‎தர்மம் தலைத்தோங்க செய்வானே!

வணக்கம் சிவகுருவே!
‎சிவசித்தனின் திருநாமம் உணர்வுகள்
சிவசித்தனே துனை

DSC02318
சிவசித்தனே,
உன் திருநாமம் கொடுத்தே,
தன்னுள் இருக்கும் தேக சற்ப்ப ஆற்றலை உணர்த்தியே,
முடங்கி இருந்த சற்ப்பத்தை எழுப்பியே,
நீ அருளும் ஆற்றலை, உணர செய்தாயே!
வெற்றிடமான ‎அகம் படைத்தே
‎மனித அகத்தை ஒன்றாக்கியே
இயற்கையோடு, இயல்பான உணர்வோடு வாழவைத்தே,

எம் சிவசித்தனே!
‎நன்றி சிவசித்தனே!

இறப்பு…

இறப்பு

#Sivasithan (7)

அங்கமதில் ஐம்புலன்களும் அவதியுற்று

தேகமது புண்ணாகி காயமது நாற்றமுற்று

இறப்பு நிலை எய்தும் இறப்பு நல் இறப்பல்ல!

உடல் விட்டு உயிரானது உடை

அகற்றுவது போல் பிரிவதே நல் இறப்பு

இந்நிலை கிடைக்க இறையுணர்த்தி

இடகரற்றும் சிவசித்தன் வாசிதேகக்கலையை பயில் மனமே!


தன்னுள்ளிருந்து தோன்றியதே தரணியாவும்!

உன்னுள் இருந்து உமை இயக்குவதும்

நானே! எமை அறிய இமை

இரண்டை மூடி! இதயத்தில் காணடா!

சிவகுருவாம் சிவசித்தன் திருவொளி அதனையே!

சிவகுரு நாமம் சொல்லிப்பார்! சிலிர்த்திடும்

சிரம் அதுவே! சிறிதாய் எண்ணாதே எமை என்றும்!


 

புறம் பேசாதே புலனைந்தும் கேடுறும்

தனை அறிந்து தன்னிலை அறிந்து

தன்னைப்போலவே பிறரையும் நோக்கு

எண்ணம் நலமுற்றால் எல்லாமும் நலமுறும்

நல்லோர் நினைவதில் நமசிவமும் வாழ்ந்திடுமே!


 

உண்மையுள்ள இடத்திலேயே உத்தமனும் உறைந்திடுவான்

உண்மையில்லா இடத்திலே சிறுபொழுதேனும்

தங்காது சிவவொளியான சிவசோதியதுவே!

அபிஷேகம் பலசெய்தும் ஆராதனைகள் பலசெய்தும்

அகமுள்ளே நேர்மறை எண்ணமது இல்லையென்றால்

ஒருநாளும் தங்காது ஓம்கார சிவவொளியதுவே!

உண்மையின் உறைவிடம் ஸ்ரீவில்வ வாசிதேக மையமன்றோ!

பொய்மை இங்கே ஒருபோதும் தங்காது! உண்மையாய்

இருப்பவனை வாசிபயிற்சி எந்நாளும் உயர்த்திடுமே!

நன்மையையும் அவர்களைச் சார்ந்து நமசிவமும்

அவரின் உளமுள்ளேறி உடம்பொளியைக் கூட்டிடுமே!


 

நானெனும் அகந்தை நலங்கெட வைக்குமப்பா!

நானென்று சொல்லிட நன்மையுமை தீண்டாதப்பா!

நானென்று சொல்லிட உம்உளமது செம்மையாகாதப்பா!

நானென்று சொல்லிட உன் எண்ணமது கீழாகுமப்பா!

நானென்று சொல்லிட உண்மை உமைவிட்டோடுமப்பா!

நானென்று சொல்லிட மேலோனும் கீழோனாவானே!

உம்முள்ளே ஊடாடும் உயிரினையும் அவ்வுயிரின்

உள்ளிருந்து ஊடாடும் அரூபசக்தி அற்புதசக்தி!

வாசியினை அறியாமல் வானளவு உயர்ந்து

வையத்தோர் போற்ற வாழ்ந்தாலும் சிவகுரு சிவசித்தனின்

உயிர்க்கலையாம் உண்மைக்கலையாம் வாசிதனை அறிந்து

படைத்தவன் தன்னை அகமுள்ளே பார்த்திடான்!

மண்ணோடு மண்ணாய் இருப்பதற்கு சமமன்றோ!


 

சிவகுருவின் பக்தன்,

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

இருவழியின் செயல்பாடுகள் அறிவித்து அதை சீராக்கி செம்மையாய்…

“சிவகுருவே சரணம்”

 

இருவழியின் செயல்பாடுகள் அறிவித்து அதை சீராக்கி செம்மையாய் இயங்க வைக்கும் எங்கள் “சிவகுருசிவசித்தனுக்கு” சமர்ப்பணம் இவ்விருவரி பாடல்கள்…

‘ஞ’ வரிசை

_____________

#Sivasithan (8)

ஞயமாய் சொல்லும் செயலும் ஒலிக்கும்

அணுக்களில் சிவசித்தன் வாக்கதுவொலிக்க.

 

ஞண்டதைப் போலெமைக் கவ்விய நஞ்சாம்

மருந்தெனும் மாயை விரட்டினார் சிவகுருசிவசித்தனே.

 

ஞத்துவம் ஏதுமின்றி மாக்களாய் இருந்தவெமக்கு

மடிக்கழிவகற்றி மனிதமுணர்த்துவார் சிவகுருவே”

 

ஞமலிபோல் பரவசமுணர்வர் ஞவல்போல் ஒளிர்வர்

ஆடலுமாற்றலும் அறியும் சிவகுருபக்தரே.

 

ஞஞ்சும் நீங்கும் பேரோளியானின் வாசிவழி

நஞ்சாம் உடற்கழிவு அகலும்போது.

 

*ஞயம் – இனிமை; ஞண்டு – நண்டு; ஞத்துவம் – உணரும் தன்மை; ஞஞ்சு – மயக்கம்

 

*****************************************************************

 

ஞாதிரு அறிவிப்பார் சிவகுருவே சீவனது

சிறப்பாய் வாசியதை சிந்தையிலேற்ற

 

ஞாயம் அறிவர் ஞானம் அறிவர்

ஞானசித்தனிடம் ஞானதீட்சை பெற்றபக்தரே.

 

ஞானார்த்தம் அறிவர் ஞானானந்தம் உணர்வர்

சிவகுருவருள் பெற்ற பக்தரே.

 

ஞானசரீரமது கிட்டும் ஞாயமாய் சிவசித்தன்

உணர்த்தும் உடலொழுக்கம் பின்பற்ற.

 

ஞானப்புதல்வரே ஞானானந்தனாம் சிவகுரு திருவருள்

தினமுணரும் குருகுல வாசிகளே.

 

* ஞாதிரு – ஆன்மா, ஞானசரீரம் –உண்மை அறிவுமயமான சரீரம், ஞானம் – அறிவு; ஞாயம் – நியாயம், ஞானசித்தன் – உண்மையறிவு கைவரப்பெற்றவன்,

ஞானதீட்சை – ஞான உபதேசவகை; ஞானார்த்தம் – மெய்ப்பொருள்; ஞானானந்தம் – பேரின்பம் ; ஞானானந்தன் – கடவுள்; ஞானப்புதல்வர் – மாணாக்கர்.

 

********************************************************************

 

ஞிமிறுகளாம் சிவகுருகுல பக்தர்களே வாசியெனும்

தேனைநாளும் தன்கூட்டில் சேர்ப்பரே.

 

ஞிமிர்தல் அறிவர் ஐம்பூதங்களிலும் ஐம்பொறிகளிலும்

பொறியாளும் பேரோளியானின் ஒளிதொடர்வோர்.

 

ஞிமிறின் சுவை சுவைக்கும்போது வாசியின்வாசம்

நாசியிலதை தினம்முறையாய் ஏற்றும்போது.

 

ஞிமிர்வர் பக்தரே சிவசித்தன் மந்திரத்தை

மனமது வாசியின்மணமதை உணரவே.

 

ஞிமிர்வர் பக்தரே மும்மந்திரத்தை மும்மலமது

பேரோளியானின் பேரருளால் நீங்கப்பெறுவதற்காய்.

 

ஞிமிர் – ஒலி: ஞிமிறு – தேனீ

 

********************************************************************

 

ஞெமிர்த்தி ஞெமிர்தலாகி ஞெப்தி நிறைக்கும்

வில்வநாயகன் உணர்த்தும் விசையதுவே.

 

ஞெரலாய் சிவசித்த மந்திரம் உள்நுழைய

உயிரொளி அறிவர் பேரொளியான்பக்தரே.

 

ஞெள்ளுவோம் சிவசித்தன் விதிக்கும் உண்மைகளுக்கு

உயிரது உன்னதம் உணர.

 

ஞெமர்தலாய் உள்நிறையும் வாசியின் வாசம்

வாழ்வுணர்த்தும் இயல்பாய் இயற்கையாய்.

 

ஞெள்ளுமை பெறுவோம் பக்தரே சிவசித்த

திருவருளால் அழுக்ககற்றி அழுக்காறகற்றி.

 

ஞெமிர்தல் – நெரித்தல், ஒடித்தல், அழுத்துதல், ஞெப்தி _ அறிவு,நினைவு,

ஞெரல் – ஒலி; ஞெள்ளுதல் – உடன்படுதல்; ஞெமர்தல் – நிறைதல்; ஞெள்ளல் – மேன்மை

********************************************************************

 

ஞேயம் வெளிப்படும் வெம்மையும் வெண்மையும்

உண்மையின் ரூபமாய்உள் நின்றியங்க.

 

ஞேயம் உண்மையின் ரூபத்தில் உணர்வர்

சிவசித்தபேரொளியான் திருவருள் பெற்றோரே.

 

ஞேயமாய் சிவகுரு உருவெடுப்பார் கழிவகன்று

கருமையும் வெண்மையுமுணரும் பக்தரெண்ணத்தில்.

 

ஞேயமே சிவகுரு அகமே ஆலயம்

பூஜிப்பர் பக்தரே ஊன்வழி.

 

ஞேயமும் பக்தியும் வெளிப்படும் பக்தரவர்

கண்ணீரெனும் உண்மையின் சொரூபம்வழி.

 

ஞேயம் – அன்பு, கடவுள்

*****************************************************************************

ஒளியே மதியான அற்புதமே sivasithan

சிவகுரு சிவசித்தன் தாள் சரணம்

d (165)உள்ளத்தில் உறைந்த உள் ஒளியே

மருள் நீக்கும் செம்மலே

உன்மெய் ஒளிரச் செய்பவனே

உள் ஒளியால் எனக் கொளி அளித்தவனே

ஒளியால் வெளியை அளிப்பவனே

ஒளியே வெளியென உரைப்பவனே

ஒளியுள் ஒளியாய் ஒலிந்தவனே

ஒளியே மதியான அற்புதமே

 

 

 

                                                                எஸ்.அரவிந்த்

                                                           வி.எண்: 1112208