சிவசித்தரின் பாமாலை|003|

சிவகுருவே சரணம்

அல்லலுற்றவற்கு அரு மருந்தாம் எம் வாசி
ஆற்றலை பெருக்கும் அமிர்தம் எம் வாசி
இன்னலைப் போக்கி இன்பமளிக்கும் எம் வாசி
ஈசனும் சிவசித்தனும் ஒன்றே என உணர்த்திய எம் வாசி
உன்னதம் மந்திரத்தை உணரச் செய்த எம் வாசி
ஊனை உருக்கி உள்ளொளி ஏற்றும் எம் வாசி
என்றும் பதினாறு இளமை அளிக்கும் எம் வாசி
ஏழு ஜென்மத்தின் புண்ணியம் எம் வாசி
ஐந்தெழுத்து மந்திரத்தை அறியச் செய்த எம் வாசி
ஒப்பில்லை இதற்கு இணைத்துக்கூற எம் வாசி
ஓங்காரத்தை என்னுள் உணரச் செய்த எம் வாசி
ஒளஷதம் உடல் பிணியை நீக்கும் எம் வாசி
அக்தே எம் ஆற்றலுக்கு நிகர் வேறு இல்லை என்ற எம் வாசி

சிவசித்தரின் பாமாலை|002|

சிவகுருவே சரணம்

1. சித்தத்தில் நிறைந்திருக்கும் சிவகுருவே
சிந்தனையை தூண்டி விட்ட சிவகுருவே
சீரும் நாகம் மகுடி கேட்டு ஆடுவதுபோல்
உம் மந்திரத்தில் கட்டுண்ட என்னை ஆடவைத்தீரே
எண்ணத்தில் உன்னை வைத்தால் சிவகுருவே
என் செயலும் சிறப்படையும் சிவகுருவே
உம்மால் முச்சுடரும் அறிவே சிவகுருவே.

IMG_20150409_0619572. உடல் நலம் தேடி
உம்மை நாடி வரும் மானிடருக்கு
வாசி என்ற அமிர்தத்தை கொடுத்து
வாழ வைக்கும் சிவசித்தரே
பணத்தால் உம்மை அடையமுடியாது
நல்ல குணத்தால் உம்மை உணரமுடியும்
உமக்கு ஜாதி மத பேதமில்லை சிவகுருவே
ஆணுக்கு, சிவனாக
பெண்ணுக்கு சக்தியாக வழிகாட்டும்
அர்த்தனாதீஸ்வரரே
உம்மை அறிய என் ஆயுள்காலமும்
போதாது சிவகுருவே.

*********************

சிவசித்தரின் பாமாலை|001|

சிவகுருவே சரணம்

நோய் என்ற துன்பம் தாக்கி
ஓடி வந்தேன் சிந்தாமணி நோக்கி
அன்னையாய் என்னை அரவணைத்தீர் சிவகுருவே
அன்புத்தாய் அறிவாள், சிசுவின் வேதனையை
என் துன்பம் நீர் அறிந்து
எனக்கு தந்தீர் பினியில்லாத பெருவாழ்வே
மெய்யே உண்மை என்று உணர்த்தினீர் சிவகுருவே
எழுத்தறிவித்தவன் இறைவன் என்பது, பழையமொழி
என் அறிவுக் கண்ணை திறந்து என்அக இருளை
நீக்கியவர் என் ஆசான் சிவகுருவே
என்று நான் அறிந்தது பொன்மொழி

பாசுரம் பல பாடினேன்
பரமனையும் தேடினேன்
ஆலயம் பல நாடினேன்
ஆண்டவனை வேண்டினேன்
அறியவில்லை இறைவனை
உணர்ந்தேன் சிவசித்தரை
உணர்த்தினார் பரமனை பாமரனுக்குள்.

******************

சேவையாளர்,
D.பத்மாசினி
வி.எண்: 12 05 126