அணு:

அணு:

085

 • உடல் அணுவின் செயல்பாடு தன்னுள் அறிய வாசியே மூலம்.
 • உடலால் தன்னை உணரவைக்கும் அணுவிற்கு உணவே வாசி.
 • இரு வழி நுழையும் வாசி உடலால் அண்டத்தை உன்னுள் காண்பாய்.

 

 • தன்னுள் இருக்கும் அணுவை அறியாமல் இயற்கையை அறிய முடியாது.

 • இயற்கையை அறிய முற்படுவது உடலில் உன் அணுவை அழிப்பதற்கு சமம்.

 • சிவசித்தன் வாசியை உணர்ந்த அணுவை எவரும் உணரமாட்டார்.

 

 • சிவசித்தன் அணுவை அறிய முற்படுவான். அவன் அணுவை அழிப்பவன் ஆவான்.
 • சிவசித்தன் வாசியை உணரும் அணுவை துன்புறுத்தினால் வாசியே உன் உடல் அழிவதை தடுக்காது.
 • பிறந்தாய் வளர்ந்தாய், உன் அணுவை அறியாதவன் நீ. உயிர் கொடுக்கும் அணுவை அறிய முற்படாதே.

 

 • முச்சுடரையும் தன்னுள் அறிவது வாசியால் தான். அதை தன்னுள் உணர வைப்பது சிவசித்தரின் வாசியே.

 • வாசியே தன்னுள் முச்சுடரின் ஒளியாகும். சிவசித்தன் அருளாலே இது மெய்யாகும்.

 • உடல் அறியும் அணுவாலே முச்சுடரின் வழி அறிவாய். வாசியாலே உயிர்பெற்று முவ்வழியை உணர்வாய்.

 

 • காணாத ஒளியை தன்னுள் காணும் வளியால் சிவகுருவின் அருளால் நவதுளையால் ஒரு துளை அறிவாய்.
 • இருக்கும் இடமறிந்து வாசி செலுத்து உன் அகம் வாசியால் ஒளி ஆகுமே.
 • நாவால் கூறும் வார்த்தையை அணு அறியுமே. அறியாமல் பேசி அழிக்காதே உன் உடலை.

 

 • ஆதாரம் இத்தனை என்று அறியாத நீ, வாசியை அறிந்து பார். ஆதாரம் எவை எவை என்று உணர்வாய்.

 • ஆதாரம் கணக்கிட்டு கூறியவன். அணுவை அறியாமல், உடலை அழித்தானே.

 • ஆதாரம் அறிந்து செலுத்தும் வாசியால், அண்டத்தின் பேராற்றலை நீ அறிவாய்.

உன்னொளி அறிய உள்ளொலிக்கு புறம்பாய் நீ…

சிவகுருவே சரணம்

 

 

#Sivasithan (17)சிந்தையில் சிவம் தூண்டும் சிவகுரு சிவசித்தரை

சிந்திப்பாயோ சிவகுரு சிவசித்தரை

ஆதாரம் பல தேடும் மானிடா

உனது ஆதாரம் செயல்படுவதே – சிவகுரு சிவசித்தராலே!

உனது உண்மை செயல்பட

உன்னுள் வாசியாய் – எம் சிவகுரு

உண்மை தேடினாயோ

உண்மைக்குப் புறம்பாய்!

உனது எண்ணமும் உண்மையும் செயல்பாடாகுதே

உன் அக உண்மையால்

உன்னொளி அறிய உள்ளொலிக்கு புறம்பாய் நீ

இதுவும் சிவகுரு சிவசித்தரின் எண்ணமோ!

 

**********************

 

என் எண்ணமது செம்மையாகவில்லை

ஏகாந்தமதை உணரவில்லை

கழிவது குறையவில்லை

காட்சி ஏதும் காணவில்லை

பிறவிப்பயன் பெறுவேனோ!

பிறவாநிலை அறிவேனோ!

உனதெண்ணம் என்னுள் செயலாவது எப்போது!

எற்றமதை உணர்வது எப்போது!

உண்மை தனில் நான் நிலைக்க என்னைப் பண்படுத்துவீரோ!

– சிவகுருவே.

 

 

சிவகுருவின் பக்தை,

K.B.சுபாசினி

வாசியோக வில்வம் எண்: 13 02 106

 

 

சிவகுரு சிவசித்தனை நாடினோர்க்கு….

 சிவகுருவிடம்,

 

 

வார்த்தைஜாலம் என்பது கிடையாது – ஆனால்

அவரின் வார்த்தைகள் ஜாலம் செய்யுமே! வாசியால்

அவரை நாடினோர்க்கு

#Sivasithan (18)

சிவகுருவிடம்,  

 

தேவையற்ற பேச்சு என்பது கிடையாது – ஆனால்

அவரிடம் தேவையான பேச்சு கூட தேவையிராது வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

வெறும் பேச்சு என்பது கிடையாது – ஆனால்

அவரின் ஒவ்வொரு பேச்சுக்கும் அணுக்கள் உயர்பெறும்  -வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம், 

 

நோய் என்பது கிடையாது – ஆனால்

அவரிடம் எந்த நோயும் நொந்துபோகும் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

மருந்துகள் என்பது கிடையாது – ஆனால்

அவரிடம் மருந்தும் (தீயசக்திகள்) மண்டியிடும் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

பசி என்பது கிடையாது – ஆனால்

அவரிடம் பசி அறிந்து புசிக்கச்செய்திடுவார் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

ஆகாரம் என்பது கிடையாது – ஆனால்

அவர் உணர்த்திடுவார் “உணவே ஆதாரம் இல்லை” என – வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

சுவைக்காக உண்பது என்பது கிடையாது – ஆனால்

அவர் தயவால் சுவையறிந்து உண்ணமுடியும் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

உறக்கம் என்பது கிடையாது – ஆனால்

அவரால் ஆழ்ந்த தூக்கம் கிட்டும் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

பயம் என்பது கிடையாது – ஆனால்

அவர் பயம்போக்கி அபயமளிபார் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

கவலை என்பது கிடையாது – ஆனால்

அவர் கவலையை நீக்குவார் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

வேதனை என்பது கிடையாது – ஆனால்

அவரது வேதனை மனிதஉடல் துயரே – தீர்ப்பார் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

 சிவகுருவிடம்,  

 

ஆதங்கம் என்பது கிடையாது – ஆனால்

அவரது ஆதங்கம் மனிதன் உடலுண்மை உணராததே -உணர்த்திடுவார் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

தன்னலம் என்பது கிடையாது – ஆனால்

அவரது எண்ணம் மனிதநலம் ஒன்றில் – எண்ணிடுவாறே -வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

எதிர்மறை எண்ணங்கள் என்பது கிடையாது – ஆனால்

அவர், அழித்திடுவார் எதிர்மறை எண்ணங்களை வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

தீய எண்ணம் என்பது கிடையாது – ஆனால்

அவர், தம் நல்எண்ணங்களால் படைத்திடுவார் புதிய -படைப்புலகத்தை வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

வயது என்பது கிடையாது – ஆனால்

அவர் வயதானவரையும் வயசுகுறைத்திடுவார் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

மந்திரம் என்பது கிடையாது – ஆனால்

அவரது பெயரே மந்திரமாய் ஒலிக்கும் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

வசியம் என்பது கிடையாது – ஆனால்

அவரிடம் கூட்டம் சேருமே தானாய் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

இல்லாதது என்பது எதுவும் கிடையாது – ஆனால்

அவரிடம் இருப்பது “மெய்” ஒன்றே -உணர்த்திடுவார் மெய்யாய்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

பந்தபாசம் என்பது கிடையாது – ஆனால்

அவரிடம் பந்தம் ஏற்படுமே தானாக வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

 

சிவகுருவின் பக்தை,

                                                           த.பூர்ணிமாய்

                                     வாசியோக வில்வம் எண் : 12 09 108

 

பிறவிப்பயன் பெறுவேனோ! பிறவாநிலை அறிவேனோ!

சிவகுருவே சரணம்

 #Sivasithan (23)

 

1

சிந்தையில் சிவம் தூண்டும் சிவகுரு சிவசித்தரை,

சிந்திப்பாயோ சிவகுரு சிவசித்தரை,

அதரம் பல தேடும் மானிடா,

உனது ஆதாரம் செயல் படுவதே சிவகுரு சிவசுறு சிவசித்தராலே!

உனது உண்மை செயல்பட,

உன்னுள் வாசியாய் எம் சிவகுரு,

உண்மை தேடினாயோ,

உண்மைக்குப் புறம்பாய்!

உனது எண்ணமும், உண்மையும் செயல்பாடகுதே,

உன் அக உண்மையால்,

உன்னொளி அறிய, உள்ளொளிக்கு புறம்பாய் நீ,

இதுவும் சிவகுரு சிவசித்தரின் எண்ணமோ!

 

 

2

ஏன் எண்ணமது செம்மையாகவில்லை,

எகாந்தமதை உணரவில்லை,

கழிவது குறையவில்லை,

காட்சி ஏதும் காணவில்லை,

பிறவிப்பயன் பெறுவேனோ!

பிறவாநிலை அறிவேனோ!

உனது எண்ணம் என்னுள் செயலாலது எப்போது!

எற்றமதை உணர்வது எப்போது!

உண்மை தனில் நான் நிலைக்க என்னைப் பண்படுத்துவீரோ!

 

 

சிவகுரு சேவையில்,

வாசியோக வில்வம் எண் : 1302106

             K.B. சுபாஷிணி,