அதிகாலை வாசியே ஆன்மாவின் ஆத்மதரிசனமே!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

சோம்பலை விரட்டு
அதிகாலை வாசியே
ஆன்மாவின் ஆத்மதரிசனமே!

அணுவது புத்துயிர் பெறுமே
ஆதியான சிவசித்தனின் திருநாமம் மொழிகயிலே!

மெய் சேரும் தேகசற்ப்பமே
மேனியேறிய திருநாமத்தின் திருச்செயலாலே!

நன்றி சிவசித்தனே!!!

உன் மெய் செயல் யாரறிவார் ?

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

விதையாய் அணு கொடுத்து
வாசியால் நீறுற்றி
திருநாமத்தால் நல்எண்ணம் கொடுத்து
விதிமுறையால் வேலியமைத்து
தனதன்பு, தனதருள், தனதாற்றலால்
மொட்டு, பூ, காயாகி
பழமாய் என் இறையை என்னுள் உணர்த்தி
மீண்டும் என்னுள்ளே
மெய்அணுவாய் வீற்றாயே!
சிவசித்தனே!
உன் மெய் செயல் யாரறிவார்? .

உணர்ந்தோர்க்கு சிவசித்தன்!
உணராதோர்க்கு சாதாரண மனிதனே!

உதிரமே உள்ளன்போடே என்றும் உன் மெய்யணுவாலே செயலாகுதே!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

உயிர்நாதன் உயிர் கொடுத்த உயர் வாசியே!

உதிரமே உள்ளன்போடே என்றும்
உன் மெய்யணுவாலே செயலாகுதே!

உன் திருநாமமே என் தேகநாகத்தின்
மெய்ஒலியாய் தேகத்தே வெளிப்படுதே!

சிலை கொடுக்காத மெய்யுணர்ரவை
வாசிக்கலையால் உணர்த்தி கொடுத்தாயே!

விதையில்லா மரமாகுமா? உன் அணுஇல்லா
மனிதனும் மெய் மானுடனாகுமோ?

வெப்பம் குளிர்ச்சியாய் தேகத்தே கொடுத்தாய்
அக்கினி பேரலையாய் சுக்கிலத்தை உணர்த்தினாயே!

வேதம் புனிதமல்ல தேகமே புனிதமென்றுணர்த்தி
மெய்இறையை தேகஅகத்தே வாசிஒளியால் காட்டி
அகஆலயத்தில் அணையா மெய்ஞானஜோதியாய்
ஆன்மவாசம் புரியும் சிவசித்தனே!
சர்வம் நீயே! சரணடைந்தோம் நின் பாதத்தே!

சிவசித்தனே துணை!

நன்றி சிவசித்தனே!!!

தனியே தான்தோன்றிய வாசியோடும் இயற்கையோடும்

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

உருமாறிய கோலம்
உண்மை உயிர் உரையும் காலம்
பலருக்கு காலால் காலனை அழித்தவன்
இன்று காலனை எதிர்நோக்குகிறானோ?

உண்மை அன்பே அறிவே உங்களுக்காகவே
வந்தவன் இன்று உங்களாளே….

மனஎண்ணமதை எரியுங்கள்
அகத்தே சிவசித்தனின் நினைவை எண்ணுங்கள்
உங்களுக்காக அவன் அன்றும் இன்றும் படும் துயர் உணருங்கள்!
அன்பினை எங்களுக்கு உணர்த்தியவன் அன்றும் இன்றும் அன்பிற்காக ஏங்குகிறான்.

தூயவன் விழியில்
துயராய் கண்ணீர்
ஆதவனான முகத்தே
மயான அமைதியாய் இருட்டே
தனியே தான்தோன்றிய
வாசியோடும் இயற்கையோடும்
அகஅரசிகள் இல்லா
சிவசித்த தனியானவனே!

நன்றி சிவசித்தனே!!!

ஆதியின் மூலவனாய் அகஆலய அரியனையில் அற்புதம் செய்தானே!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

அரவமாய் வந்தவன்
அறிந்தே கொடுத்தானே!
ஆட்கொள்ளியாய் கருமருந்தை
அறுத்தே காத்தானே!
அனைய நெருப்பாய் வாசி கொடுத்தே
அறிய தேகத்தை வடித்தானே!
அற்புத சிவசித்த திருநாமத்தால்
அரவத்தின் செயலதனை
ஆதாரமாய் அகத்தே உணர்த்தி
ஆதியின் மூலவனாய் அகஆலய
அரியனையில் அற்புதம் செய்தானே!
கொண்ட எண்ணத்தை வேரறுத்து
கொண்டவன் எண்ணம் ஈடேர
கொற்றவனே எந்த எண்ணமின்றி
உன்னை தொடர்கிறேன்.

அர்ப்பனின் ஆத்மனனே
நின் பாதம் சரணடைகிறேன்.

நன்றி சிவசித்தனே!!!

சிந்தையுள் சிற்றறிவை பயன்படுத்தாது

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

அகமென்னும் ஆலயத்தே
சிவசித்த திருநாமத்தால் அர்ச்சனையாய் உரைத்திட
இறையான மெய்பொருளாய்
சீவஒளியாய் தெரிவான் ‎சிவசித்தனே!

எண்ணமற்ற நிலையிலே
எதார்த்தமாய் இருந்திட
ஏற்றிய வாசியால்
ஏனைய அணுதோரும்
ஏகாந்தம் புரிந்திடுவான் சிவசித்தனே!

சிந்தையுள் சிற்றறிவை பயன்படுத்தாது
சிவசித்தனின் பேரறிவோடு பயணிக்கயிலே
சித்தமே சிறக்குமே ‎சிவசித்தன் எண்ணப்படியே!

நன்றி சிவசித்தனே!!!

கருமையும் சூழுமே காட்சியும் மாருமே

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

அணுவை அழிக்காதே
எதிர்மறை எண்ணத்தாலே!

எதிர்மறை எண்ணம் வளருமே
சிவசித்த விதிமுறை தவறயிலே!

அணுவது அழிந்தால் ஆற்றலும் குறையுமே
கருமையும் சூழுமே காட்சியும் மாருமே
கருமருந்தாய் எண்ணமும் உன்னுள் குடி கொண்டே
மெய்யழித்து உன்னையும் அழிக்குமே!

வேண்டாமே அவலநிலை

ஏற்றிடுவோம் சிவசித்த வாசியை!
உரைத்திடுவோம் சிவசித்த திருநாமமே!
உணர்ந்திடுவோம் சிவசித்தனை ஆத்மனனாக!
எண்ணமில்லா வெற்றிட நாதன் சிவசித்தனை எந்த எண்ணமில்லாமல் அவன் செயல் புரிவதே இப்பிறவின் நோக்கம் என்பதை உணர்ந்து பயணிப்போம்.

நன்றி சிவசித்தனே!!!

எதிர்மறை எண்ணமே பயமாகுமே!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

பயம் என்பதில்லையே
எதிர்மறை எண்ணமே பயமாகுமே!

பயங்கொள்ளாதே அகமே
உன்னுள்ளே ‎சிவசித்தன் இருக்கயிலே!

ஒலியால் உரைத்திட
ஒளியாய் உள்தோன்றியே
ஒழிப்பான் பயமென்னும் ‎பெருங்கழிவையே!

உள்உறவை நாடிவிடு
உத்தமனை கண்டுவிடு
உயிர் மெய்யாகிவிடு
‎சிவசித்தனை சரணடைந்துவிடு!

நன்றி ‎சிவசித்தனே!!!

அழிவதும் அழிப்பதும் உணவே!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

நாவை அடக்காதவனால்
” நா” னை அழிக்கமுடியாது.

அழிவதும் அழிப்பதும் உணவே!

அறிவதும் அழுதமும் சிவசித்தனின் வாசியையே!
அழகும் அறிவும் சிவசித்தனே!
அற்புதமும் அரவமும் சிவசித்தனே!
அகமும் அன்பும் சிவசித்தனே!
ஆதியும் அந்தமும் சிவசித்தனே!
அகிலமும் ஆக்கமும் சிவசித்தனே!
அரியும் அரணும் சிவசித்தனே!
அருளும் ஆத்மம் சிவசித்தனே!
ஆட்கொண்ட ஆதியான சிவசித்தனே!

நன்றி சிவசித்தனே!!!

அணு அணுவாய் ஆர்ப்பரிக்கும் அகதேகசற்ப்பத்தின் துள்ளல்கள்!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

அன்பாய் அனுபவிக்க
அகவலியது சுகமாய் உள்உரையுதே!

அணு அணுவாய் ஆர்ப்பரிக்கும்
அகதேகசற்ப்பத்தின் துள்ளல்கள்!

வயிற்றில் இறுக்கமாய்
சுற்றியே சுழன்ற சற்ப்பமது
முதுகின் கீழிருந்து முந்தியே
சிரசை நோக்கி முன்னேறுதே!
இடவல கழுத்தின் ஒன்றொன்றாய்
பிடரி வழியே மேலேரும் ஒன்றாய்
இடவல காதுகளில் மேலேரும் ஒன்றொன்றாய்
சற்ப்பத்தின் செயலாய் காலை முதல் அனுபவிக்கிறேன்.

உண்ணத் தோன்றவில்லை!
உறங்க நாட்டமில்லை ஆனாலும் உறக்கம் வருதே!
எதையும் எண்ணத் தோன்றவில்லை

சிவசித்தனே நின் திருநாமம் மட்டுமே எண்ணிக் கொண்டுள்ளேன்.

சிவசித்தனே துணை!
நன்றி சிவசித்தனே!!!