சிவசித்தரின் பாமாலை|005|

சிவகுருவே சரணம்
வாழ்த்துப்பாடல்

நாசி வலி நுழைந்து, கசடு பிணி களைந்து
ஊசி முனை தவத்தாலும்
உணர முடியாத உன்னதாம்
உடல் நலத்தை, என்னுள்
அறியச் செய்த எம் வாசி
வாழிய, வாழியவே
அள்ளக் குறையாத
அட்சயமாம், வாசியை
எமக்களித்து எள்ளளவும்
பயமின்றி எற்றமுடன்
வாழச்செய்த, சுயம்புவாம்
எம், சிவகுருநாதர், வாழிய வாழியவே
சிவனுறை, சிந்தாமணியில்
எழிலோடு வீற்றிருக்கும்
ஸ்ரீ வில்வத்திருத்தலம்
வாழிய வாழியவே.

“ட” கரக் கவிகள்

சிவசித்தரே
அட்சயமாம் அட்ட மூர்த்தமாம் மானுடர்
அட்டகாசம் அடங் கலும்மாற்றுமே – அட்சாம்சம்
அடியேன் வாசியால் மூன்றாமட்சம் அட்சராப்பியமாய்
அட்ட்திக்கயம் அடங்கலும் வாசி
– அழிவற்ற இயமானன், காற்று, சந்திரன், சூரியன், அக்னி, பூமி, அப்பு, ஆகாசம் போன்ற இறைவனால் உருமாக்கப்பட்டப் படைப்புகளை மனிதர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தால் முழுதும் மாற்றீ விட்டனர். எனினும் எங்களைப் போன்ற உங்கள் வழி கண்டவர் மட்டுமே வாசியால் – உங்கள் வழிகாட்டுதலால் எங்கள் மூன்றாம் கண்ணை உணர்ந்தோம். ஆம் எங்கள் குரு எங்களை ஒரு குழந்தையாய் பாவித்து அனைத்தையும் விளக்குகிறார் – அவரே சிவசித்தரே….

சிவசித்தரே!
ஆட்டை பவகடந்தும் ஆடம் பரம்
ஆட்காட்டி யில்லாததால் மேலோங் – குமே
ஆட்டம் கண்டபின் ஆண்டகைத் தேடிஒரே
ஆட்டை தனில்கண் டோம்வாசி
– ஆண்டுகள் பல கடந்தும் மக்களின் ஆடம்பர ஆட்டம் குறையப்போவதில்லை, ஏனெனில் அவர்கட்கு சிறந்த வழிகாட்டி அமையவில்லையே.. அடிபட்டு நோய்கண்டபின் மனிதருள் சிறந்தவரான் உம்மைத்தேடி வந்து ஒரே வருடத்தில் உண்மைசுவாசம் உணர்வர்…

சிவசித்தரே!
இடக்கர் கூடஇட்டம் கொண்டு தேடுவாரே
இட்டதே வதையை இட்டிமைத் – தொற்றி
இடப்பு அணுவி லுணர இடைட்தெரிதல்
இடைநிலை இடம் உம்இடமே
– தீய செயல் செத்தவர்கள் தங்களைத் திருத்த நினைத்து ஏதேனும் விருப்பமான தேவதையைத் தொழுதாலும்… சிறுமை அதிகரிக்குமே தவிர குறையாது.. அணுவின் பிளவு தான் உடல், உள்ளம், செயல் அனைத்தையும் தூய்மைப்படுத்தும் என்பதை உணர சரியான தருணம் உம் இருப்பிடம் தேடி வரும் நேரமே!

சிவசித்தரே!
ஈட்டம் கணக்கில்லை ஈட்டழி தல்லுடையோர்
ஈடுகூட் டும்உம் வாசிக்கு – ஈடுகொடுப்பாரோ
ஈடுபடு வாரே வாசிதனை ஈடேற்ற
ஈட்டி யேநும் வாசியே
– கூட்டமாய் மக்கள் வந்தாலும் வலிமை குன்றியவராயிருந்தாலும் உட்பொருலை விளக்கும் உங்கள் வாசியோகமே.. அதற்கு உண்மையாயிருந்து முனைந்து செய்து, செயல்படுவோரே உணர முடியுமே வாசியை.. அதனைத் தவறவிடாமல் நிறுத்தி மேலும் உயர்வடையச் செய்வது நீர் காட்டுமே மந்திரக்கோல் – உம் நினைவே..
“சிவசித்தனை(ரை) நினை
வாசி நிலைக்கும்..”

சிவசித்தரே!
உட்கொள் வாசிஅது உட்கை கொடுக்கும்
உட்செலுத்து வாசிஅது உடற்கூறு – கூறும்
உட்படு வாசிக்குஅது உட்கிடை உணர்த்தும்
உடையவர் வாசி உரைப்பாரே
– வாசிதனை உள்ளிழுத்தால் அது நம் செயலுக்கு உதவியாய் இருக்கும்…. வாசிதனை நம் நரம்பு வழியோட விட்டால் அது நம் உடலின் பகுதிகளைப் பற்றிய அறிவியல் அறிவை வளரச் செய்யும்… வாசிக்குக் கட்டுபட்டால் அது மனதிற்குள் மறைந்திருக்கும் பொருள்தனை விளக்கும்.. சிவசித்தரே. உங்கள் சொந்த பூஜையில் வைத்து பூஜிக்கும் சிவலிங்கம் எங்களுக்கு வாசிதனை உணர்த்துகிறதே…

சிவசித்தரே
ஊட்டி னீரே ஊது பத்திபோல்
ஊடறு யெனும் ஊண் – ஊட்ட்த்தை
ஊட்டம் ஊட்டி னீரே வாசியோடு
ஊடா டினோமே வாசியால்
– வாசனைப்புகை போல எங்கள் மனதில் உள்ள புண்ணை – பொறாமையை நல்லதாக மாற்றி எங்களை மணைகச் செய்தீரே – ‘வாசியால்’ அது எங்கள் உடல் ஊட்ட்திற்கு போதுமானதென்று உணர்த்தி எங்களுக்கு மேலும் வாசி பழக்கப் படுத்தினீரே..