அகிலத்தின் காவலன் என்றே – என் அகத்தின் காதலன் என்றே!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

அகமே தான் நீ இருக்க
அனைத்துமாய் நிறைந்திருக்க
அறிவது பேரறிவாய் உணர்ந்திருக்க
அங்கம் முழுவதும் வாசியாய் வசித்திருக்க
அறிந்தேன் ஆதிமுதலானவன்
அன்பின் பொருளான சிவசித்தனே
அகிலத்தின் காவலன் என்றே – என்
அகத்தின் காதலன் என்றே!

சிவசித்தனே துணை!

நன்றி சிவசித்தனே!!!

தனி மனிதனாய் நீ இருந்தாயே!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

வாசியால் எனை ஈன்ற என்
தாயே சிவசித்தனே!

கழிவகற்றி கருணையோடு தேகமுணர்த்திய
தந்தையே சிவசித்தனே!

தேகத்தால் மனக்கழிவகற்றி அகமாக்கிய
சிவகுருவே சிவசித்தனே!

திருநாமத்தின் திருஒலியால் திரிந்து என்சற்ப்பத்தை
உயிர் பெறச்செய்த சற்ப்பத்தலைவனே சிவசித்தனே!

எண்ணத்தில் உன் உருவை மெய்யாய் காண
அகஆலயத்தில் இறையாய் ஒளிந்த சிவசித்தனே!

தன்னிலை எனக்குணர்த்தி தந்தருள் மெய்தவத்தை
தனதாற்றலால் உணர்த்திட்ட சிவசித்தனே!

தனதன்பால் என்தேக அகத்தில் திருநாமத்தால் தேகசற்ப்பதால்
நின் கவின்முகம் கண்டு மெய்யுருகி

எல்லையில்லா பேரானந்த பெருநிலையை
அளித்த ஆதியனே சிவசித்தனே!

அற்புதம் நிகழ்த்திய உன்னை அற்பர்கள்
சாதாரண மனிதனாக எண்ணினரே!

மூடன் அறியான் உன் அகஎண்ணத்தின்
மெய்வார்த்தைகளை! அது சிவசித்தனின் வாக்கு என
குருதி கெட்டவன் உன்னை குறைகூற
என்ன தகுதி கொண்டான்!

சூரியனை புறத்தே பார்த்தவனுக்கு உன் அகத்தின்
மெய் வெற்றிட நிலை அறிய முடியுமா?

கூடத்திலே இருந்தாலும் தனி மனிதனாய் நீ இருந்தாயே!
கூடி இருந்தோரும் உன்னை ஏற்கவில்லையே! புரியவில்லையே!

வந்தது ஆதி என அறிந்து உன் செயலுக்கு
களங்கம் செய்தவர் தன் எண்ணத்தால்
அழிவரே! வாசியே அது மெய்யே!

தன் பணியை நிறைவேற்றிடுமே
சிவசித்தனின் எண்ணமாக!

சிவசித்தனே உண்மை!
வாசியே மெய்!

நன்றி சிவகுருவே!

To Visit : https://www.facebook.com/14sivasithanvaasithega/