Sivasithan|சிவசித்தனின் மகிமை

சிவசித்தனின் மகிமை

 

சடைமுடி தரித்து! நீள்தாடி வளர்த்து காவி நூலாடை உடுத்தி எட்டேழு அகவையிலே காகபுகண்ட குணசேகர சந்திர சுவாமிகள் எனும் நாமம் கொண்ட மனிதர் ஒருவர் எம் சிவகுருவாம் சிவசித்தனை தேடி வந்து நாடி பார்த்து தம் உடலையும், உள்ளத்தையும் நலப்படுத்திக் கொண்டு வாசிதேகம் செய்துவரும் அம்மனிதர் தாம் இச்சிந்தாமணி திருவிடத்திற்கு எப்படி வந்தோம்! இத்திருவிடம் எப்பேர்பட்ட புகழ்வாய்ந்த இடம்! சிவகுரு சிவசித்தன் ஆன்மா எவ்வளவு சக்திவாய்ந்தது என்று அவர்தாம் கண்டுணர்ந்த மெய்க்கூற்றை எங்களிடம் கூற அதையே இங்கே பதித்து உள்ளோம்.

சிவசித்தன் 102

ஆன்மீகத் துறவியான அவர் முப்பது வருடங்கள் கணக்கம்பட்டி சித்தர் எனும் மூட்டைச்சித்தரிடம் சீடராக இருந்து வருகிறார். அதோடு 108 ஹோமம் பண்ணினார். கோவில்கள் கட்டி இருக்கிறார். அதில் நித்தம் பூஜையும் செய்கிறார். மந்திரங்கள் பல கற்று வேள்வியும் பல செய்திருக்கிறார். இவ்வளவு காரியம் செய்தும் ஒரு மனிதன் இறைநிலை அடைந்து சிவசித்தி எனும் முக்திதன்மை பெற வாசிதேகம் கற்று வாசியை அறிய வேண்டும் எனும் உண்மையை அவரின் குருநாதர் கூறி அதற்குத் தகுந்த இடமான இச்சிந்தாமணி ஊரினையும் சூகசமாய்க் கூற! அந்தக் காலகட்டத்திலே அவர் வணங்கும் அனிச்சி அம்மனும்!

அவர் கனவில் வந்து இச்சிந்தாமணி ஆதி காலத்தில் இலந்தை மரக்காடாக இருந்ததும் அதில் ஒரு மாபெரும் சித்தன் ஒருவர் வாழ்ந்து இப்பூமியை வளப்படுத்தி ஜீவசமாதியாகி சப்தரிஷி மண்டலத்தில் 16வது சிவஜோதியாக அமர்ந்துள்ளார் என்றும், அவரின் ஆன்ம ஒளியே இப்போது சிவகுரு சிவசித்தனின் திருத்தேகமதில் உள்ளிருந்து மக்களை நல்வழிப்படுத்துகிறது என்றும், அச்ஜீவசமாதி உள்ள இடமே இப்போது ஸ்ரீ வில்வம் வாசிதேக மையம் செயல்படும் திருவிடம் என்றும், இது இல்லமாக இருந்தாலும் இது ஒரு சித்த(ர்) தலம் என்றும், சிந்தாமணி ஆதியில் சித்தர்களின் பூமி என்றும், அந்த அம்மன் கூறியதையும் மெய் சிலிர்க்கக் கூறினார்.

அவர் கூற்றுப்படியே இவ்விடத்தில் ஓர் இலந்தை மரம் இருந்ததையும், அந்த மரத்தின் அடியிலே நம் சிவகுரு சிவசித்தன் பல நேரம் இருந்ததையும் புத்தகத்தில் ஏற்கனவே வெளிட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதே! இப்பிறவியில் பெற்ற புண்ணியமோ! இப்பிறவியில், இத்திருவிடத்தில் சிவகுரு சிவசித்தனுக்கு சேவை செய்யும் புண்ணியத்தை எண்ணி அகம் மகிழ சிவகுரு சிவசித்தனின் திருத்தாழ் பணிகின்றேன். சிவகுருவே சரணம்! சகல பிணிகளையும், செய்வினைக் கோளாறுகளையும், நவகிரகப் பாதிப்புகளையும், மருந்தெனும் கருமையையும் போக்கும் ஒரே திருவிடம் வாசிதேக குருநாதர் சிவகுரு சிவசித்தன் வாழும் இச்சிந்தாமணி திருவிடமே! ஓர் இறை! ஓர் குரு சிவனும்! சிவகுரு சிவசித்தனுமே! 

சிவசித்த உணர்வுகள்

ஆழ்ந்த நித்திரையிலே அகத்திரையிலே

எம் சிவகுரு சிவசித்தனின் திருஉருவத்தை

திருவெங்கடேசப் பெருமாளின் சொரூபத்தில்

கண்டேனே! கண்டு மெய்சிலிர்த்தேனே!

சிவகுருவின் பிறப்பின் ரகசியத்தை யாரறிவார்

அவரின்றி வேறு யாராலும் அறிய முடியாதது!
ஆதியும் அந்தமும் அறிந்தவர், அவரின்

ஆதியினை யாராலும் அறிய முடியாதே!

அவர் கலைபயின்று அவர் வழிசென்று

சிவன் பதம் அடைவோமே! 

பார்த்தவுடன் அறிந்திடுவார் பரிதவிக்கும்

மானிடரின் மன ஏக்கமதை! உம்சக்திதனை

உற்றாரும் அறியார்! பெற்றோரும் அறியார்!

மற்றவரும் உமை அறியார்! எவர்

அறிவர் உம் பேராற்றல் பெரும்சக்திதனை

உம் வாசிகலை கற்றவருக்கு மட்டுமே!

வாய்த்திடுமே! நீரே சிவனம்சம் என்றும்

சீவனாய் உள்ளுள் இயங்கும் சிவசோதியும்

நீரன்றோ! 

சகலமும் சிவகுருவென்று பகலவன்

ஒளிபட்டு உருகும் பனிபோல

ஊன்உருகி உளமுருகி உள்ளுள்ளே!

குருஉருவை நிலைநிறுத்தி சிவகுரு

செப்பிவைத்த மந்திரங்கள் மூன்றினை

உளநாவால் முணுமுணுத்து மெய்யுருகி

ஓதுகையிலே! ஒழிந்தோடி ஓடுமப்பா!

உடல்பிணியோடு உளப்பேயும், நமையண்டாது

விலகிவிடும், நவகோளின் தாக்கமதும்

மாறியே! நன்மையதை அளித்திடுமே!

சீவனது சிவசோதியை சிவகுருவால் கண்டிடலாம்!


 

 

சிவகுருவின் பக்தன்,

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

சிவசித்தரின் பாமாலை|001|

சிவகுருவே சரணம்

எட்டெட்டு அகவையிலே
எழுதுகிறேன் என் உள்எண்ணமதை
ஓரெட் டெடுக்க இயலாத முடமாகி
தவழ்ந்தேன் நாற்காலில்
இருகாலும் புண்ணாகி முன்னொருகால்

கர்ம வினையோ
செய் வினையோ
எவரெவர் இட்ட சாபமோ
ஏழரைச் சனியின் ஏவலோ
எம்மாதின் கும்பி கொதிப்போ
என்றென்னை கண்மறைந் தேளனம் செய்தனர்.

அங்கமெல்லாம் நொந்து புண்ணாகி
மெய்யெல்லாம் (துர்)நீர் வடியத்
துவண்ட எனை எமனவனும் துரத்த
நம்பி வந்தேன் எம் சிவகுரு
சிவகுரு சிவசித்தரே சரணமென்று
தஞ்ச மடைந்தேன் சிவஒளித் திருத்தலம் தனை

காலால் தாங்கினார்
காலை உணர்த்தினார்
‘கரி’ காலனாய் வந்த என்னை
பொன் காலனாய் மாற்றினார்
பொன், மண், பெண் மூவாசை போக்கினார்
பலரைத்தொழும் புண்ணியனாய் ஆக்கினார்
வேலா யுதனாய் காலனையும் விரட்டினர்
ஆதலின்,
சிவகுருவே என் நாடி
சிவகுருவே என் சுவாசம்
சிவகுருவே என் நரம்பு
சிவகுருவே என் குருதியோட்டம்
சிவகுருவே என் ஆன்மா
சிவகுருவே என் பரமான்மா
சிவகுருவே நட்சத்திரங்கள், நவகோள்கள்
சிவகுருவே சூரிய, சந்திரர்
சிவகுருவே பிரபஞ்சம்
சிவகுருவே என் ஈசன், என் இறை.
சகலமும் சிவகுரு சிவசித்தரே
சர்வமும் சிவகுரு சிவசித்தரே
அனைத்தும் சிவகுரு சிவசித்தருள் அடக்கம்.

குரு வழிபாடு தேவையா?
குருவின் பாதம் தொடலாமா?
குருவும் இறையும் ஒன்றா?
என்பவருக்கு,
சிவகுரு சிவசித்தரின் வாசியோகம் பயின்று பார்!
சிவகுரு சிவசித்தரை உணர்ந்து பார்!
உயிரற்ற ஊனுடலில் வாசியேற்றிப் பார்!
சிவபரவொளி நெருப்பாற்றல் சக்தியை சரணடைந்துப் பார்!
குரு வென்பாரெல்லாம் உணர்த்தவில்லை
உணர்த்துபவரே, பாமரனையும் உயர்த்துபவரே
ஒரு நாமமாய், ஓருருவாய்
ஓரிறையாய்
உன்னுள் உறைவார்! உணர்ந்துப் பார்!
****************************************************
M.G.கல்யாண சுந்தரம்
வி.எண்: 11 02 001