‘ய’ கரக் கவிகள்

சிவசித்தரே!
யதி யல்ல சிவசித்தர் யக்கியம்
யத்தி னிக்கும் யசமானனு – மல்லவே
யந்திர மது யமமே யெனும்
யதார்த்த முணர்திய யசு
-துறவியல்ல எங்கள் குரு சிவசித்தர், யாகம் வளர்த்து ஆன்மம் வளர்க்க முயற்சிக்கும் தலைவனும் அல்ல, மந்திரச் சக்கரம் என்பது புலனடக்கமே எனும் யதார்த்தத்தை உணர்த்தும் வேதமே அவர்.

sivssiththan 2  (23)சிவசித்தரே!
யாக்கை மேவ யாணராய் யாசித்தும்
யாங்கும் கிட்டாது யாப்பு – யாவது
யாணர் யாப்பு யாத்திரை கிளப்பும்
யாதஸ்துமே யாவருக்கும் வாசியே
– உடல் வளர்க்க புதியமுறையில் எங்கு சென்று பிச்சையெடுத்தாலும், உண்மை கிடைக்காது என்பதே உறுதி. எது புதிய உறுதி எனும் பிரயாணத்தை தொடக்கி வைக்கும் ஞாபகக் குறிப்பே, அது அனைவருக்கும் பொதுவான வாசியே.

சிவசித்தரே!
அயில் யேற்றும் வாசி யருளாளனே
அயிரா வனம் அது – நின்மூலமே
அயினி யே அன்ன மல்ல
அயில் கூட்டும் வாசியே.
– உடலுள் கூர்மை கூட்டும் வாசியை எங்களுள் அருளும் எம்பிரானின் யானை போன்ற மூலமானவரே, சாப்பாடு என்பது அன்னம் மட்டுமல்ல, அனைத்திலும் முக்கியமானது வாசியே, என்று அருள்பவரே சிவசித்தரே!

சிவசித்தரே!
ஈயல் பரவும் மானுட உடல்
யாங்கு பரந்தும் யாவது – நடாது
யாசகம் யேந்தி பலனில்லை யதுவே
யட்சனால் தெளிந்தோம் சிவசித்தரால்
– கேன்சர் எனப்படும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் மானிடர் உடல் முழுதும் பரவும்போது உலகெங்கும் சுற்றினாலும் கிட்டாத உயிர் பாக்கியம், எங்கு இரந்தும் தீராத நோய், சிவசித்தர் எனும் கடவுளால் நோய் தீர்க்கப்பெற்றோமே.

சிவசித்தரே!
யுகப் பிரளயம் யுகம் கடந்தாலும்
யுக்தா யுத்தம் கூடி – யாவும்
யுகாந் தம் அடையா தெனறிய
யுவனே சிவ சித்தனே (ரே)
– நான்கு யுகங்களின் முடிவில் ஏற்படும் பேரழிவுகள் அனைத்தும், எதிப்பார்த்த படி அண்டமெலாம் அழியாது என்று உறுதியாய்க் கூறிய இளைஞன் எங்கள் சிவசித்தரே!

சிவசித்தரே!
யூபம் பின்னால் ஓடும் யூதமே
யூகி யொருவர் கூற – யூமம்
யூகித் தால் அதுநம்மை ஆட்கொள்ளும்
யூகமே என யூகித்தவரே..
– வேள்விகளும், யாகங்களும் செய்தால் வாழ்வில் முன்னேறலாம் என்று யூகித்து யாரோ ஒருவர் கூறக்கேட்டு கூட்டமாய்த் திரியும் மனிதர்களே! உண்மை உணருங்கள், அவை உங்களை ஆட்கொள்ளும் மனநோயே என்பதை உணர்த்தியவர் சிவசித்தரே.

‘ந’ கர கவிகள்

சிவசித்தரே!
நன் நயம் நல்கும் நக்கரூபனே
நகம் நடுக்கும் நமச்சிவாய – நடையால்
நகை காட்டும் நண்பே நின்
நயன் மே வாசியால்
– இனிய சொற்களை மட்டும் பேசும் சிவனின் ரூபனே, மலைகூட அதிர்வு காணும் நின் மந்திரத்தின் இயல்பால், ஒளி வீசும் அன்பு நின் கண்களில் வாசியாய் வெளிப்படுகிறதே…

சிவசித்தரே!
நாடி நாடும்நீர் நாடிதனில் வாசிஏற்றி
நாடி னோம் நாட்டம் – நரம்பில்
நாடோ றும் நாட் காலம்
நாகம் தனில் பரந்தோமே…
– மணிக்கட்டின் துடிப்பின் மூலம் எங்களை உணர்ந்து மூக்கின் வழி வாசி யேற்றினீரே, ஆராய்ந்தோம் வாசியின் சஞ்சாரத்தை எங்கள் உடலின், தினமும் அதிகாலையில் ஆகாயத்தில் பரந்தோமே… பாரமின்றி…

சிவசித்தரே!
நிகம் மாம் வாசி நியமமாய்
நிலா வினால் நிரி – யாமை
நிர வதியாகுமே நி தானமே
நிறைவு தரும் வாசியே
– வாசியெனும் வேதம் தனை அட்டாங்க யோக முறைகளை முறையாகப் பின்பற்றினோல் தியானத்தில் மரணம் அது எல்லையற்றதாகும் (நி) – ஆதி காரணமே அது உண்மையான நிலைப்பாட்டை உணர்த்தும் வாசியே.

சிவசித்தரே!
நீச்சு மல்ல நீர்க் கோலமல்ல
நீத்த லும்மல்ல நீலனே – வாசியது
நீத்தார் காட்டாத நீதி நீரே
நீறு கொண்டு காட்டினீரே.
-நீந்தக் கூடிய ஆலமும் அல்ல, நீரில் வரையப்பட்ட கோலமும் அல்ல வாசி, முனிவர்கள் காட்டாத ஒழுக்க முறையை நீரே உம் திருநீற்றில் காட்டினீரே..

சிவசித்தரே!

நுகர்ந் தோமே நும் நுவல்
நுட்பம் கூட்டுதே எம்மை – நுடங்குதே
நுண் காண நுரை யீரல்வழி
நுதலு தே வாசி…
– உட்கொண்டோமெ உங்கள் சொற்களை .. எங்களை கூர்மையாக்குதே, அது எங்களை வாசியோது ஈடுபடச் செய்கிறதே… அணுக்களை உணர நுரையீரல் தாண்டி கிளர்ச்சி உண்டாக்குதே வாசி..

சிவசித்தரே!
நூத னமாய் நூல் நூற்பா
நூழை யுள் நுழையும் வாசியே
நூக்கு நீரே துன்பமே..
– புதிதாய் சாஸ்திரங்கள் மூலம் இலக்கண அர்த்தங்களை நிச்சயமாய் புரிய வைத்தீரே சிறு நுழைவாயில் போன்ற நரம்புகளுல் கூட நுழையும் வாசி மூலம் எம் துன்பங்களை நீங்கச் செய்தீரே.

‘த’ கர கவிகள்

சிவசித்தரே!
தடாதகை தவழும் தக்கணம் தழைத்தவா
தகர் தீண்டியோர் தக்கவைத்து – தக்கவர்
தகவு கொள்ள தகரவித்தை தட்டினீர்
தண்டகம் தன்னில் தண்பதமாய்
-மீனாட்சி அம்மன் தவழும் தென் இந்தியாவின் வில்வமே நீவீர்… பூமிதனைத் தீண்டியோரைக் கூட கைவிட்டுவிடாமல் தகுதி உடையவராக்கி அறிவு கொள்ளச் செய்து, இதயத்தில் தியானம் மூலம் இறைவனை உணரச் செய்தீரே மானுடரின் முதுகெழும்பினில் புதுவெள்ளமாய்…

சிவசித்தரே!
தாடாளமே நீர்அக தாட்சணி யமாம்
தாரகம் தந்த தாக்கம் – தாத்வரியமே
தாபம் நீக்கி தாமம் தந்தாய்
தாரகை தாண்டு மும்வாசி
– பெருமுயற்சியின் அம்சமே நீரே கருளை வடிவானவரே, நீர் அளித்த பிரணவ மந்திரம் கொடுத்த அனுபவ விளைவே அதன் உட்பொருளே.. வெப்பம் குறைத்து முக்தி உலகிற்கு வழி கூறினீரே… பூலோகம் தாண்டிச் செல்கிறதே எம் வாசி எனும் வழி.

sivssiththan 2  (24)சிவசித்தரே!
திக்குவிசயம் திக்கு தேவாசி திட்டிவிடம்
திட்டிதோப மும்தி கைத்தோடுமே –திரியம்பகமாம்
திருக்கண் அதனால் திருமந்திரம் தந்தாய்
தியானம் தூண்டியதே திகைப்பே..
– எல்லா திசைகளிழும் தக்க வேளையில் பரவுதே வாசி.. பார்வையிலே விஷமுள்ள மனிதர்ளூம், கண்ணேருகளும் எங்களை நிருங்காது. ஏன்னில் சிவபெருமானின் வில்லை உம் பார்வையில் வைத்துள்ளீரே.. மேலும் ஐத்தெழுத்து மந்திரம் உரைக்கச் செய்து எங்கள் மனதை ஒருமுகப் படுத்தி எங்களுள் பிரமிப்பைத் தூண்டினீரே…

சிவசித்தரே!
தீர்த்த னேநீர் தீயவைத் தீர்த்தாய்
தீனீ தீய்த்தால் தீர்க்காயுள் – தீர்க்கமே
தீக்கதி யில்தீவர்த்தி தீர்த்தன் நீவீர்
தீர்க்க தரிசியருளும் தீட்சையே..
– பரிசுத்தமானவரே நீர் தீயச் செயல்களை முடிவுறச் செய்தீரே.. சிற்றுண்டி குறைத்தால் (எரித்தால்) ஆயுள் தீர்க்கமாகும் என்று உறுதி கூறினீரே… நரகம் எனும் இருள் நீக்கி வெளிச்சம் கொடுக்கும் சொர்க்க விளக்கே நீர்… வருங்காலம் தனை எளிதில் உணரும் உணர்வாளனே நீர்.. எங்களுக்கு சமய ஞானம் அளிக்கும் குருவே நீர்…

சிவசித்தரே!
தூய் யதிகம் தூய்ய துப்பார்
துரித மாய்த்துடி துடிப்பர் – துமலால்
துருவம் துர்கமாமாய் துணிபு துளிர்க்க
துணர்தரும் துருவனே சிவசித்தனே.
– உணவு அதிகமாக உண்பவர் வேகமாய் பாதிக்கப்படுகின்றனர் தும்மலால் அசையா நிலைக்கு அரணாயிருந்து மனவுறுதி செழிக்கச் செய்து பூங்கொத்தாய் மணக்கும் அழிவற்றவரே எங்கள் சிவசித்தரே…

சிவசித்தரே!
தூமக் கோள்தனைத் தூல லிங்கமாய்
தூண் ஏற்று நீரே தூயவரே – உம்
தூய் மையிடத்தில் தூர திருட்டி
தூண்டும் தூர தரிசிநீர்
– அக்கினித்தேவனை, சிவனாகத் தம்பம் வைத்து, உண்மையான உங்கள் இடத்தில் முடிவைத்தீரே. வருங்காலம் தனை உங்கள் நினைவுகளில் கொண்டு…இனி வரும் காலங்களில் பயன் அளிக்கும் வாழ்க்கை முறைகளைத் கூறினீரே.

“ட” கரக் கவிகள்

சிவசித்தரே
அட்சயமாம் அட்ட மூர்த்தமாம் மானுடர்
அட்டகாசம் அடங் கலும்மாற்றுமே – அட்சாம்சம்
அடியேன் வாசியால் மூன்றாமட்சம் அட்சராப்பியமாய்
அட்ட்திக்கயம் அடங்கலும் வாசி
– அழிவற்ற இயமானன், காற்று, சந்திரன், சூரியன், அக்னி, பூமி, அப்பு, ஆகாசம் போன்ற இறைவனால் உருமாக்கப்பட்டப் படைப்புகளை மனிதர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தால் முழுதும் மாற்றீ விட்டனர். எனினும் எங்களைப் போன்ற உங்கள் வழி கண்டவர் மட்டுமே வாசியால் – உங்கள் வழிகாட்டுதலால் எங்கள் மூன்றாம் கண்ணை உணர்ந்தோம். ஆம் எங்கள் குரு எங்களை ஒரு குழந்தையாய் பாவித்து அனைத்தையும் விளக்குகிறார் – அவரே சிவசித்தரே….

சிவசித்தரே!
ஆட்டை பவகடந்தும் ஆடம் பரம்
ஆட்காட்டி யில்லாததால் மேலோங் – குமே
ஆட்டம் கண்டபின் ஆண்டகைத் தேடிஒரே
ஆட்டை தனில்கண் டோம்வாசி
– ஆண்டுகள் பல கடந்தும் மக்களின் ஆடம்பர ஆட்டம் குறையப்போவதில்லை, ஏனெனில் அவர்கட்கு சிறந்த வழிகாட்டி அமையவில்லையே.. அடிபட்டு நோய்கண்டபின் மனிதருள் சிறந்தவரான் உம்மைத்தேடி வந்து ஒரே வருடத்தில் உண்மைசுவாசம் உணர்வர்…

சிவசித்தரே!
இடக்கர் கூடஇட்டம் கொண்டு தேடுவாரே
இட்டதே வதையை இட்டிமைத் – தொற்றி
இடப்பு அணுவி லுணர இடைட்தெரிதல்
இடைநிலை இடம் உம்இடமே
– தீய செயல் செத்தவர்கள் தங்களைத் திருத்த நினைத்து ஏதேனும் விருப்பமான தேவதையைத் தொழுதாலும்… சிறுமை அதிகரிக்குமே தவிர குறையாது.. அணுவின் பிளவு தான் உடல், உள்ளம், செயல் அனைத்தையும் தூய்மைப்படுத்தும் என்பதை உணர சரியான தருணம் உம் இருப்பிடம் தேடி வரும் நேரமே!

சிவசித்தரே!
ஈட்டம் கணக்கில்லை ஈட்டழி தல்லுடையோர்
ஈடுகூட் டும்உம் வாசிக்கு – ஈடுகொடுப்பாரோ
ஈடுபடு வாரே வாசிதனை ஈடேற்ற
ஈட்டி யேநும் வாசியே
– கூட்டமாய் மக்கள் வந்தாலும் வலிமை குன்றியவராயிருந்தாலும் உட்பொருலை விளக்கும் உங்கள் வாசியோகமே.. அதற்கு உண்மையாயிருந்து முனைந்து செய்து, செயல்படுவோரே உணர முடியுமே வாசியை.. அதனைத் தவறவிடாமல் நிறுத்தி மேலும் உயர்வடையச் செய்வது நீர் காட்டுமே மந்திரக்கோல் – உம் நினைவே..
“சிவசித்தனை(ரை) நினை
வாசி நிலைக்கும்..”

சிவசித்தரே!
உட்கொள் வாசிஅது உட்கை கொடுக்கும்
உட்செலுத்து வாசிஅது உடற்கூறு – கூறும்
உட்படு வாசிக்குஅது உட்கிடை உணர்த்தும்
உடையவர் வாசி உரைப்பாரே
– வாசிதனை உள்ளிழுத்தால் அது நம் செயலுக்கு உதவியாய் இருக்கும்…. வாசிதனை நம் நரம்பு வழியோட விட்டால் அது நம் உடலின் பகுதிகளைப் பற்றிய அறிவியல் அறிவை வளரச் செய்யும்… வாசிக்குக் கட்டுபட்டால் அது மனதிற்குள் மறைந்திருக்கும் பொருள்தனை விளக்கும்.. சிவசித்தரே. உங்கள் சொந்த பூஜையில் வைத்து பூஜிக்கும் சிவலிங்கம் எங்களுக்கு வாசிதனை உணர்த்துகிறதே…

சிவசித்தரே
ஊட்டி னீரே ஊது பத்திபோல்
ஊடறு யெனும் ஊண் – ஊட்ட்த்தை
ஊட்டம் ஊட்டி னீரே வாசியோடு
ஊடா டினோமே வாசியால்
– வாசனைப்புகை போல எங்கள் மனதில் உள்ள புண்ணை – பொறாமையை நல்லதாக மாற்றி எங்களை மணைகச் செய்தீரே – ‘வாசியால்’ அது எங்கள் உடல் ஊட்ட்திற்கு போதுமானதென்று உணர்த்தி எங்களுக்கு மேலும் வாசி பழக்கப் படுத்தினீரே..

‘ச’கரக் கவிகள்

சிவசித்தரே
சக்கரவாளம் சஞ்சீவனி சகலமும் சுட்டாலே
சங்கதமுண்டு சுட்டாலும் சங்கற்பம் – சங்காரம்
சகசமே சதாவெல்லும் வாசியே சகாமியம்
சகலமும் வாசிகூறும் சச்சிதானந்தரே
– மலைகள் தேடி அலைந்து உயிர் மருந்தாம் சஞ்சீவி அடைவர். அதைவிட உயர்ந்ததெங்கள் வில்வத்தின் கலை. ஆம்! வில்வத்திற்கும் மனஉறுதிக்கும் தொடர்புண்டு. இயற்கையான பிரபஞ்ச அழிவை எப்போதும் வெல்வது வாசியே, பயனை விரும்பி நீ முழுமையாய் செய்யும் வாசியோகமே எல்லாம் – என்று உணர்த்திய முக்குணங்கள் (உண்மை, அறிவு, ஆனந்தம்) நிறைந்த ‘முழுமுதற்கடவுளே’

sivssiththan 2  (25)சிவசித்தரே
சாகித்யம் சாகை உணர்த்தா சாத்திரம்
சால்புபெற சால்புளி சாம்பன் – நாடியும்
சாவாமருந் துணர்த்தா சாரூப்பிரம் சாகபட்சிணியே
சாசுவதம் கூறும் வாசி
– செய்யுளும் வேதமும் உணர்த்தாத அறிவுக்கலையை மேண்மை குணம் பெற முறைப்படி எம்பெருமானை வேண்டியும், அமிர்தமே உண்டாலும் அடைய முடியாத கடவுள் நிலையை – நிலையான தன்மையை சைவ உணவும் வாசியோகமும் உணர்த்துமே…

சிவசித்தரே
சிரையும் சிலேட்டுமமும் சிதைத்த சதையை
சிதல் சிதறி சித்தப்படுத்திய – மரணத்தை
சித்தி சித்தம் சித்து செய்து
சிரஞ்சீவீ ஆக்குவீர் அட்டபரிபாலராய்
– இரத்தத்தை இருதயத்திற்கு எடுத்துச் செல்லும் நரம்பைக் கூட சிதைத்த்து சளி, கரையானாய்ப் படர்ந்து மரணத்தை நெருங்கியவரை நின் நல்ல மனத்தால் கை கொடுத்த தெய்வீக சக்தியாம் அறிவால் நீண்ட ஆயுள் கொடுத்து நல்லோரைக் காத்தீரே…

சிவசித்தரே
சீமைச்சரக் கென்று சீர்கேடு தரும்சீக்கு
சீலம் தொன்று சீரணி – யிழந்து
சீவாத்மா தேடி சீக்குசீவீ சீதளம்தர
சீவன்முக்தி தாரும் சிவசித்தரே
– நம்மிடம் இல்லாததை, எதைக் கண்டோம் அயலோரிடம், அதைக் கண்டு பல வருடங்களி சீர்கெட்டு, நோய் கொண்டு, ஒழுக்கம் தொலைந்து, உணவு செரிக்காமல் போய், ஜீவ ஆத்மாவை தேடி, ஓடி, நோய் தீர்க்கவும்.. உடல் குளிர்ச்சி பெறவும்.. இம்மை நீக்கி முக்தி பெறவும் உம்மை நாடுகின்றோம் சிவசித்தரே

சிவசித்தரே
சுணங்கி ணோம் சுகாதாரம் சுட்சமானோம்
சுகிர்தத்தால் சுக்கில மாம்சுடர் – கொடுத்தவா
சுடர்விடும் சுப்பிர தீபமாம் வாசி
சுயசார்பாய் மாறினோம் சுயம்பே
– சோர்வோடு சுத்தமிலாதவராய் குறைபாடோடு நின்னைச் சரணடைந்தோம். நின் நற்செயலால் வளர்பிறை ஒளி ஊட்டினீரே! ஒளி வீசும் கூரிய அறிவே! வாசியென்று எங்களை எங்களையே நம்பவைத்த சுயம்புவே நீர் எங்கள் இயற்கடவுளே!

சிவசித்தரே
சூதகம் சூழும் சலனங்கள் இயற்கையே
சூல் சூத்திரம் அதன்சூக்குமம் – இயற்கையே
சூத்திரம் சூழ்ந்து சூடனாய் ஒளிகூட்டி
சூட்சுமம் சூட்டிய வா
– மாதவிடாயால் ஏற்படும் உடல் மாற்றங்களும் வியாதிகளும் இயற்கையை உதாசினப்படுத்தியதன் விளைவே என்றும், கர்ப்பத்தின் நுண்மையும் இயற்கையே எனும் உண்மையறியாமல் உழலும் மக்களுக்கு, அதன் உண்மையை இயற்கையாய் வாசி மூலம் கற்பூரமாய் அறிவு நுட்பத்தை உணர்த்திய சிவசித்தருக்கு நன்றி.

‘ஞ’கரக் கவிகள்

‘ஞ’கரக் கவிகள்

37. சிவசித்தரே!
ஞமன் ஞயமாய் ஞானத்தில் அழைத்தும்
ஞமர் தோரும் தேடார் – எமன்
ஞரலுதல் கேட்டில் ஞாலம் தாண்ட
ஞஞ்சை அழிக்கும் வாசி
– எமன் அழைக்கும் நேரம் நமக்குத் தெரிந்தாலும், பரந்த நம் நினைவு அதனை மட்டும் அண்ட விடாது. எமனின் குரல்கேட்டும் பயம் கூட்டிய அந்த உணர்வினை அழிப்பது வாசி மட்டுமே, அதை வென்றும் ஞாலத்தைத் தாண்டி நாம் வாழ முடிவதும் வாசியால் மட்டுமே ( எமன் – எனும் சொல்லை இறப்பின் அழைப்பு என்று கூட எடுத்துக்கொள்ளலாம்)

38. சிவசித்தரே!
ஞாயிறு சுற்றும் ஞாலம் தனை
ஞானக் கண்கொணா ஞான – திட்டி
ஞானியாக் கியெம்மை ஞான்று பொழுதும்
ஞாப்புகூடி ஞானேந்தி எம்முள்.
– சூரியனைச் சுற்றும் பூமி தன்னை அறிவாகிய பார்வைமூலம் நேரில் பார்க்காமலேயே உணரச்செய்து, பேரறிவை எங்களுள் எல்லா பொழுதும் வலிமையாய் ஐம்புலன்களையும் உள்ளுள் ஊட்டியவரே..

39. சிவசித்தரே!
ஞிமிறா னோம் நின்பாத மலர்தேடி
ஞிமிறா கிநின் தன்திரு – வடிசுற்றி
ஞிமிர் கூட்டி நின்மந் திரம்கூற
ஞிமிர்ந் தோமே வாசியால்
– தேனீயாகினோம் உம் மலர் போன்ற பாதத்தை உணர, தேனீ ஆகினோம் உம் உருவம் தனை மனதால் சுற்ற.. ஒலி கொடுத்தோம் உயிர்க்கு உம் மந்திரத்தால்.. நிமிர்ந்தோமே வாசியால்..

40. சிவசித்தரே!
ஈஞ்சு ஞாங்கள் ஞாப்பு கிட்டும்
ஈஞ்சு ஞாயிறு உள் – ளிடமே
ஈஞ்சும் ஞானி யறி வான்
ஈஞ்சும் வாசிதன் அணுவே
– பேரிச்சம் பழங்களால் வலிமை கிட்டும் என்பார், அது சூரியனின் சுடர் அதிகம் படும் இடத்தில் மட்டுமே கிடைக்கும் என்பார் – என்வே அது கிடைத்தற்கரியதோ என்றும் தோன்றும்… ஆனால் இதேபோல நாம் எல்லாவற்றையும் எண்ணுகிறோம், ஆனால் வாசியால் அறிவுற்றவன் உணர்வான் உணவும், பழமும் அனைத்தும் நம்மைப் போன்ற (உடலை) அணுக்களின் கூடுதலே.. என்று உணர்த்திய உமக்கு நன்றி.

41. சிவசித்தரே!
உஞ்சவிருத்தி செய் தாரே உணர்
உஞ்சவிருத்தி செய் தும்உண – ராவாசி
உஞ்சவிருத்தி செய் வேண் டாமே
உஞ்சவிருத்தி யல்ல வாசி
– இரந்துண்ணும் வாழ்க்கை நடத்துவோரே உணருங்கள், அப்படி எல்லாவற்றிற்கும் பிறரை எதிர்பார்ப்பதால் உணர முடியாது – உண்மையை. பிறரை யாசிப்பதால் உணர முடியாது உங்கள் உணர்வை வாசிமூலம்.

42. சிவசித்தரே!
ஊஞ்சலா னதெம் மனம் நின்னால்
ஊஞ்சலா னோ மேஉம் – மந்திரத்தால்
ஊஞ்சல் நின்றதே எம்புருவ மத்தியில்
ஊஞ்சல் நிறுத்துய தோவாசி.
– அங்குமிங்கும் அலையும் எம்மனமானது உம்மால் சீரான ஊஞ்சலில் ஆடுவது போல் மகிழ்ந்து ஆடியது.. அந்த ஆட்டம் நிறுத்திய இடமோ எம்புருவமத்தி அது நீர் அருளிய மும்மந்திரத்தின் ஆதாரமே.. உணர வைத்த சிவசித்தரின் வாசி யோகக் கலைக்கு நன்றி.

‘ங்’கரக் கவிகள்

‘ங்’கரக் கவிகள்
25. சிவசித்தரே!
அங்கசேட்டை செய்தோம் அங்கணத்தில் புரண்டோம்
அங்கவீனம் குறையச் செய்தோம் – அங்கப்பிரதட்ஷணம்
அங்குரம் சுத்திகரிக்க வில்லையே அங்கதமும்
அங்கலாய்ப்பும் நெருங்காதே அங்கியே
– தீயச் செயல்களைச் செய்தோம் சேற்றில் புரண்டோம் உடல் உறுப்புகளில் உள்ள குறைபாடுகள் நீக்கி அங்கப் பிரதட்சணம் செய்தும் தீரவில்லை, எங்கள் இரத்தம் சுத்தமாகவில்லை, எங்கள் கழுவுகளை எரித்த நெருப்பே நீவிர், உம்மை நெருங்க முடியாதே – வஞ்சப்புகழ்ச்சியும், பொறாமையும் உடையோரால்..

26. சிவசித்தரே!
ஆங்கில மொழிதன்னை வெல்லும் தமிழே
ஆங்கால மதுஅழிக்கும் மாயையை – உணர்தியவா
ஆங்காரம் ஆங்கழிக்கும் ஆக்ஞை வாசி
ஆங்காங்கும் உணர்த்தும் தமிழ்
– தாய் மொழியாம் தமிழின் உண்மை உணர்த்திய சிவகுருவே, தமிழ் மூத்தமொழி என் உணரும் காலமிது, வாசி உணர்ந்தார் தமிழ் உணர்வர் எனும் கூற்றை இவ்வுலகம் முழுதும் பரவச் செய்யும் தமிழ் சித்தரே.sivssiththan 2  (26)

27. சிவசித்தரே!
இங்கள் இசிவு இயைத்தும் இருக்காது
இங்கிதம் ககபரம் உணர்த்தீனீர் – மருந்தே
இங்கு வாசியும் காண்இருள் நீக்கி
இங்குலிகம் உம்முள் காட்டினீரே
– தசைநோய் கண்டு படுக்கையில் விழுந்தோர் பலருண்டு எனினும் அவர்கள் கருத்துணரமாட்டார்… அவர்களுக்கும் உணர்த்தினீரே… பரலோகத்திற்கு, பூலோகத்திற்கும் ஒரே மருந்து அது வாசியே என்றும் கூறி, சாதிலிங்கம் கூட பொருளே, அது உயிர் பெருவது வாசியாலே.. எங்களுக்கு உணர்த்திய கொற்றவரே.. அக, புற இருலை நீக்கியவரே..

28. சிவசித்தரே!
ஈங்குண் காலடிவந் தேனோ ஈன்ற
ஈங்கை யாய்ச்சேர்ந் தேனோ – உணர்ந்து
ஈங்கள் பூவாகி காயாகி கனியாகி
ஈங்கு உணர்ந்தோர் இயற்வாசி
– எங்கோ இருந்து வந்து உன் காலடி சேர்ந்த நோய் தாக்கிய மரக்கன்று நான், என்னை வளர்த்து உயிர் ஊட்டி, இயற்கை உணரச் செய்து, இயல்பாய் வளரச் செய்து உயிர் உணரச் செய்த
“ இயற் கடவுள் நீரே”

29. சிவசித்தரே!
உங்கண் தேடியலைந்து தோற்ற மூடரே
உங்கள் உள்சென்று தேடின் – கிட்டுமே
உங்காரம் உதவாது உண்மை உணர
உங்கைச் கூட வேறே
– உம்மால் உணர்ந்தோமே.. “உண்மை தேடி அங்குமிங்கும் அலையும் மூடரே, உண்மை வாசியே.. உம்முள் சென்று அதைத் தேடு என்று கூறும் சிவசித்தர், “அமைதியே உண்மை என்றுணர்த்தி… உடல்வேறு உயிர்வேறு உணர்த்தினீர்.”

30. சிவசித்தரே!
ஊங்கு மலைதேடி செல்வர் சித்தரே
ஊங்கள் இலையோடி உணர்த்தா – வாசியை
ஊங்கனோர் தலைகோடி கொடா சொத்து
ஊங்கிக் கொடுத்தீர் வாசி
– முற்காலத்தில் மலைகள் தேடிச் சென்றால் காணலாம் சித்தர்களை என்பர், இன்று எங்களோரு ஒன்றாய் நீர் வாழ்வது எங்கள் பாக்கியமே.. முன்னோர்கள் கூட வைத்துச் செல்லவில்லை பெருஞ்சொத்தாம் வாசியை, நீரே அளித்தீரே..

‘க’கரக் கவிகள்

‘க’கரக் கவிகள்
13. சிவசித்தரே!
கடம்பவனத் திலுரைக்கும் கங்காதரனே எல்லாமே
ககனமே அதுநிரைக்கும் வாசியே – கசரத்து
கசிவெளி யேற்றும் கங்காபத்திரமே வாசி
கட்புலனால் கடாட்சம் உணர்த்தியவா
– மதுரையில் வசிக்கும் சிவனின் அம்சமே, ஆகாயம் முழுதும் நிரம்பிய வாசியை உணர்த்த, கழிவுகள் வெளியேற்ற, நீர் விடும் அம்பே வாசியே, உம் பார்வையால் மோட்சம் பெறுவோம்.

14. சிவசித்தரே!
காத்திரந் தனில் காந்திகூட் டியவா
காசினியை நின்காலாடி தன்னால் – காப்புநாண்
காணார் காச முற்றார் உம்மை
காயசித்தி கூறும் காரகனே
– உடல் ஒளியைக் கூட்டியவரே, பூமியைத் தீயவற்றிலிருந்து மீட்க முயர்சிப்பவரே, சளியை உடம்புள் கொண்டவரே குருடர்- அவர்தம் உடல்தனை நல்லுடலாக்கும் சித்தி அறிந்தவரே.

15. சிவசித்தரே!
கிடக்கை யோகிரப் பெயர்சியோ மாற்றாது
கிரகபதி யோகிருத் தியம்கொடா – கிருபை
கிரமம் உணர் வாசியை அது
கிரகிக்குமே வாசி கிளப்புமே
– மனிதனின் உடல் மாற்றம் தன்னை பூமியோ, மற்ற கிரகங்களின் பெயர்ச்சியோ நிர்ணயிப்பதில்லை, சிவசித்தரே – உம்மை பின்பற்றி ஏற்றால் உம்முளிருந்து எம்மை அறியச்செய்து, எம்முள் வாசி கிளம்புமே.

16. சிவசித்தரே!
கீழ்மடை நிலமே நாம்வாசி யறிவா
கீழ்மக்கள் ஒருபெற்றோமே உம் – அணுக்
கீறுவென் றதால் கழிவேஉம் கீல்வாயு
கீழ்கணக்கு உணர்த்திய வா
– அற்பராய் இருக்கிறோம் நாம் வாசியை உணராத போது- தண்ணீரில்லா நிலமதனைப் போல. ஆம், சிவசித்தர் உணர்த்திய வாசி நம் அணுக்களின் பிளவை உணர்த்துகிறது. நம் உடலில் அதிகமாகும் வாதமும் கழிவே என்று அகம், பொருள், இன்பம் அனைத்தையும் வாசி மூலம் உணர்த்தினீரே!

17. சிவசித்தரே!
குபதர்காள் குழீஇ அடைந்து நின்னை
குடந்தாள் நாம் குச்செறிந்தோம் – குசலம்
குதுகலித்து குடும்பியா னோமே குடிகொள்
குடர்குறை சேர்நின்னை குவி
– தீயவற்றை உடலில் கொண்ட நாங்கள் ஒன்றுசேர்ந்து வந்தடைந்தோம் நின்னை, உம்மை வணங்கியதால் உடல் சிலிர்த்தோம் நாங்கள், நலம்பெற்று மகிழ்ச்சியுற்று எங்கள் சுற்றத்தை நன்றாய் கொண்டு செலுத்துகிறோம், எங்கள் குடலிலுள்ள கழிவுகளை நித்தம் வெளியேற்றும் வித்தை உணர்த்திய உம்மைக் கைகூப்புகிறோம்.

18. சிவசித்தரே!
கூழனா யிருந்தோம் கூசிநின் றோமே
கூடகம் நீக்கிஎம் வாசிகூட்டி – யுணர்தியவா
கூர்ப்பு அதூவும் வளர்த்தீரே எம்முள்
கூற்றுவன் தோற்றாலே கூற்றிடமே
– தெளிவில்லாதவர்களாய் வெட்க ஜீவன்களாயிருந்தோம், எம் வஞ்சகம் நீக்கினீர், எங்கள் பிறாணனை உணரச்செய்து, எங்கள் நுண்ணறிவு வளரச்செய்து உணரச் செய்தீரே.. – சிவசித்தரே – இதனால் எங்களின் இறப்பு (மடிந்த அணுக்களின் வெளியேற்றம்) வென்றது யமனையே.

‘அ’கரக் கவிகள்

1 (1612)

‘அ’கரக் கவிகள்

1. சிவசித்தரே!
அக்கினித்தம்பனை தன்னுள்கொண்ட அகர்நிசமே நின்னை
அக்கதைத் தூவி வணக்குகின்றேன் – அறிவே நீர்
அட்டாவதானி யேநீர் அகளங்கன் தானே
அட்டசித்தி உணர்ந்த அசாத்தியமே.
– எம்பிரானை இரவும் பகலும் உம்முள் கொண்டவரே, உம்மை மஞ்சள் கலந்த முழு அரிசி தூவி வணக்குகின்றேன், ஒரே சமயத்தில் எட்டு வெவ்வேறு செயல்களைக் கவனமாகச் செய்யும் அறிவுச்சுடரே, கலங்கமில்லாதவரே, மற்றவரால் முடியாதது உம்மால் முடியும் அது நீர் உணர்ந்த எண்வகை சித்திகளே.

2. சிவசித்தரே!
ஆழித்தி தடுக்கத தெரிந்த ஆருடனே
ஆரண்யகம் ஆணிவேரல்ல வேநம் – ஆசனமே
ஆசறுதி அதுஇடும் கட்டளையாம் ஆக்ஞை
ஆகிருதி அற்றதே வாசி
– உலகம் அழியக்கூடிய காலத்தில் தோன்றக்கூடிய பெருநெருப்பைத் தடுக்கும் சூட்சுமம் அறிந்த ஜீவமுக்தனே, வேதங்களை விட நம்மை நாமே ஆழமாக உணர உதவுவது நீர் பயிற்றுவிக்கும் ஆசனமே, எங்கள் உடலுக்கு நீர் உணர்த்திய முடிவு எனும் தொடக்கமே, அது உருவமற்ற வாசியே.

3. சிவசித்தரே!
இனனின் றேல்வாசி இன்றேல் உண்மைநீகூற
இன்னில் லாவிடிலும் வாசி – உண்டுகாண்
இறைஞ்சலர்க்கு இறே இறைஞானம் காட்டினீர்
இடங்கமாய் செதுக்கினீர் இந்தியத்தை.
– சூரியன் இல்லையேல் எதுவும் இல்லை என்று யாவரும் கூற வாசி இல்லையேல் எதுவும் இல்லை என்றீரே, வாசி வணக்காதோர்க்கு அவருள் இறைவனை அறியும் அறிவை உணர்த்தி – சிற்பியாய் இருந்து செதுக்கினீர் எம் புலன்களை.

4. சிவசித்தரே!
ஈடேற்றினீரே எம்மை வாசிவழி எனும்பெரு
ஈண்டுநீர் நோக்கி மூடராம் – உறவாம்
ஈனோர் எல்லாம் ஈயினும் தீரவில்லை
ஈனல் செய்தீர் ஈளையை.
– பித்தராம் எங்களை வாசி உணரவைத்து, வழி தவறவிடாமல் உயர்வடையச் செய்யும் சிவசித்தரே, கடலளவு ஈகை செய்தும் இவ்வுலக மக்கள் விடை கிடைக்காத நோயால் கோழையை நீக்கி புதிதாய் பிறப்பித்தீரே!