உயிர்களின் உண்மை அன்பின் திருஉருவம் சிவசித்தன்!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!

#Sivasithan (28)

‎மனித எண்ணம்
அது உணர்வினைச் சார்ந்து
அலைபாயுமே
பயம்,
கோவம், குரோதம்
உணர்வுகள் நல்எண்ணம்
வளர்ந்தாலும்,
அதை அழிக்கும்
எதிர்எண்ணம் படைக்குமே.
பிறப்பினால்
ஆனந்தம் கொள்ளும்,
இறப்பை கண்டு அஞ்சுமே!

வளர்ச்சியால் வரும் வெற்றி கண்டு
பெருமைக் கொள்ளும் நெஞ்சம்,
தோல்வி வந்து விடுமோ என்ற
பயம் கொண்டே
எண்ணம் படைக்குமே!

இன்பம், துன்பம் ,
நன்மை, தீமை

இவைகள் அனைத்தும்
மனித உலகின்
எண்ணங்களே!

சிவசித்தன்
அவன் வெற்றிடமே,
அங்கு
எல்லை இல்லா
அன்பு நிறைந்து இருக்குமே!
அனைத்து உயிர்களின்
உண்மை அன்பின்
வெற்றிடமே சிவசித்தன்
இயக்க செயல்படுமே!
‎நன்றி சிவகுருசிவசித்தனே!

பணம் :

பணம் :

 084

 • பணம் சேர்ப்பது உன் உடல் அணுவை அழிப்பதற்கு சமம்.
 • அளவோடு உண்ணும் உணவே உண்மையை அறியச் செய்யும்.
 • அளவோடு சேர்க்கும் பணமே உன் வாழ்வை பெருக்கும்.

 

 • பணமே உன் ஒழுக்கத்தை அழிக்கும். சிவகுருவின் வாசியே உன் ஒழுக்கத்தை நிலைநிறுத்தும்.
 • வாசி அறியாமல் உன் உடல் உயிர் பெறாது. உடல் உயிர் பெறுவது வாசியாலே! பணத்தால் அல்ல.
 • இறக்கும்போது உடல் அறிவது வாசி. வாசியால் இறக்கும்போது மனநிறைவு பெறுவது இறைவனின் உணர்வே.

 

 • இறக்கும்போது உடல் அழிவது பணத்தாலே. நீ உண்ணும் உணவாலும், நீ சேர்த்த பணத்தாலும், இவையாவும் இல்லாத ஒழுக்கத்தால்.
 • இறப்பின் ஆனந்தம் உணர்வது வாசி, பணத்தால் அல்ல. சிவகுரு வார்த்தை கோடி நன்மை. நீ சேர்க்கும் பணத்தால் கோடானகோடி அணு உன் உடலில் அழியும்.

 

 • பணத்தை அழிப்பது பணமே. அழியாமல் இருக்கும் வாசியை உன் உடலில் ஏற்றடா!
 • பர ஒளி காண உடல் தேவை. உடல் உயிர் பெற வாசி தேவை.
 • உடலை அழிப்பது பணம். உறவை கெடுப்பது பணம். அணுவை அறிந்தால் அழிவது ஏது!

 

 • பணம் சேர்த்து உன் உடல் அழிவது பாவமே. அப்பணத்தால் மற்றவரை அழிப்பதும் பெரியபாவம்.
 • உடல் வாழ்வு பணத்தால் அல்ல. உள்ளத்தின் இறைவனை அறிவதும் பணத்தால் அல்ல. உன் உடல்நலம் பெறுவது பணத்தால் அல்ல.

 

 • கோயிலுக்கு செலவழிக்கும் பணமே உன் உண்மையை அறியும். உண்மை பணமே உன்னை உயர்த்தும்.