சிவகுரு சிவசித்தனை நாடினோர்க்கு….

 சிவகுருவிடம்,

 

 

வார்த்தைஜாலம் என்பது கிடையாது – ஆனால்

அவரின் வார்த்தைகள் ஜாலம் செய்யுமே! வாசியால்

அவரை நாடினோர்க்கு

#Sivasithan (18)

சிவகுருவிடம்,  

 

தேவையற்ற பேச்சு என்பது கிடையாது – ஆனால்

அவரிடம் தேவையான பேச்சு கூட தேவையிராது வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

வெறும் பேச்சு என்பது கிடையாது – ஆனால்

அவரின் ஒவ்வொரு பேச்சுக்கும் அணுக்கள் உயர்பெறும்  -வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம், 

 

நோய் என்பது கிடையாது – ஆனால்

அவரிடம் எந்த நோயும் நொந்துபோகும் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

மருந்துகள் என்பது கிடையாது – ஆனால்

அவரிடம் மருந்தும் (தீயசக்திகள்) மண்டியிடும் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

பசி என்பது கிடையாது – ஆனால்

அவரிடம் பசி அறிந்து புசிக்கச்செய்திடுவார் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

ஆகாரம் என்பது கிடையாது – ஆனால்

அவர் உணர்த்திடுவார் “உணவே ஆதாரம் இல்லை” என – வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

சுவைக்காக உண்பது என்பது கிடையாது – ஆனால்

அவர் தயவால் சுவையறிந்து உண்ணமுடியும் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

உறக்கம் என்பது கிடையாது – ஆனால்

அவரால் ஆழ்ந்த தூக்கம் கிட்டும் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

பயம் என்பது கிடையாது – ஆனால்

அவர் பயம்போக்கி அபயமளிபார் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

கவலை என்பது கிடையாது – ஆனால்

அவர் கவலையை நீக்குவார் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

வேதனை என்பது கிடையாது – ஆனால்

அவரது வேதனை மனிதஉடல் துயரே – தீர்ப்பார் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

 சிவகுருவிடம்,  

 

ஆதங்கம் என்பது கிடையாது – ஆனால்

அவரது ஆதங்கம் மனிதன் உடலுண்மை உணராததே -உணர்த்திடுவார் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

தன்னலம் என்பது கிடையாது – ஆனால்

அவரது எண்ணம் மனிதநலம் ஒன்றில் – எண்ணிடுவாறே -வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

எதிர்மறை எண்ணங்கள் என்பது கிடையாது – ஆனால்

அவர், அழித்திடுவார் எதிர்மறை எண்ணங்களை வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

தீய எண்ணம் என்பது கிடையாது – ஆனால்

அவர், தம் நல்எண்ணங்களால் படைத்திடுவார் புதிய -படைப்புலகத்தை வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

வயது என்பது கிடையாது – ஆனால்

அவர் வயதானவரையும் வயசுகுறைத்திடுவார் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

மந்திரம் என்பது கிடையாது – ஆனால்

அவரது பெயரே மந்திரமாய் ஒலிக்கும் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

வசியம் என்பது கிடையாது – ஆனால்

அவரிடம் கூட்டம் சேருமே தானாய் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

இல்லாதது என்பது எதுவும் கிடையாது – ஆனால்

அவரிடம் இருப்பது “மெய்” ஒன்றே -உணர்த்திடுவார் மெய்யாய்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

பந்தபாசம் என்பது கிடையாது – ஆனால்

அவரிடம் பந்தம் ஏற்படுமே தானாக வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

 

சிவகுருவின் பக்தை,

                                                           த.பூர்ணிமாய்

                                     வாசியோக வில்வம் எண் : 12 09 108

 

சிவகுரு சிவசித்தரின் பாடல்கள் –   C.புஷ்பம்

DSC_0383

 

                சிவகுருவின் திருவடிக்கு சமர்ப்பணம்

 

 சிவகுரு அருளியவை:

 அளவோடு உண்டு வளமோடு வாழ்

 அளவுடன் புசி

 சிவகுரு செப்பியவை

 நேரம் தவறாமை

 உணவே மருந்து

 ஆதி முதல் எம் சிவகுரு

 சொன்ன தகவல்

 இது ஆதி முதல் அந்தம் வரை

 இந்தக் கூற்று தொடரும்.

 

 சிவகுருவின் அருளுடன்

 இவை இனி தொன்று தொட்ட

 பழமொழியும், புதுமொழியும் கூட,

 இவ் வாசி யோகமே இவற்றுடன்

 தான் கடைப்பிடித்து, நாம்

 முறையாக பயிற்சி செய்யவேண்டும்,

 உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு என்பர்

 இஃது அனைவருக்குமே பொருந்தும்

 நம் உடல் நாடி சிவகுருவின் 

 அருளுடன் இயக்கம் ஆரம்பம்;

 அது முதல் சிவகுரு செப்பிய

 பொன் மொழிகளை முறையுடன்

 செய்தல் அவசியம்

 அன்புடன் உண்ண, வாசி

 நம் உடம்பில் பாய,

 அணுக்கள் சீராக செல்ல,

 ஒவ்வொரு மாற்றமும் உணர

 சிவகுருவை அறிவோம்.

 நம் மனமதை அறிந்தால்

 நம் சிவகுரு அடுத்த

 படிக்கு வழி காட்டுவார்.

 

 இந்த வழி காட்டுதலில் நிச்சயம்

 மெய்யுணர்வுடன் இருத்தல் அவசியம்!

 இந்த ஜென்மமும் சிவகுரு

 சித்தத்தால் நற்பலன் கிட்டுமே!

 தவறு இழைக்கின் தண்டனை கிட்டுமே!

 நல்லதே செய், நன்மையே நடக்கும்.

 

 

வெங்காயம்:

வெங்காயம் அதனை பச்சையாய்

உண்ண சிவகுரு போதித்துள்ளார்.

காலை பயிற்சி முடித்ததும்

கட்டாயம் வெங்காயம் சாப்பிட

வேண்டும்.

மதிய வேளை தயிர் சாதமுடன்(1௦ எண்ணம்)

வெங்காயம் அதனை உண்ண

நுண் கிருமிகள் அழிந்து (கெட்ட அணுக்கள்)

தொலைந்து போகுமே.

சிறு நீருடன் கழிவுகளும்,

வெளியேறுமே

உடல் எடை சீராகுமே,

வனப்பு, மினுப்பு கிட்டுமே

பொலிவு கூடுமே.

சிறு நீரகமும் நன்கு

செயல்படுமே

வேறு தொற்றுக் கிருமிகள்

(பொது கழிவறை பயன்படுத்த)

வரா வண்ணம் காக்குமே.

அருங் கோடை தன்னில்

வெங்காயமும், நீரும்

சிவகுரு சொன்ன விகிதம்

உண்ண அனைத்தும்

சீராகுமே.

அரு மருந்தாம் வெங்காயமதை

சிரமமின்றி வாசி அன்பர்கள்

சாப்பிட பழகவும்.

பழகினால் எதுவும் சுலபமே

கோடை காலம் தன்னில்

சிவகுரு அருளிய படி

நேர அளவுப்படி இளநீர்

பழச்சாறு, என திரவ ஆகாரங்கள்

என நன்கு எடுக்கவும்.

இரு வேளை (காலை,மாலை)  

நன்கு ஸ்நானம் செய்யவும்.

இரு வேளை நன்கு

பயிற்சி பண்ணவும்.

இவை மிக மிக முக்கியமாம்

அதிகாலை சீக்கிரம் துயில் எழு.

சீக்கிரம் எழ வேண்டுமெனில்

இரவு போஜனம் அளவுடன்

உண்ண பழகவும்,

மல ஜலம் வெளியேற

சரியான விகிதமே உணவு

உண்ண நாம் தயார் செய்ய வேண்டும்.

ஆடவர் பெண்டிர் தவறாமல்

சிவகுருவின் சுயசரிதையை

வாங்கி, படித்து பயன் பெறுக!

அனைத்து நூல்களும் நமக்கு

பிற்கால சந்ததிகளுக்கு

சரித்திரம் பேசுமே!

நம் சிவகுரு நமக்கு

அருளிய மந்திரங்களோ

பேரருள் வாய்ந்தவை மந்திரங்கள் சொல்ல

சொல்ல அனைத்து பகுதியும்

சிவகுருவை உணர்ந்து

புனிதமாகுமே

இப்புனிதமே நம்மை

தேவையற்றவைகளை

உதறச் செய்யுமே!

மேலும் மேலும் நம்

வாழ்க்கைப் பாதை உயர

வழி காட்டுமே.

நாம் அறிந்ததை இவ்

உலகுக்கு எடுத்துச் சொல்க!

மதிய உணவு எடுத்துக் கொண்டபின்

துயில் கொள்ளாமல் சிவகுரு

தொடுத்த நூல் படிக்க;

நடை முறையில் அனைத்து

நல்ல பழக்க வழக்கங்களும் வர

சிரஞ்சீவி போல் என்றும் வாழ்க!

சிவகுருவின் ஆசியுடன்

அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு,

என்பதை உணர்க!

இடைப்பட்ட நேரம் தேவையற்றவைகளை

உண்ணாதீர், தவிர்த்து விடவும்,

தேவையற்றவைகள் தேவையில்லை

அந்த நஞ்சே கெட்ட அணுக்களை

நிறைய உண்டு பண்ணுமே.

கழிவுகள் வெளியேறத் தடை செய்யுமே

உடல் நலம் என்பதே

நாம் உண்ணும் உணவு அல்ல

கழிவுகள் வெளியேறாமை தான்

என்பதை உணர்க!

 

புதிய தோர் உலகம் படைப்போம்

எம் சிவகுருவின் அருத்தவப் பணியில்

அவரின் சிருஷ்டியில் நாமும்

கடுகளவாது கலந்து சேவை செய்வோம்!

 

மனமே!  நம் சிவசித்தரை

                   சித்தரென்று நினைத்தாயோ!

           சிவசித்தரை சிவகுருவென்று அறிந்தாயோ!

           சிவகுருவை சிவனென்று அறிவாயோ!

           சிவகுருவை நம் சீவனென்று உணர்ந்தாயோ!

           சிவகுருவை சூரியனாக வழிபட்டோமோ?

           சிவகுருவை ஒளிக் கதிர்களாக உணர்ந்தாயோ!

           சிவகுருவை அக்கினி ரூபமாய் கண்டாயோ!

           சிவகுருவே தெய்வமாக மனித உருவில்

                           நடமாடுவதை அறிவாயோ!

           சிவகுருவே வாசியும் சிவனும் ஒன்று

                           என்று உணர வைத்ததை அறிவாயோ!

           சிவகுருவே மந்திரங்களின் மூலம்

                           என்ற றிவாயோ!

           சிவகுருவே நம் பிராண சக்தி என

                           அறிவாயோ!

           சிவகுருவே நம் மெய்யில் உள்ள

                          அணுக்கள் என்ற ஒளிக்கதிரை

                     பாயச் செய்தவர் என்பதை அறிவாயோ!

           சிவகுருவே விழிச் சுடரென்று

                           அறிவாயோ!

           சிவகுருவே சுடராக எத்தனை இல்லங்களை

                     வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை

                                      அறிவாயோ!

           சிவகுருவே நம் இல்லம், உள்ளம்

                     எதிலும் ஜோதியாய் நிறைந்துள்ளார்,

           என்பதை மனமே நீ அறிவாயோ!

           மனமே! சிவகுருவுக்கு எப்போதும்

                பயபக்தியுடன் இருப்பாயாக!

           வாசிக்கும் மரியாதை செய்வோம்!

                இவ்வுலகில் மிகவும் முதன்மையான

           கோவில் என்று எண்ணுவதே

                நம் ஸ்ரீ வில்வா யோக மையமே!

           இம் மையத்தில் சிவகுரு

                அருளிய ஒழுக்க நெறி முறைகள்

           என்ற கட்டுப்பாடுகளைக் கண்டு

                தயங்காதே, எங்கும் எதிலும்

           கண்டிப்பு, கட்டுப்பாடு இருந்தால்

                தான் நேர்மை, வாய்மை வெல்லும்.

           வாசி யோகா  செய்யும் போது

                சிவகுருவை வணங்கி, உடலில் ஏற்படும்

           மாற்றங்களை ஆராய்ந்து பார்த்தல் அவசியம்.

                உடற்பயிற்சி செய்தால் போதும்

           என்று எண்ணாதீர்.

                சிவகுரு சொன்ன அனைத்து

                விதி முறைகளையும் ஒழுக்கத்துடன்

                கடைபிடித்தாலே

                நோய் என்ற ஒன்று

                இல்லவே இல்லை!

           இது வாசி யோகத்தால் மட்டுமே

                சாத்தியம் இது 1௦௦% உண்மை

           இதனை புரிந்து நல்ல முறையில்

                வாழ நாம் என்றும் சிவசித்தரின்

           சிவகுருவின் திருவடியைப்

                பணிந்து செய்ல் படுவோம்.

           சிவகுருவுக்கு மனமார்ந்த நன்றிகள்

                     பற்பல!

                                    சிவகுரு ஆசிகளுடன்,

                                       C.புஷ்பம்.