காலத்தால் ‎அழிக்கபடக் கூடியவையே அழிக்க பிறந்தவன் எம் சிவகுருசிவசித்தனே!

வணக்கம் சிவகுருசிவசித்தனே,

20140615_123618

பலன் அறிந்து,
பயன் அறிந்து பயம்
நிறைந்து செயல்படும்
செயல் பாதளத்தை நோக்கியே பயணிக்கும் வழி! – சிவசித்தன்
‎பலன் என்ன?
‎பயன் என்ன?
என்று அறிந்து
அறிவை பயன்படுத்தி
கணிக்க முற்படுபவனே!
பயன், பலன்
அவர் அவர்
எண்ணத்துக் கேற்ப,
கணிக்க நினைக்கும்
அறிவின் செயலதுவே
பயம் எனும் உணர்வை
அடிப்படையாய் கொண்டதுவே!

மனித எண்ணம்,
மனித அறிவும்!
இந்த கணிப்பு
அன்பையும் பிரிக்குமே,
‎உண்மை அன்பு
கொண்டவர்களை கண்ணில்
காட்ட மறுக்குமே,
இயற்க்கையின்
செயலை பல காரணம் கொண்டு
பரிகாரம் கொண்டு
அழிக்க நினைக்குமே!

அது அறியாததே,
இயற்கையின் இயல்பான
‎பேரன்புக்கும், ‎பேரறிவுக்கும்
முன் மனிதஎண்ணமும்,
அறிவும் காலத்தால்
‎அழிக்க படக் கூடியவையே
அழிக்க பிறந்தவன்
எம் சிவகுருசிவசித்தனே!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!