சிவசித்தரின் பாமாலை|003|

சிவகுருவே சரணம்

1. உண்ணா உணவை உண்டு நம் எண்ணத்தை சிதைத்தோமே!
நம் எண்ணத்தில் பலகுறை வைத்து பரிகாரம் தோஷம் என்றோமே,
உண்ணும் உணவை அறிந்தோமே! – சிவகுருவின் வாசியோகத்தால்
நம் எண்ணமும் சீர் பெற்றதே ஒழுக்கமும் நிலை பெற்றதே!

FB_IMG_139234077929618272. உண்ணும் உணவே “கழிவு” என்று அறிந்தோமே,
சிவகுருவின் வாசியோகத்தில்
உண்ணும் உணவால் பல குறை உன் மக்களுக்கும்
என்று உரைக்கச் சொன்னாரே சிவகுரு சிவசித்தர்
பெருஞ்சொத்து சேர்க்க வேண்டாம், உன் மக்களுக்கு
சிவகுருவின் வாசியோகத்தால் உன் கழிவகற்ற
சிவகுருவின் வசியோகத்தால் உள்ள ஒழுக்கத்தை நெறிப்படுத்து
பெருஞ்சொத்தாக மாறுமே உன் சந்ததியினருக்கு.

3. மகளிரே! மாதவிடாய்ப் பிரச்சனையால் துவண்டு போனீர்!
நிரந்தரத் தீர்வு கிடைக்காமல் பல வைத்தியரை நாடிச் சென்றீர்!
சந்ததி இல்லாமல் வருந்தி நின்றீர்,
நிரந்தரத் தீர்வு கிடைக்குமே சிவகுருவின் வாசியோகத்தால்
உண்மையை உணர்ந்து சொல்கிறேன் இப்பிரச்சனையில்,
இருந்து மீண்டு வந்தவள் என்பதால்!

******************

சிவசித்தரின் பாமாலை|002|

சிவகுருவே சரணம்

1. எல்லா உயிர்களிடத்திலும் உறையும் இறையே!
ஏன் இந்த ஏற்றத்தாழ்வு என்று ஏங்கி நின்ற வேளையிலே!
கர்மமோ, பாவமோ என்று நொந்து நின்ற வேளையிலே!
அறிந்தோமே சிவகுரு சிவசித்தரின் வாசியோகத்தை!
அனைத்திற்கும் தீர்வு கிடைத்ததே சிவகுரு சிவசித்தரின் வாசியோகத்தில்!
சிவகுருவின் சித்தியால் நம் சித்தமும் தெளிந்ததே!

2. “கருச்சூழ்”பை கொண்ட மங்கையரே!
கருவைச் சுமந்ததினால் நீ “தாயன்றோ”
கருப்பையில் கழிவை சேர விடலாமோ!
கழிவில் உயிர் வளருமோ!
கருப்பையை நீ எடுத்தால் நீ எவ்வகை!
கழிவகற்றி கருப்பையை காப்பாயே!
எம்சிவகுருவின் வாசியோகத்தால்!

3. “உடல் பருமன்” ஒரு நோயல்ல!
கழிவே என்று உணர்த்தினாரே எங்கள் சிவகுரு சிவசித்தர்.
கழிவகற்றும் கலையை அறிந்தீரோ!
எம் சிவகுருவின் வாசியோகக் கலையைத் தவிர!
பல மையங்கள் நாடிச் சென்றோமே!
எங்கும் கழிவுகள் அகலவில்லையே!
சிவகுருவின் வாசியோகத்தால் நம் – கழிவகன்று
உடலும் கரைந்ததே! உள்ளமும் உயிர்ந்ததே!

4. கல்லுக்குள் கண் கொண்டு பார்க்கும் மானிடா!
உன் மெய்யினுள் கண் வைத்து பார்த்ததுண்டா!
உன் மெய்யினுள் குறை வைத்து கல்லைப் பழிக்கலாமோ!
மெய்யினுள் மெய் உணர்வாயே சிவகுருவின் வாசியோகத்தால்!
அக்கல்லும் உன் மெய்யினுள்ளே என உணர்த்திடுவாரே எங்கள் சிவகுரு!

5. எல்லாம் அறிந்தும் அறியாதவராய்!
எல்லாம் உணர்ந்தும் உணராதவராய்!
எல்லாம் இருந்தும் இல்லாதவராய்!
எனக் கருமையுள் கரைந்த பிரம்மமே – எங்கள் சிவகுரு

எல்லாப் புகழும் சிவகுருவுக்கே.

சிவசித்தரின் பாமாலை|001|

சிவகுருவே சரணம்
சிவகுருவே,
அண்டமும் பிண்டமும் ஒன்று என்றாய்,
அரியும் சிவனும் ஒன்று என்றாய்,
எண்ணமும் செயலும் ஒன்று என்றாய்,
வாசியும் வட்டமும் ஒன்று என்றாய்,
அனைத்தும் தானாகி ஒளியாகி நின்றாய்,
உணர்ந்தவனுக்கு “ஒளியாகினாய்”
உணராதவனுக்கு “நெருப்பாகினாய்”

2 சரணடை மனமே சிவகுருசிவசித்தரை – சரணடை மனமே,
ஆசை ஒழியும் ஆணவம் அழியும்,
பேசா மொழியும் (வாசி) நீ அறிவாய்
ஆன்மா சக்தியும் நீ உணர்வாய்
இயற்கையும் இறைவனும் – உன்னுள் ஒளியாய்

3 உணவால் அழிந்தோம்
எண்ணத்தில் மடிந்தோம்,
சிவகுருவே,
உங்களின் வாசியால், உயிர் பெற்றோம்.

4 ஆதி குருவான, எங்கள் சிவகுருவே
அனைத்து ஆன்மாவிற்கும் தந்தையானவரே
உன் அக ஆற்றலை உணர்த்துபவரே
பர – தத்துவத்தை உணர்த்தும் பரம்பொருளே,
தன்னுள் தன்னை மறைத்து வைத்திருக்கும் – பேரொளியே
சிவனாய் நின்று – சிவத்தொண்டு புரியும் – சிவநேசனாரே!

***************************

K.B. சுபாஷினி
வி.எண்: 13 02 1௦6