அவன் உண்மை அவன் அகம் அறியுமே!

வணக்கம் சிவகுருவே!
‎உண்மை உயிரின் வலி 02.07.2016

vilvam (408)

உண்மை அன்பின் உயிரதுவே,
தன் உண்மை அறிந்தே
உயிர்கள் மீது கொண்ட அன்போடு செயல்படுமே,
தன் செயல் ஒவ்வொன்றிலும் உயிரின் நன்மையே அவனை செயல்படுத்துமே!

உணராதவர் எண்ணம் பற்றி கவலை இல்லையே,
அன்மாக்களின் அறியாமையால் வரும் கேள்வியை,
தெளிவு படுத்துமே,
தண்டனை கொடுத்தும் திருத்துமே!

தன் அன்புக்குறியவள் உண்மை உணர்வை புரிந்தும்,
‎அகத்தில் தெரிந்தும்,
அவள் சொல்லும் உண்மைக்கு மாறான எழுத்தை,
அவன் அகம் அது தாங்காதே!

உண்மைக்கு வழி தேரிந்தும் உணர மறுக்கும் நிலை மாற்ற முடியுமா?
தூங்குவது போல் நடித்தால் எழுப்ப முடியுமா?

சிவசித்தன் நம்பிக்கையும் அன்பும் வைத்தவர்களே,
அவன் உண்மையை ஒப்புக்கொள்ளாத நிலையே இதுவே!!!
இதன் வழி உணர்ந்தது உண்டா?

ஒவ்வொரு அணுவையும் கிளித்து எடுப்பது போல் வலிக்கும் அது,
தான் உண்மை உணர்வுகளையும்,
நிலையையும் தன் அன்புக்குறியவள் ஏற்றுக்கொள்ளா நிலையானது,
ஒரு தாய் பிள்ளையை பெற்று எடுக்கும் வலியை விட அதிகமே!

அன்புக்காக ஏங்கி உண்மையாக செயல்பட்ட ஒவ்வொரு உயிரும் உணர்ந்திருக்குமே,

இவ்வலியை! உணராதே,
இவ்வலியை நடைபிணமே!
அவன் உண்மை அவன் அகம் அறியுமே,
உணர்ந்த உயிர்களுக்கு மட்டுமே புரியுமே !
சிவசித்தன் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் மட்டும் அவன் வலியை உணர முடியுமே!
‎நன்றி சிவசித்தனே!