வாசியின் உண்மை பேரானந்தம்…….

வாசியின் உண்மை பேரானந்தம்…….

 

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

 

ஏடறியா எழுத்தும்

உடலறியா உண்மையையும்

உண்மையான மலம் வெளியேற

என் அகத்திலே அற்புதன்

 

அக்னிதற்பரனின் ஆனந்த தரிசனம்

அதிகாலையில் கண்டேன்!

 

உடலின் முதல் அற்புதமாம்

உடல் மலம் வெளியேற தண்ணீரை

அருந்த உடல் சுத்தி மலம் வெளியேற

ஆரம்பமானது ஆனந்தம் அக்கணம் முதல்!

குளிர்நீரில் குளிக்க உடல் குளிர்ந்து

உள்ளமும் குளிர்ந்து புத்துணர்ச்சியாய்

புது நாளைத் தொடர்ந்தேன்!

 

சிவசித்தன் வகுத்த வாசிதேகப் பயிற்சியை

முறையாய் எண்ணிக்கை தவறா,

செயல்மாறா வாசியை அடிவயிறு வரை

அழகாய் அளவாய் உள்ளிழுக்க

உள்ளக் கழிவும் பிறப்புக் கழிவும் வெளியேறுதே!

 

வாசிதேகப் பயிற்சிக்குப் பின்னர் சிவசித்தனால்

உருவாக்கப்பட்ட கட்டளையாக கருவேப்பிலை,

கொத்தமல்லி, புதினா இலைகளை நாள்மாறி உண்டு பின்

வெங்காயம் ஐந்தும் உண்ண உடலின்

நீர்க் கழிவுகள் சிறுநீராய் வெளியேறுதே!

 

சிவசித்தனால் நிர்ணயிக்கப்பட்ட உணவு நேரங்களான

காலை எட்டரை, மதியம் ஒன்றரை,

இரவு எட்டரை என கணம் மாறாமல்

சிவசித்தனால் அறிவுறுத்தப்பட்ட உணவை உண்டு

உணவு செரிக்க உன்னதம் கண்டேன்!

 

ஒன்னரை மணி நேரத்திற்கு ஒரு முறை

இருநூறு மில்லி தண்ணீர் அருந்த உன்

உடலில் உணவு தேங்காமல் திரவமாய்

இருந்து மலமாய் எளிதாய் வெளியேறுமே!

 

சிவசித்தனின் வாசிதேகப்பயிற்சிக்கு

முன்னும், பின்னும் சிவசித்த மந்திரமுரைக்க

உள்புதைந்த உண்மை சர்ப்பமாய்

சரீரத்தில் உண்மை ஆட்டத்தால் வெளிப்படுதே!

 

பிறப்பின் நோக்கமறியா நெஞ்சங்களை

பிறப்பின் உண்மையை உடலிலே உணர்த்தி

தன் வாசியின் உண்மையால் பேராற்றலை

உணர வைத்து பேரறிவால் பாரினில்

புதிய படைப்புகளை படைப்புலகத்தில்

படைத்திட்ட படைத்தவனே! சிவசித்தனே!

 

ஆத்ம தரிசனமாய் நின் நாமம் உரைக்க

அழகாய் சுளுமுனையில் அற்புத ஆற்றலாய்

சுடர்விடும் ஒரு வலி என் உயிரின்

உண்மையை உணர்த்தி நெற்றி வழியே

நடுமுதுகில் கீழ் இறங்கி தொடைவழியே

என் கால் வலியாய் வெளிப்பட என்

சிவப்பரவொளியானின் சூரிய தரிசனம் என்

அகத்தே கண்டேன்! உண்மை உணர்ந்தேனே!

 

அருளாளனே! என் பிணியகற்றி

என் உயிர் பசியைப் போக்கி

என் தேக உண்மையை உணர்த்தி

என் பிறப்பை உணர்த்திய நின்

பாதம் சரணடைகின்றேன்!

 

தடுத்தாட்கொண்ட தென்தமிழன் சிவகுருசிவசித்தனே!

 

வேறெதுவும்  தேவையில்லை என் சிவசித்தன் போதும்!

‘ற’ கரக் கவிகள்

சிவசித்தரே!
அற்பரே பலரும் அறிமடமே வாசியென்று
அற்நூலால் அற்கு பெற்றதே – அறவும்
அற்புதன் நின் அறவுரை காட்டியதே
அறத்தாறு எனும் உண்மை
– இவ்வுலகில் வாழும் பலரும் இழுவுகள் பல செய்தோரே. எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல இருப்பவரே… வாசி எனும் அறநூலால் (ஒருவனுடைய வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகளை உணர்த்தும் நூல்) நிலைபெறுவரே அனைவரும்.
சிவசித்தரே தங்கள் போதனை எங்களுக்கு காட்டியதே தருமவழி தன்னையே.

சிவசித்தரே!
ஆறாப் புண்அது கூட்டும் ஆற்றாமை
ஆற்றி யதேஅது வாசி – ஆறங்கமாய்
ஆறா ஆனந்தம் அடைந்தோம் சிவசித்தரால்
ஆற்றல் கூடியதே ஆங்கே
– உடல் மற்றும் மனதில் உள்ள ஆறாத புண்கள் கூட்டுமே நம் துன்பத்தை, அவற்றை முழுவதுமாய் ஆற்றியதே நம் வாசி எனும் வேதம், தனியாத பேரின்பம் பெற்றோம் சிவசித்தரால், எங்கள் செயல் மற்றும் சிந்தனைத் திறன் கூடியதே..

சிவசித்தரே!
இறப்பு என்பது இற்று அல்லவே
இறவை அதுகூடும் இறையாம் – சிவசித்தரால்
இறுமா எனும்பேய் வாசியால் பெறுமே
இறுவே அதுஇறை ஞானமே.
– மரணம் என்பது எத்தகைய தன்மையுடையது என்பதை யாராலும் கூற முடியாது, எனினும் சிவசித்தர் அதனை ஒரு கீழ்த்தரமற்ற செயல் அல்ல அது மேல்நோக்கி இறைமை தேடும் ஏணி என்பதை எவ்வாறு விளக்குகிறார் என்றால், கர்வம் எனும் தீயச்செயல் வாசியால் விடைபெறும் போதே நமக்கு இறைஞானம் கிட்டும் என்கிறார்.

சிவசித்தரே!
ஈற்றிலியே நின்தன் வாசி யோகமே
ஈறிலியே நீரும் நின் – இற்றுமே
ஈறிலியே நீர் அரும் இறை நிலையே
ஈறிலியே ஒளியே சிவசித்தரே
– முடிவற்றதே நீர் அருளும் வாசியோகமே
முடிவற்றதே நிந்தன் நிலையான தன்மையே
முடிவற்றதே நீர் அருளும் இறைநிலையே
முடிவற்ற ஒளி வெள்ளமே எம் சிவசித்தரே

சிவசித்தரே!
உற்ற றிந்து நீர்எம் நாடிமூலம்
உற்சர்ப் பிணியது தீர்த்த – உற்சாகமே
உற்சவராய் எம்முள் உற்றுணர்ந்து உறுதியாய்
உற்பத்தி திடம் செய்தாயே
– தொடு உணர்வால் எங்கள் நாடிகளை அறிந்து, அக்கணந்திலிருந்து எங்களுக்கு நன்மை பெருகும் காலமாய் மாற்றி எங்கள் நோய் தன்னை எங்கள் முயற்சியால் தீர்க்கச் செய்தவரே.. மூலவரே நீர் எம்முள் நாடிமூலம் உற்சவராய் திடமாய் எங்களை கூர்ந்து கவனிக்கச் செய்து எங்கள் தோற்றத்திலும் இறைமை காட்டினீரே அழுத்தமாய்.

சிவசித்தரே!
ஊறு கொண்டோம் ஆண்கள் பெண்கள்
ஊற்று கோல் வாசியால் – அதன்
ஊற்றும் வெளிக் கொணர வாசியால்
ஊற்று கோல் கொடுத்தவா..
– ஆண்களும் பெண்களும் வாசி எனும் ஊன்று கோளால் வளர்ச்சியுற்றோம்.. அதன் ஆதாரங்களை வெளிக்கொணர எங்களுக்கு உதவிய வாசி எனும் ஊன்று கோளை எங்களுக்கு கொடுத்தவரே