மூன்றணுவால் தேகஅக முக்தி

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

சில காலம் வாழும் தேகத்தே
பல காலம் வாழும் உண்மை
ஆன்மா உள்ளதே!

அறிந்துணர் அகத்தை
அதிலே ஆத்மனனை உணர்!

உணர்ந்திட உண்மையாய் இரு
உண்மையாய் இருக்க உண்மை
சிவசித்தனின் வாசியோகத்தை இழு!

வலியில்லா அகமே
ஆத்மனன் அமைதி கொள்ளும் அகமே!

மெய்தவமது வாசியே!
மெலிவதுதான் மெய்வாசியே!
மெய்யுணர்வதுதான் சிவசித்தன் வாசியே!

ஒர் அணு வாசியால் உயிருணர்ந்தோம்.

இருஅணு வாசியால் அகத்தே
ஆத்மனனை அனுபவித்து உணர்ந்தோம்.

மூன்றணுவால் தேகஅக முக்தி தந்து
மூலத்தின் முதல் அணுவாய்
எம்முள் இருந்து வழிநடத்துகிறான்
சிவசித்தனே!

அணு படைத்த அவனாலே
எம் அணு காக்க முடியும்.

அனைத்தும் அவனே!
ஆதியும் அவனே!

சிவசித்தனே உண்மை வாசியே மெய்!

சிவசித்தனே துணை!

நன்றி சிவசித்தனே!!!

அழிவதும் அழிப்பதும் உணவே!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

நாவை அடக்காதவனால்
” நா” னை அழிக்கமுடியாது.

அழிவதும் அழிப்பதும் உணவே!

அறிவதும் அழுதமும் சிவசித்தனின் வாசியையே!
அழகும் அறிவும் சிவசித்தனே!
அற்புதமும் அரவமும் சிவசித்தனே!
அகமும் அன்பும் சிவசித்தனே!
ஆதியும் அந்தமும் சிவசித்தனே!
அகிலமும் ஆக்கமும் சிவசித்தனே!
அரியும் அரணும் சிவசித்தனே!
அருளும் ஆத்மம் சிவசித்தனே!
ஆட்கொண்ட ஆதியான சிவசித்தனே!

நன்றி சிவசித்தனே!!!