சிவசித்தரின் வாசியறிவாய், ‘தன்னைத் தானறிவாய்’

சிவகுருவே சரணம்

#Sivasithan (24)நிலை பெறா சுவாசம்,

நிலைபெறுமே, எம் சிவகுரு சிவசித்தரின் வாசியோகத்தால்,

நிலைபெறா, ஒழுக்கம்,

நிலைபெறுமே, எம் சிவகுரு சிவசித்தரின் வாசியோகத்தால்,

நிலைபெறா வாழ்க்கை,

நிலைபெறுமே, எம் சிவகுரு சிவசித்தரின் வாசியை உணர்ந்தவனுக்கு.

 

தன்னைத் தானறிய, ஒரு கேடில்லை,

சிவகுரு சிவசித்தரின் வாசியறிவாய்,

‘தன்னைத் தானறிவாய்’

“படைத்தவன் (சிவகுரு சிவசித்தர்) தன்னையே பார்”

என்பதும் அறிவாய்.

 

உன் எண்ணத்தை வாசியில் வை,

சிந்தையை சிவகுருவிடம் வை,

சிவகுருவே அருள்வார் உன்னுள்,

உன் சொல்லும், மெய்யாகும்,

சிற்றறிவும், சிந்திக்கும்,

உண்மை வழியில் உன் வாசியும் செல்லும்.

 

மனிதருள் அசுரரும் உண்டு,

மனிதருள் மனிதனும் உண்டு,

‘மனிதனும் தெய்வமாகலாம்’,

 

எம் சிவகுரு சிவசித்தரின் வாசியோகத்தால்.

 

 

அகம் புறம் பேசி, காலத்தை வீணடித்தாய்,

உன் அகம், புறம் சுத்தமாக, எம் சிவகுருவின் வாசியறிந்து பார்.

 

 

 

சீவனை சிவமாகக் கொண்டவரே,

சிவய சிவய சிவசித்தனே(ர)

உண்மையில் ஒளிரும் ஒளிச்சுடரே,

சிவய சிவய சிவசித்தனே(ர)

ஐம்பூதங்களும் உன்னுள் அடங்கும்,

சிவய சிவய சிவசித்தனே(ர)

சுயம்புவாய்த் தோன்றிய எங்கள் சிவகுருவே,

சிவய சிவய சிவசித்தனே(ர)

மக்கள் பிணி நீங்க வாசியுரைத்தாய்,

சிவய சிவய சிவசித்தனே(ர)

காணாத இறையை கண்டுணர வைத்தாய்,

சிவய சிவய சிவசித்தனே(ர)

பிணி நீங்க வந்தோம், இறை உணரப் பெற்றோம்,

சிவய சிவய சிவசித்தனே(ர)

 

 

பட்டறிவு தேவையில்லை, எம் சிவகுருவின் வாசியறிய,

பாமரனாய் இருந்து பார், எம் சிவகுருவின் வாசியறிவாய்,

 

உன்னுள் ஒளியாய், வாசியாய் – எங்கள் சிவகுரு.

 

சிவகுரு கற்றுத்தந்த வாசியை,

சிரத்தையாய், மேலேற்றுவாய்,

உடற்கழிவுகள் நீங்கி, உன்னுடல்,

உண்மை, உயிர் பெறும்,

காணாத காட்சி எல்லாம் கிட்டும்,

உன் அகக்கண்ணில்,

பிறவிப் பயனையும் நீ பெறுவாய், எம்,

சிவகுருவின் வாசி கற்கையிலே.

சிவகுருவிடம் உண்மையாய் இருந்து பார்,

இயற்கையே, உன்னை வழி நடத்திச் செல்லும்,

சிவகுருவிடம் உண்மையாய் இருந்து பார்,

இயற்கையே, உன்னை அரண் போல் பாதுகாத்து நிற்கும்,

சிவகுருவிடம் உண்மையாய் இருந்து பார்,

இயற்கையும், உன்னுள் வசப்படும்.

சிவகுருவின் பக்தை

K.B.சுபாஷிணி

வில்வம் எண்: 13 02 106