சக்தியை சரணடைந்துப் பார்!
குரு வென்பாரெல்லாம் உணர்த்தவில்லை
உணர்த்துபவரே, பாமரனையும் உயர்த்துபவரே
ஒரு நாமமாய், ஓருருவாய்
ஓரிறையாய்
உன்னுள் உறைவார்! உணர்ந்துப் பார்!
****************************************************
M.G.கல்யாண சுந்தரம்
வி.எண்: 11 02 001

சிவசித்தரின் பாமாலை|001|

சிவகுருவே சரணம்
சிவகுருவே,
அண்டமும் பிண்டமும் ஒன்று என்றாய்,
அரியும் சிவனும் ஒன்று என்றாய்,
எண்ணமும் செயலும் ஒன்று என்றாய்,
வாசியும் வட்டமும் ஒன்று என்றாய்,
அனைத்தும் தானாகி ஒளியாகி நின்றாய்,
உணர்ந்தவனுக்கு “ஒளியாகினாய்”
உணராதவனுக்கு “நெருப்பாகினாய்”

2 சரணடை மனமே சிவகுருசிவசித்தரை – சரணடை மனமே,
ஆசை ஒழியும் ஆணவம் அழியும்,
பேசா மொழியும் (வாசி) நீ அறிவாய்
ஆன்மா சக்தியும் நீ உணர்வாய்
இயற்கையும் இறைவனும் – உன்னுள் ஒளியாய்

3 உணவால் அழிந்தோம்
எண்ணத்தில் மடிந்தோம்,
சிவகுருவே,
உங்களின் வாசியால், உயிர் பெற்றோம்.

4 ஆதி குருவான, எங்கள் சிவகுருவே
அனைத்து ஆன்மாவிற்கும் தந்தையானவரே
உன் அக ஆற்றலை உணர்த்துபவரே
பர – தத்துவத்தை உணர்த்தும் பரம்பொருளே,
தன்னுள் தன்னை மறைத்து வைத்திருக்கும் – பேரொளியே
சிவனாய் நின்று – சிவத்தொண்டு புரியும் – சிவநேசனாரே!

***************************

K.B. சுபாஷினி
வி.எண்: 13 02 1௦6