சிவசித்தன் வாசியோகம்: பெற்ற தாயும், தந்தையும் உணர்த்தவில்லை!

சிவகுரு சிவசித்தர் ஆசியால்,

 

20140603_052931அளவில்லா ஆசை கொண்டோம்

உணவில், உறவில் கிட்டவில்லை பிறவி முக்தி!

அளவோடு ஒழுக்க உணவு நெறியோடு

சிவசித்தரின் வாசியை உள்ளேற்றினோம்!

தானாய் கிட்டியது உண்மையின் உருவில்!

உடல் உள்ளே கண்ட உண்மையை சேர்த்த பணமும் உணர்த்தவில்லை!

பெற்ற தாயும், தந்தையும் உணர்த்தவில்லை!

உண்மையாளன் சிவசித்தனின் வாசியேற்றி

பெற்ற உணர்ந்த உண்மை உன்னதம் உரைப்பேன்

என் பிறவிப்பணி முடியும் வரை!

வாசியே உன் உண்மை உரைக்க

உண்மையான உள்ளம் மேலும் வேண்டுகின்றேன்…..

 

****

 

சிவகுரு சிவசித்தர் ஆசியால்,

 

பொய்யாடா இந்த சொந்தம் பந்தம்!

மெய்யடா உன் உடல், உடல் தரித்த உன் உயிர்!

உள்ளே அகமனன் அற்புதமாய் அழகாய்

ஆனந்தமாய் ஆடிக் கொண்டிருக்கின்றான்

வாசிக்காற்று உள் சென்றவுடன்.!

கிட்டாத பேரானந்தம் இனி ஒரு

பிறவி இருப்பின் வாசியின் மாணவனாய்

எம் சிவசித்தரின் உண்மை பக்தனாய்

இருக்கவே விரும்புகின்றேன்!

ஆன்மாவே என் எண்ணத்தை உள் மனதில்

ஆழமாய் வைத்துவிட்டேன்

ஈடேற எம் சிவசித்தரின் அருள் வேண்டி

காத்திருக்கின்றேன்…..

கிட்டுமா இந்த பரமானந்த நிலை?

 

 

வாசியோக பக்தன்

ர.சுந்தர்

வாசியோக வில்வம் எண் :  13 09 205

சின்னமனூர்.தேனி மாவட்டம்.