ஆடவைக்கும் சிவசித்த திருநாமத்தை உரைக்கையிலே!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

#Sivasithan (3)அனுதினமும் அற்புதமும்

அக்னிதற்பரன் வான்வாசியாலே!

அழிக்குமே உடல் கழிவை

அன்றைய தினமே – நீ

அளவை ஊண் எடுக்கையிலே!

அணையாத ஜோதியாய்

ஆத்மநாதனின் ஒளியாற்றல்

அதிகாலை வான்வாசி செய்கையிலே!

அணுவை நல்லணுவாக மாற்றி

ஆற்றலாய் ஆட்டத்தை

ஆடவைக்கும் சிவசித்த திருநாமத்தை உரைக்கையிலே!

ஆழமான மூச்சு அழகாய்

அனுபவித்தோம் சிவசித்தன் நாமத்தை

ஆத்மார்த்தமாய் துதிக்கையிலே!

அக எண்ணத்தை நல்லெண்ணமாய்

ஆக்கி அளவிலா ஆனந்தம்

அருளும் ஆனந்தமூர்த்தியின் வான்வாசியாலே!

அழிக்க முடியாத ஆட்கொல்லியாய்

அகத்திலே தோன்றிட்ட கருமருந்தை

அருட்கொண்டு நாடியறிந்து முறித்திட்ட சிவசித்தனே!

அல்லும் பகலும் ஆலயம் சென்றும்

அருளுணரா உடலை வான்வாசியால்

அணுவாலே ஆற்றல் பெறவைத்தவரே சிவசித்தனே!

அன்பை உடலுக்கு செலுத்தி

ஆற்றலாய் உயிரை உணர வைத்து

அகத்தின் மறைபொருளை அறியவைத்து

ஆற்றலில்லா எம் உடலை நின் வான்வாசியால்

ஆற்றல் அறிய வைத்த

ஆதியானசிவகுருசிவசித்தசங்கரன்

தாள் பணிகின்றேன்!!!!


வாசியோக பக்தன்

ர.சுந்தர்

வாசியோக வில்வம் எண் :  13 09 205

சின்னமனூர்.தேனி மாவட்டம்.

 

சிவசித்தரின் பாமாலை|004|

sivasiththan (june92013) (15)சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்,

 கால் புகட்டி கலி அகற்றி உள்ளுள்ளே

வாசி செலுத்தி ஊழ்வினை வந்த பிணிஅகற்றிய

தூயனே ! எம் ஆசானே ! சிவகுரு சித்தனே !

உம்தாழ் பணிந்து நீர்தந்த கலை

பயின்றால் அலைகடலாய் எண்ண அலைகள்

எழுகின்ற ஆழ்மனமும் அமைதி அடையும் !

ஆயிரம் ஆயிரம் மனிதர்கள் நித்தம்

நித்தம் மகிழ்கின்றனர் வாசியோக

குருகுலம் தன்னிலே ! வந்து பயின்று பார் மனிதனே !

உன் அகம் அறியும் பேரானந்தமதையே ! 

 

**********************

 

உன்னுள்ளூள்ள உத்தமனை அகக்கண்ணில்

கண்டு ஆனந்தமடைய அவனியிலே

வழியுண்டோ ! உண்டென்பர். சிவகுருவாம்

சிவசித்தனின் உயிர்க்கலையெனும் வாசிகலை

அறிந்து வாசியான சிவத்தை உணர்ந்தவர்கள்

இவ்வுண்மையை கண்டிடலாம் வாசியோக குருகுலமதிலே !

 

**********************

 சூளிக் கொண்டையிலே கங்கைதனை சூடியவா !

ஆழி நிறத்தைப்போல அங்கநிறத்தைக் கொண்டவா !

சூழும் வினைதன்னை சுட்டெரிக்கும் சுந்தரனே !

உம்மை சுளிமுனையின் சூட்டினிலே உணர

வைத்தார் உயிர்க்கலையெனும் வாசியாலே

எம் ஆசான் சிவகுரு சிவசித்தன் !

 

**********************

 

ஆடி அடங்கும் வாழ்க்கையிலே ஆழ்மனதின்

ஆட்டத்தை அடக்கி அமைதியதைத் தருகின்ற

இறைகலை எதுவன்றோ ! ஓர் அறிவை உட்புகுத்தி

ஓலமிடும் மனமதனை ஒருமைப் படுத்தும்

வாசி கலையன்றோ ! அக்கலைதன்னைப் புகட்டி

மனிதனையும் புனிதனாக்கும் நற்செயலன்றோ !

சிவகுரு சிவசித்தனின் வாசிகலை !

 

**********************

 

தீயவழிசென்று பரிதவிக்கும் மனிதனுக்கும்

நல்வழிவகுத்து நல்லறிவைப் புகட்டி வரும்

நாயகனே ! வாசிகலை வித்தகர் சிவகுரு

சிவசித்தன் ! அவர் வகுத்த விதிமுறைப்படி

வாழ்ந்து வந்தால் நாளும் கிழமையும்

நவகோளும் நன்மையளிக்குமே !

 

சிவகுருவின் பக்தன்

  – ம. சண்முக பாண்டியன்,

சிந்தாமணி,மதுரை.