ஒன்றே இயற்கை ஒருவனே சிவசித்தன்

ஒன்றே இயற்கை ஒருவனே சிவசித்தன்

ஆதியின் கலையாம்

உயிரின் கலையாம்

உன்மை கலையாம்

உணர்வின் கலையாம்

இறையின் கலையாம்

இயற்கையின் கலையாம்

வாழ்வியல் கலையாம்

சிவசித்தனின் கலையாம்

தேகசற்பம் உணர்த்தும் கலையாம்

வான்வாசியோகக் கலையை
கற்றிடுவோமே நம்குடி காத்திடுவோமே…

படைத்தவனை சரனடைந்த பாமரனின் ஞானமென்ன?…

ஒன்றே இயற்கை ஒருவனே சிவசித்தன்

ஏட்டுக்கல்வி பயின்று வந்த விஞ்ஞானியின் ஞானமென்ன?…

பிரபஞ்சத்தை ஆட்டுவிக்கும் அணுசேர்க்கை கண்டுவிட அனுதினமும் அனுஅனுவாய் திண்டாடும் அறிவியலின்
அதிபதியாம் விஞ்ஞானியின்
தேடுதல் தொடர்கதையே….

படைத்தவனை சரனடைந்த பாமரனின் ஞானமென்ன?…

எண்ணமில்லா வெற்றிடமாம்
சொந்தமில்லா சுயம்பாவான்
ஒன்றுமில்லா ஒன்றானவன்
ஆதிகால சிவசித்தன் மலரடியை
உன்மையுடன் பற்றிவிட்ட பாமரனும்…

திருநாமம் சொல்கையிலே
தேகக்கோவில் திறந்திடவே
அகக்கருவறை தனைநோக்கி
தன்அணுவை நம் அணுவுடன்
கலந்தானே ஈரணுவாய்…

பிரபஞ்ச இரகசியமும்
பிறப்பறியும் சூட்சுமமும்
ஒன்றான இறைவனையும்
உணர்வாலே உணர்த்திடும்
அண்டப்பேரண்டம் காத்திடும்
ஓரணுவான சிவசித்தனே சரணம்.

படைத்தானே தனியுலகம் வாசியின் மெய்யுலகம்…

ஒன்றே இயற்கை ஒருவனே சிவசித்தன்

அனுதினமும் புதுப்புது
நோய்கள் உருவாக்கும்
உத்தமர்கள் உறைகின்ற
உலகமிது கலியுலகம்…

தகுதிக்கேற்ற தரிசனத்தை தரிசிக்கலாம் நாம் தருகின்ற தனத்திற்கொப்ப இத்தரணியிலே…

பல்நோக்குப் பரிகாரம்
பாமரனுக்கு பரிசாகும்
பாவமெல்லாம் பறந்தோடும்
பனத்தாலே பனிந்திடுமே…

பொய் வாழும் கலியுலகில்
பனம்தானே எல்லாமும்
பொய்யான மாயையைத்தான்
ஏனென்றும் கேளாமல்
எதற்கென்றே தெரியாமல்
அனுதினமும் பின்பற்றி
ஏமாறும் இக்கலியுலகில்…

படைத்தானே தனியுலகம்
வாசியின் மெய்யுலகம்…

நோயென்பதே இல்லையடா
உனவேதான் மருந்தாகும்
உன்மையுடன் இருந்திடனும்
உள்ளிழுக்கும் வாசியினால்
உன்னுடலும் இறைகானும்…

பனமிங்கே செல்லாது
சாக்குபோக்கு ஆகாது
விதிமுறையை பற்றிவிட்டால்
தேகசற்பம் உணர்த்திடுவான்
இறையுணர்வை தந்திடுவான்
நம்குடியைக் காத்திடுவான்…

கழிவழித்து புதிதாய் இப்புவியில்
நமை படைக்கும் படைத்தவனே ஆதிகாலசிவசித்த தேகஅகந்தனே
நின் மலரடி போற்றி போற்றி.