இழிவாய் இருந்த எம் எண்ணம் அழித்தே

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

அதிகாலையில் எழுந்தோம் ஆதவனுக்கும் முன்னே
இயற்கையின் எழிலை பருகிய பின்னே
வாசியால் சுவாசத்தை உள்ளிளுத்தோமே
உடல் அழிந்தே வந்த தேகத்தை கொண்டே
இறையருளாய் வந்த சற்பத்தை கண்டே
படைப்பின் இரகசியம் அறிந்து கொண்டோமே…..

கழிவாய் இருந்த எம் உடல் அழித்தே
இழிவாய் இருந்த எம் எண்ணம் அழித்தே
புதிதாய் எம்மை படைத்த பரம்பொருளே
நின்திருநாமம் செப்பிடல் காப்பாய் உடனே
இயற்கையின் இறைவா நின் மலரடி சரணம்

ஓம் சிவசிவ சிவகுருவே ஓம்

ஜாதகம் அது பாதகம்

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

ஜாதகம் அது பாதகம்

சதுர கட்டத்த போட்டு

ஒம்போது கட்டமா பிரிச்சு

மூடநம்பிக்கையை வளத்து

முன்னேற விடாம தடுத்து

மாயத்தால உன்ன வளச்சு

உன் பணத்தையெல்லாம் பறிச்சு

காரணம் கிரகமுன்னு கிரகத்த பழிச்சு

உன் வாழ்க்கையை மொத்தமா அழிச்சு

உன்ன நடுத்தெருவுல நிப்பாட்டும் ஜாதகத்த
இந்த போகி பண்டிகையில தீக்கிரையாக்கிவிட்டு
தைத்திருநாளில் எம் சிவகுரு சிவசித்தன் பாதம் பற்றி அவர்தம் வாசிபற்றி புதுவாழ்வு பெற்றிடுங்கள்

நாளும் கோளும் நாறிபோகும்
மூட எண்ணம் மூழ்கி போகும்

எல்லா நாளும் நல்ல நாளே
சிவகுரு சிவசித்தன் காத்திடுவானே…

ஓம் சிவசிவ சிவகுருவே ஓம்

காப்பவனை கருதியதால் கவியருவி பொழிகிறதே

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

களத்துமேட்டு கரையோரம்
கதிரடிக்கும் சத்தந்தான்

உழைக்கும் விவசாயியின்
முகமெல்லாம் சந்தோசம்

ஏரோடும் எருதுக்கெல்லாம்
வந்திடுமே திருநாளே

தைப்பிறந்தால் வழிபிறக்கும்
என்றிருக்கும் பாட்டாளியே

வாசியின் வளவனின் ஆசியுடன்
கொண்டாடுவோம் தைப்பொங்கல்!……

ஓம் சிவய சிவசித்தன் ஓம்


குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

 

காப்பவனை கருதியதால் கவியருவி பொழிகிறதே

திருவுருவம் கண்டவுடன் விழியருவி வழிகிறதே

என்னுடலில் நீயுறைய என்ன தவம் செய்துவிட்டேன்

ஓரணுவில் ஈரனுவாய் கலந்தெம்மை காத்துவிட்டாய்

நின் திருவடியே சரணமென்று பாடேலோ ரெம்பாவாய்

ஓம் சிவசிவ சிவசித்தன்

எம்வாழ்வை சீராக்க தன்வாழ்வை அர்ப்பணித்தாய்!…

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

தனதருளை கொண்டேதான்
தரணிதனை காக்கின்றாய்!…

எம்வாழ்வை சீராக்க
தன்வாழ்வை அர்ப்பணித்தாய்!…

கருவறையில் இருந்துகொண்டே
நின் கதிரியக்கத்தால் எமை இயக்குகிறாய்!…

அனைத்தையுமே இயக்குபவனே
அகிலமெல்லாம் காப்பவனே!….

சிவகுரு சிவசித்த வாசிதேககண்ணா
ஏழுநிலைகண்டு எட்டாநிலை காணும் உன் சித்தம்
சிவசித்தம் சிவசித்தம் சிவசித்தம்.

கழிவகற்றி காத்திட்ட காவலனே

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

பணத்தாலே பழிகொண்டேன்
உணவாலே நோய்கொண்டேன்
எண்ணத்தால் இழிவடைந்தேன்
துன்பத்தால் துயரடைந்தேன்
கழிவாலே மாசடைந்தேன்…..

நின் திருவடி பற்றிய பின்

உன்னாலே வாசிபயின்றேன்
உன்னாலே உயிர்பெற்றேன்
உன்னாலே நலமடைந்தேன்
உன்னாலே உயர்வடைந்தேன்
உன்னாலே வாழ்கின்றேன்…..

ஓம் சிவசிவ சிவகுருவே ஓம்


குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

பாமரனாய் இருந்தென்னை
பாவலனாய் மாற்றிட்ட புரவலனே
நின் தாள் போற்றி போற்றி!….

உடல் கழிவாய் இருந்தென்னை
கழிவகற்றி காத்திட்ட காவலனே
நின் தாள் போற்றி போற்றி!…

இழிபிறப்பாம் மனிதபிறப்பெடுத்த என்னை
இறையுனர்த்தி தடுத்தாட்கொண்ட வளவனே
நின் தாள் போற்றி போற்றி!…

சிவகுரு சிவசித்த வாசிதேககண்ணனே போற்றி போற்றி

செல்பேசியில் தன் அலைவீசி தீர்வழிக்கின்றான்

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

செல்பேசியில் தன் அலைவீசி தீர்வழிக்கின்றான்

எக்கணமும் கணினியுடன் கலந்திருக்கிறான்

ஒரு நேரம் உணவுண்டு உழைத்திருக்கிறான்

பலநாட்கள் ஊணின்றி வாழ்ந்திருக்கிறான்

கன நேரமும் ஓய்வின்றி மக்கள் பணிபுரிகின்றான்

இணையத்தில் எப்பொழுதும் இணைந்திருக்கிறான்

உலகெல்லாம் தன் வாசியாலே வாழ்வளிக்கிறான்

காணவரும் பக்தர்களுக்கு அருளுரை செய்கின்றான்

உண்மையின் வலியுணர்த்த தனியாக உறைந்திருக்கிறான்

அனைத்தையுமே தன் இடத்தில் இருந்தே ஆட்டுவிக்கிறான்

தன்னலமின்றி தடுத்தாட்கொண்ட தாயுமானவனே

பலசெயல்கள் ஒரேநேரத்தில் செய்கின்ற தசாவதானியே

அல்ல அல்ல சதாவதானியே நின் தாள் சரணம்

ஓம் சிவசிவ சிவகுருவே ஓம்

சில்லென்ற அருவியும் தணலான தீஞ்சுடரும்

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

வாசியின் வளவனுக்கு வணக்கம்

உடல் அழித்து தேகம் படைத்த இறைவனவன்

உச்சந்தலையில் இருந்து கீழ்நோக்கி சில்லென்று
பாயும் அருவியும்

நுனி பாதத்தில் இருந்து மேல்நோக்கி தனலென
சரசரவென ஏறும் தீஞ்ச்சுடரும்

அடிவயிற்றில் ஒன்றாக சங்கமித்த அற்புதமும்
அதன்பின்னே சமமாக பிரிந்து நிற்கும் அதிசயமும்

சில்லென்ற அருவியும் தணலான தீஞ்சுடரும்
அடிவயிற்றில் உருவாக்கிய சற்பமது சரசரவென
மேலேறி உச்சந்தலையில் நிலைகொண்டு அதுகாட்டும்
ஆனந்தமும்…

உன் வாசியினால் நீ எமக்களித்த இறையுணர்வை
உண்மையின் வழிகொண்டு காத்திடுவோம்
உன்னருளால் உலகெல்லாம் உன்வாசிக்கொடி ஏற்றிடுவோம்…

ஓம் சிவசிவ சிவகுருவே ஓம்

தனியுலகத்தில் இல்லாதவை – தனியுலகத்தில் இருப்பவை

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

தனியுலகத்தில் இல்லாதவை
———————————————-

கோவிலும் இல்லை

கொடியும் இல்லை

சாமியும் இல்லை

பேயும் இல்லை

மாயையும் இல்லை

மருத்துவன் இல்லை

நோயும் இல்லை

சோதிடன் இல்லை

பொய்யும் இல்லை

பரிகாரமும் இல்லை

துன்பமும் இல்லை

துயரமும் இல்லை

கஷ்டமும் இல்லை

நஷ்டமும் இல்லை

காமமும்இல்லை

சந்தேகமும் இல்லை.

தனியுலகத்தில் இருப்பவை
—————————————-

அன்பைக்கொண்ட ஆட்சியையும் உண்டு

உண்மையைக்கொண்டால் அவனடி உண்டு

வாசியினால் வந்த நல்தேகமும் உண்டு

நமையாரென்றுஉணர்த்தும் சற்பமும் உண்டு

நம்முள்ளே இருக்கும் இறையை கண்டு

இறையை உணர்த்தும் இறைவனும் உண்டு

சிலையாய் இல்லை உயிராய் உண்டு

சிரித்துப்பேசும் எம் இறைவனைக்கண்டு

அவனடிகொண்டால் அனைத்தும் உண்டு

ஓம் சிவசிவ சிவசித்தன் ஓம்

உள்ளம் எல்லாம் உழன்றிடும் சற்பம்

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்
—————————————————————

சித்தமெல்லாம் எம் சித்தனின் எண்ணம்

சுத்தம் ஆனது எங்களின் உள்ளம்

நித்தம் நித்தம் உனை நாடும் உள்ளம்

உள்ளம் எல்லாம் உழன்றிடும் சற்பம்

சற்பத்தின் ஆட்டத்தை தந்திட்ட இறைவா

பேரானந்தம் தந்த பேரொளியானே

உன்னடி சரணம் இயற்கையின் வேந்தே….

ஓம் சிவய சிவசித்தன் ஓம்

நாடாள்வது எளிது பூஜ்ஜியம் ஆள்வதே பெரிது

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

தான் அழிந்து தனதருள் கண்டோம்

இரை குறைத்து இறை கண்டோம்

திருநாமம் கொண்டே உனை கண்டோம்

உன்நாமத்தால் உய்கின்றோம்

ஓம் அகசிவய சிவசித்தன் ஓம்

 


 

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

அண்டத்தை பிண்டமாக்கி

பிண்டத்தை லிங்கமாக்கி

லிங்கத்தை சிவனாக்கி

சிவனாக எமையாக்கி

எமைநீயும் அகலாக்கி

அகலெரியும் திரியாக்கி

திரிஎரியும் ஜோதியாக்கி

ஜோதியான பேரொளியானே…

நாடாள்வது எளிது பூஜ்ஜியம் ஆள்வதே பெரிது என்றுனர்த்தி…

பூஜ்ஜியம் எனும் வெற்றிடம் ஆளும் இறைவா…

சிவகுரு சிவசித்த வாசிதேககண்ணா…

நின் மலரடி போற்றி போற்றி