சிவசித்தரின் பாமாலை|005|

சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்

 

sivssiththan 2  (2)பேராசைப் பெருங்கடலில் மனமதனை மூழ்கவிட்டு

எச்செயலிலும் மனநிறைவு கொள்ளாமல், பணமிருந்தும்

மனம்தன்னில் அமைதியில்லாமல் அலைகின்ற

மாந்தர்களே ! சிவகுரு சிவசித்தன் செப்பி வைத்த

மந்திரத்தை அவர் வகுத்த வழிசென்று உள்ளுள்ளே

ஓதிவந்தால் ஓலமிடும் மனமதுவும் ஒருமை நிலை

அடைந்து ! ஓம்காரத்தை உணர்ந்திடுமே !

 

**********************

 

சிவகுரு சிவசித்தன் வாசிகலையாலே உடலில்

மடிந்த அணுவும் மறுஉயிர் பெற்று

ஜனனம் எடுக்குதப்பா ! புதுப்புது அணுக்கள்

உருவாகி உடலது புத்துணர்வு பிறக்குதப்பா !

உள்ளமதுவும் தூய்மைபெற்று ஆதியதை அறியுதப்பா !

ஆழ்அகம் அதுவும் ஆத்மஅமைதி பெறுகுதப்பா !

 

**********************

 

மனிதனின் சிந்தையிலே சிந்தனைகள் பலவாறு

தோன்றி அதுவே பல்வேறு வடிவங்களாக வடிவெடுத்து

ஆழ்மனதின் அமைதியினை அடியோடு உருக்குலைத்து

தீய எண்ணங்களை நினைக்க வைக்கிறது !

இத்தகைய எதிர்மறை எண்ணத்தை அடியோடு

ஒழித்து ஆழ்மனதிற்கு அமைதிதரும் அற்புதக்

கலையே சிவகுரு சிவசித்தனின் வாசிகலையாகும் !

 

**********************

 

இறைவனின் சக்தியாய் குருவும், குருவினுள்

இறைவனும் இரண்டெனக் கலந்திருப்பதை

சிவகுரு சிவசித்தரின் வாசிகலை பயின்றவர்கள்

அறிவர், சிவகுருவடிவில் சிவனருள் தன்னை

அகக்கண்ணில் கண்டிடலாம், சிவகுருநாதர் அருளிய

மந்திரத்தை ஆழ்மனதில் ஓதும்போது, ஓம்கார

ஒளியதுவே உள்ளுள்ளே ஒளிவிடுமே !

 

**********************

 

ஆதியின்றி அந்தமின்றி உருவமற்று அருவமான

நீக்கமற நிறைந்திருக்கும் நித்திய தெய்வமதனை

பிண்டமதில் அறிய வைத்து, அண்டமதின்

சூட்சுமத்தை அறிய வைத்து, ஆதியதை அறிந்தவரே

எமைக் காக்கும் சிவகுரு சிவசித்தனே !

உம் திருத்தாழைப் பணிகின்றேனே !

 

சிவகுருவின் பக்தன்

 – ம. சண்முக பாண்டியன்,

 சிந்தாமணி,மதுரை.