சிவசித்தரின் பாமாலை|004|

sivasiththan (june92013) (15)சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்,

 கால் புகட்டி கலி அகற்றி உள்ளுள்ளே

வாசி செலுத்தி ஊழ்வினை வந்த பிணிஅகற்றிய

தூயனே ! எம் ஆசானே ! சிவகுரு சித்தனே !

உம்தாழ் பணிந்து நீர்தந்த கலை

பயின்றால் அலைகடலாய் எண்ண அலைகள்

எழுகின்ற ஆழ்மனமும் அமைதி அடையும் !

ஆயிரம் ஆயிரம் மனிதர்கள் நித்தம்

நித்தம் மகிழ்கின்றனர் வாசியோக

குருகுலம் தன்னிலே ! வந்து பயின்று பார் மனிதனே !

உன் அகம் அறியும் பேரானந்தமதையே ! 

 

**********************

 

உன்னுள்ளூள்ள உத்தமனை அகக்கண்ணில்

கண்டு ஆனந்தமடைய அவனியிலே

வழியுண்டோ ! உண்டென்பர். சிவகுருவாம்

சிவசித்தனின் உயிர்க்கலையெனும் வாசிகலை

அறிந்து வாசியான சிவத்தை உணர்ந்தவர்கள்

இவ்வுண்மையை கண்டிடலாம் வாசியோக குருகுலமதிலே !

 

**********************

 சூளிக் கொண்டையிலே கங்கைதனை சூடியவா !

ஆழி நிறத்தைப்போல அங்கநிறத்தைக் கொண்டவா !

சூழும் வினைதன்னை சுட்டெரிக்கும் சுந்தரனே !

உம்மை சுளிமுனையின் சூட்டினிலே உணர

வைத்தார் உயிர்க்கலையெனும் வாசியாலே

எம் ஆசான் சிவகுரு சிவசித்தன் !

 

**********************

 

ஆடி அடங்கும் வாழ்க்கையிலே ஆழ்மனதின்

ஆட்டத்தை அடக்கி அமைதியதைத் தருகின்ற

இறைகலை எதுவன்றோ ! ஓர் அறிவை உட்புகுத்தி

ஓலமிடும் மனமதனை ஒருமைப் படுத்தும்

வாசி கலையன்றோ ! அக்கலைதன்னைப் புகட்டி

மனிதனையும் புனிதனாக்கும் நற்செயலன்றோ !

சிவகுரு சிவசித்தனின் வாசிகலை !

 

**********************

 

தீயவழிசென்று பரிதவிக்கும் மனிதனுக்கும்

நல்வழிவகுத்து நல்லறிவைப் புகட்டி வரும்

நாயகனே ! வாசிகலை வித்தகர் சிவகுரு

சிவசித்தன் ! அவர் வகுத்த விதிமுறைப்படி

வாழ்ந்து வந்தால் நாளும் கிழமையும்

நவகோளும் நன்மையளிக்குமே !

 

சிவகுருவின் பக்தன்

  – ம. சண்முக பாண்டியன்,

சிந்தாமணி,மதுரை.

சிவசித்தரின் பாமாலை|003|

 

சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்sivssiththan 2  (7)

 

அடிமனதில் எழுகின்ற தேவையற்ற ஆசைகளும்

சிவகுரு சிவசித்தனின் வாசியோகக் கூடத்தின்

படியேறி குருபாதம் தன்னை பணிந்து

பணியும்போது ஆழ்மனது நிறைவுற்று பேரானந்தமது

மனதிலே நிலவுமே ! நித்தம் நித்தம்

காணும் உண்மையன்றோ ! ஸ்ரீ வில்வ குருகுலமதிலே !

 

**********************

 

சிவகுரு சிவசித்தன் உரைக்கின்ற ஒவ்வொரு

வார்த்தையும் ஆழ்மனதில் இருந்து வருகின்ற

உண்மைக்கூற்றே ! உயிர்க்கலையை

பயின்று வாசியை உணர்ந்தவர்க்கு உளமது

சமாதானம் ஆகுமே ! மனநிறைவும் வந்திடுமே !

நிலைமாறும் மனமதுவும் நிறைபெற்று நின்றிடுமே !

சிவசித்தனின் வாசிகலை பயில்பவர்க்கே !

 

**********************

 

வாழ்விலே வரும் உயர்வையும் தாழ்வையும்

சமமாக பாவித்திடுவான், வாசியோகம்

பயின்றவர். சிவகுரு சிவசித்தனின் ஓர்

அறிவாம் வாசியினை உணர்ந்தவர்க்கு

உள்ளமான ஆழ்மனதில் அமைதியானது

எந்நாளும் நிலைத்திடுமே !

**********************

 

அணுவுக்குள் அணுவாய் அணையா விளக்காய்

சுளிமுனை எனும் சிவஜோதியை நெற்றியிலே

மிளிர வைத்த சிவநேசனே ! வாசி அருளும்

சிவசித்தனே ! சிந்தையிலே சிதறுகின்ற

எண்ணமதை நிலைநிறுத்தி ஆழ்மனதில்

அமைதிதனைத் தந்தருளும் சிவகுருவே போற்றி ! போற்றி !

சிவகுருவின் பக்தன்

 – ம. சண்முக பாண்டியன்,

சிந்தாமணி,மதுரை. 

 

மு. சுரேஷ்குமார்

sivasiththan (june92013) (10)

 

வாசியோகப் பாடல் : 1

மெய்ஞ்ஞானம் தனை எமக்கு அருளும் எம் சிவகுருவே !

எஞ்ஞானம் இல்லாத எமக்கு மெய்ஞ்ஞானம் அருளும்

      எம் சிவகுருவே !

விஞ்ஞானம் அறிந்தோர்க்கும் மெய்ஞ்ஞானம் ஒன்றே

சிறந்தது என எமக்கு உணர்த்திய சிவகுருவே !

என் அறியாமையை எமக்கு அகல்விக்கும்

      எம் சிவகுருவே !

சிறந்த அடியார்க்கு அடியாரே என எமக்கு உணர

வைத்தாய் எம் சிவகுருவே !

 

******************

 

என் வாசிக்கு உருவம் உண்டு கண்டுகொண்டேன் !

என் எண்ணமே உருவம் என்று உணர்ந்தேன் !

என் எண்ணமெல்லாம் ஈசனைக் கண்டேனே !

      சிவசித்தன் கூறும் வாசியில்

என் வாசியே ஈசன் னென்று உணர்ந்தேனே !

      சிவசித்தன் கூறும் வாசியில்

சித்திகள் பல இருந்தாலும் என் சிந்தைக்கு உணர்ந்த

      சித்தி வாசியே ஈசனே எம் சிவசித்தனே சிவகுருவே !

 

 

வாசியிற் கலந்த ஈசனே !

அவர் அவர் எண்ணங்களான நாதனே !

மனித எண்ணங்களின் சூட்சுமமாய் விளங்கும் வாசியே !

மனித உயிரின் சூட்சுமமான வாசியே ஈசனே !

உன்னை (வாசி) அறிந்தாலே உண்மை உணர்வீரே !

உலகில் வேறெதுவும் தேவையில்லையே !

வாசியோகத்தை எங்களுக்கருளிய ஈசனே !

எம் சிவகுருவே ! சிவசித்தனே !

 

******************

 

சிவகுருவே சரணம் !

 

எம் அணுக்கள் ஒன்றே என் ஆன்மாவும் ஒன்றே !

எம் இறையும் எம் சிவகுருவும் ஒன்றே !

வாசியின் உண்மை என்பதும் ஒன்றே !

சிவகுரு விதியின் ஒழுக்கம் என்பது ஒன்றே !

இவ்விரு விதியை சிவகுரு கூறும் வாசியில்

உணர்ந்து பார்ப்பவர் வாழ்வும் நன்றே !

 

 

******************

 

உண்மையான வாசி தன்னை அறிய வைக்கும் வாசி !

நன்மையான வாசி நல்லொழுக்கத்தை கொடுத்த வாசி !

மனிதன் இயற்கையாக வாழ ஈசன் கொடுத்த வாசி !

சிவகுரு அறிந்த வாசி !

பிணியோடு வருவோர்க்கு பிணிதீர்க்கும் சிவகுரு அறிந்த வாசி!

நன்மை வேண்டி வருவோர்க்கு இன்மையிலும்

நன்மை கொடுத்த வாசி சிவகுரு அருளிய வாசி !

தனக்குள் உள்ள இறைவனை உணர வைத்த வாசி

சிவகுரு இவ்வுலகிற்கு அருளிய வாசி. 

 

–         மு. சுரேஷ்குமார்.

 

சிவகுரு சிவசித்தரின் பாடல்கள் – மா.மணிகண்டராஜன்

வாசியோகப் பாடல் : 1

குருவே சரணம்!!

 

     sivssiththan 2  (9)      எல்லா பொருளிலும் காட்சி அளிப்பவரே !

                எல்லையில்லா எண்ணங்களை படைப்பவரே !

           எங்களுக்குள் ஓளியை ஏற்றிய ஈடில்லாதவரே !

                எங்களின் எண்ணத்திலும் செயலிலும் ஒன்றானவரே !

           கழிவுகளை வெளியேற்றி எங்களுள் வெளிச்சத்தை காட்டியவரே !

                காந்தமான (வாசியை) சக்தியை தன்னுள் அடக்கியவரே !

           வாசியின் தலைவனே ! எங்கள்

                                      சிவகுருநாதனே !

                                   

                    குருவே சரணம் !

                        குருவடி சரணம் !

               

           மாந்தர்க்கு மனம் உண்டு,

                                செயல் இல்லை !

           மாந்தருள் கழிவுண்டு,

                                வெளியேற வழி இல்லை !

           அளவில்லா சக்தியான வாசியுண்டு,

                                ஆனால் மாந்தரின் வசம் இல்லை !

           சிவகுருவான ஒளியுண்டு,

                                மாந்தர்க்கு பார்வை இல்லை !

           அளவாய் உண்டு, உண்மை கொண்டால்

                பரம்பொருளான “சிவகுரு சிவசித்தரின்” ஆசியுண்டு !!                          

 

                                       சிவகுருவின் ஆசியுடன்,

                                       மா.மணிகண்டராஜன்

                                        வில்வம் எண்: 13 11 001

சிவசித்தரின் பாமாலை|002|

003sivasiththanசிவகுரு சிவசித்தர் தாள் சரணம்

 

அமைதியின்றி அலைகின்ற மனதிற்கும்

ஆறுதல் தருகின்ற திருத்தலம் எதுவோ !

அகசுமை இறக்கி சுகம் தருகின்ற

சுந்தரன் யாரோ ! ஆழ்மனதிற்கு அமைதிதேடி

அலையாதே வீணே ! ஸ்ரீ வில்வம் யோகம் தேடி வா

அமைதியான பூரண நிலையதனை !

 

*************************

 

ஆயிரம் முறை ஆலயங்களுக்குச் சென்று

ஆண்டவனைத் தொழுதாலும், படிகள்பல ஏறி

மலைகளுக்கு சென்றாலும் அடங்காத ஆழ்மனதில் எழும்

அலைகளுக்கு, அமைதி அடைய எம் ஆசான்

சிவகுரு சிவசித்தன் செப்பி வைத்த மந்திரத்தை

மனதில் பதித்தாலே ஓயாத மன அலையும் ஓய்ந்து

ஓம்காரம் உள்ளூள் புகுந்து பூரண அமைதி பெறுமே ! 

 

*************************

 

கண்கள் இமைமூடி தவநிலையில் இருந்தாலும்

ஆழமனது அமைதியில்லாது அலைபாயும்,

சிவசித்தனின் வாசிகலை அறியார்க்கு !

வாசியறிந்தவனுக்கு வசப்படுமே அமைதியின்

பூரண நிலையான நிசப்த நிலை சிவசித்தனின்

மந்திரத்தை செபித்து உயிர்கலை புரிபவர்க்கே

இறையுணர்வு பூரணமாய் கிட்டிடுமே ! 

 

************************* 

மனக்குறையும் தீர்ந்திட்டே மனநிறைவும்

வந்திடுமே சிவசித்தன் வாசிகலையிலே !

 

உண்ணும் முறை தன்னை உணர வாய்த்த உத்தமன்

எம் ஆசான் சிவகுரு சிவசித்தரே !

 

சிவசைவத்துய்ய மாமணியாய் மதுரையம்பதியிலே

வீற்றிருக்கும் வித்தகரே சிவசித்தன் !

 

பட்டினியாய் கிடந்தாலும் கிட்டிடாத பரவொளியை   

வாசியிலே அறிய வைத்தவரே சிவசித்தர் !

 

ஆழ்மனத்தின் அழுக்குகளையும் அடியோடு ஒட்டிவிடும்

சிவசித்தனின் வாசியெனும் பேரொளியே !

 

பேரானந்தம் பேரூற்று பெருக்கெடுக்கும் நெஞ்சமதில்

சிவசித்தனின் வாசிகலை உணரும்போதே ! 

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

சிவசித்தரின் பாமாலை|001|

 சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்.

sivssiththan 2  (10)

 

காயக் கழிவோடு வாழத் தெரியாமல் வாழ்வதனை

வாழ்ந்து கொண்டு உயிரானது உடலில்

இருந்தும் நடைபிணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்

வாசியறியா மானிடர்களே ! எம் ஆசான்

சிவசித்தன் உந்தன் நாடிபார்த்து சிவமாகிய

வாசியை உடலில் ஏற்றி உம்மை தூய்மைப்படுத்தும்

தூயவரான சிவசித்தன் வாசிகலை பயில்மனமே !

 

**************************

 

தேகசக்தியை தந்து தெய்வ சக்தியை

அருளி பரமுக்தியதைக் கொடுத்து நாளும்

பொழுதும் நயம்பட உம்மைக் காத்து

உம்மை உனையே அறியச் செய்யும்

அருள்கலையே எம் ஆசான் சிவகுரு

சிவசித்தனின் உயிர்கலையெனும் வாசிகலையாம் !    

 

**************************

 

அகிலம் காக்க அவதரித்த ஆதியின்

புதல்வரே சிவகுரு சிவசித்தரே ! உந்தன்

மகிமை அறியாமல் அலைகின்றனர் அவனியிலே !

மாந்தர்கள் அங்கமதில் பிணியோடு

பிணிபோக்கும் மருந்தாய் சிவசித்தர் இருக்கையிலே !

 

**************************

 

ஒழுகின்ற விந்துதனை ஒழுங்குறுத்தி

தோய்வான மேனியையும் பொழிவாக்கி

வழுவிழுந்த மனதையும் நிலையாக்கி அறியாது

முன்செய்த வினைகள் அத்தனையும்  

பரிதிமுன் கண்ட பனி போல விலகியதே !

சிவசித்தனின் திருவடி பணிந்து வாசிகலை

அறிந்த தருணமதிலே !

சிவகுரு பக்தன்

 – ம. சண்முகபாண்டியன்.