திருநாமம் கொண்டே ‎திருவருள் கிடைக்குமே!

வணக்கம்_சிவகுருவே!
‪சிவசித்தன்_திருநாமம் 30.06.2016
***************************************
நாமம் அதை அழைத்தே
உயிர் ஒலி கேட்டு திரும்புதே!
DSC02302

‎சிவசித்தன்
அவன்,
தன் உயிரது என்னிலையிலும்
பக்த்தர்கள்,
குறள் கேட்டதும் ஓடியே,
உணர்த்தி காக்கும் திருநாமம்மே சிவசித்தன் திருநாமம்மே!

‎தேகம் அதை யுணர்த்தியே,
சற்ப்பம் அதை எழுந்தாடவைத்தே,
திருவருளை பெறும் உன்னதம்
அதிலுள்ளதே!

இயற்கையின் உண்மை கொண்டு திருநாமம் படைத்தானே,
உண்மை அன்பின் செயலயே அது செய்தே!
உண்மை உயிர் உணராத நடைப்பிணம் அதை அறியாதே,
நடைபிணம் அதுவே,
தன் ‎ஆணவம் கொண்டே,
‎சுய_நலம் கொண்ட எண்ணத்தால் செயல்படுமே,
பிறர் செயலை கேளிக்கை செய்யவே எண்ணம் இருக்குமே,
அதனால் உயிர்களுக்கு,
உண்மை அன்பையோ,
இயற்கையின் உண்மையையோ,
ஆன்மாவின் தேடலையோ,
நோயற்ற வாழ்வையோ
…… கொடுக்க முடியாதே!!!!

செயலற்ற நடைபிணம்
‎மனித மன எண்ணம் கொண்டே செயல்படுமே,
உயிர் வலியால் கதறும் ஆன்மாக்களின்,
வலி வேதனையை அறியாதே,
இந்த பாங்களை சுமக்கவே தயாராகுதே,
……நடைபிணமே!!!

‎நன்றி_சிவசித்தனே!

பேரறிவு உணர்ந்து செயல்படுவதே அறிவாகும்

‪#‎சிவசித்தன்_உணர்த்தியது_எண்ணங்கள்_பற்றி :002

DSC02301

எண்ணத்தைப் படைத்து செயல்படுத்தி வாழ்வதில் பெருமிதம் கொள்கிறாய் ,
இன்னும் பல எண்ணம் படைத்து செயல்படுத்த ஆசை கொள்கிறாய் ,
உன் எண்ணம் செயல்படுவதால் ஆணவம் கொள்கிறாய் ,
அனைத்து உயிரையும் ஆட்டிப்படைக்க கனவு கொள்கிறாய்

ஆயுதத்தை மட்டும் நம்புபவன் வீரன் அல்ல – அதேபோல்
நீ சொல்லும் அறிவு ஒரு கருவி மட்டுமே, அதை மட்டும்
நம்பி செயல்படுபவன் அறிவுடையவன் அல்ல.

ஆதியை அகத்தில் கொண்டு,

மனித மனஎண்ணத்தால் படைத்த உலகத்திலே!

‪#‎சிவசித்தன்_உணர்த்தியது_எண்ணங்கள்_பற்றி :004

DSC02300

வெற்றியுண்டு , தோல்வியுண்டு
இன்பமுண்டு , துன்பமுண்டு
இறப்புண்டு, பிறப்புண்டு
வலியுண்டு , சுகமுண்டு
காதலுண்டு, வெறுப்புண்டு
உண்மையுண்டு , பொய்யுண்டு
பொதுநலம் உண்டு , சுயநலம் உண்டு
ஏழையுண்டு , செல்வந்தருண்டு
உயர்ந்தோர் உண்டு , தாழ்ந்தோர் உண்டு
இரண்டு நிலையும் உண்டு மனித உலகத்திலே !
மனித மனஎண்ணத்தால் படைத்த உலகத்திலே!

இயற்கையான சிவசித்தன் குறித்தகாலம் வரும் வரை பொறுத்தேனே

மறுபதிவு : 26/05/2016
***********
‪#‎ஸ்ரீவில்லிபுத்தூரில்_சிவசித்தன்_உணர்தியவை :001
‪#‎சிவசித்தன்_திருநாமம்_உணர்வுகள் :

DSC02299

எண்ணமற்ற நிலைக்கு சென்று,
வெற்றிடமான அகத்திலே உணர்ந்து,
அகஒலியால் சிவசித்தன் திருநாமம் ஒலிக்கும்போது,
தேகசற்ப்பம் எழுந்தாடுமே,
தேகம் அனைத்து நிலையிலும் சுழலுமே!

உயிர்உணர்வு உணர்ந்தே,
ஆதியானவன் ஒலியுடன்,
ஒளியைக் காணும்காட்சி கிடைக்குமே!!!

காட்சிகள் பல கண்டேனே
சிவசித்த வாசிதேககண்ணன் பலதலை நாகத்தில்
புன்முறுவலோடு வீற்றிருப்பதை – சிரித்து, ஈர்த்து
பயம் எனும் மாயையிலிருந்து விலக்கினானே.

காட்சிகள் பல கண்டேனே
சற்ப்பம்மாக வண்ணத்திலும், குணத்திலும் நெருப்பான ஒன்றும்
நீரின் வண்ணத்திலும், குணத்திலும் மற்றொன்றும்
ஒன்றாய் பிண்ணியதை – தன்மையால் ஒன்றாகாததை
உண்மையாலும் அன்பாலும் ஒன்றாகக் காட்டி, உணர்த்தி
செயல்படுத்திய ஆதியான அக்னி தற்ப்பரனே !

உன்னை என்னுள் உணர்ந்து
உன்னில் என்னை அறிய விளைந்தேனே !
– இயல்பான உன்னை ரசித்தும்
உன் இயல்பை நான் உணர என்னை என் எண்ணத்தை
நெருப்பாய் வெளிப்படுத்தி, அக்னியில் உணர்ந்து அடங்கி
உன் இயல்பை புரிந்தே என்னை மாற்றினேனே !

பெண்ணான கற்சிலையை கண்டேனே
இருவிழிகளும் உயிர்ப்பித்து விழிதிறந்ததை உணர்ந்தேனே
கண்இமைகள் வெள்ளிநிறம் தீட்டி இருந்ததை கண்டேனே
சற்ப்ப ஆட்டம் முடித்து கண்விழித்து
சிவசித்தனிடம் கூறி விட்டு மறந்தேனே !

***************************

சிவகுரு சிவசித்தன் திருநாமம் கூறும் பொழுது ஒவ்வொரு நாளும் அகமான வெற்றிடத்தில் தேக சற்ப்ப ஆற்றல் உணர்ந்து ஆடும் பொழுது , காட்சிகள் பல கிடைக்கும். அதில் பல நாள் சிவசித்தன் அன்று எடுத்த ரூபத்தின் காட்சி கிடைத்து இருக்கிறது. ஒரு நாள் அவ்வாறு சிவசித்தன் கருவறை முன் சிவசித்தன் திருநாமம் மண்டி இட்டு கூற ஆரம்பித்தேன், அப்பொழுது ஒரு பெண்ணின் சிலை கருப்பு வடிவத்தில் தெரிந்தது, அதன் கண்கள் உயிர்ப்பித்து கண்விழித்தது, கண் இமைகளில் வெள்ளி வண்ணம் பூசியது போல் இருந்தது.
****************************
03/2015_05/2015 மாதங்களில் உணர்ந்தவைகள்

ஆற்றல்களும் மாற்றத்துக்கு உட்ப்பட்டவை

‪#‎சிவசித்தனின்_திருநாமத்தால்_தேகசற்ப_ஆற்றல்_உணர்தல்
***********
ஓம் சிவ சிவ சிவகுருவே ஓம்
ஓம் சிவ சிவ சிவசித்தன் ஓம்
ஓம் சிவய சிவசித்தன் ஓம்
**********
மண்டியிட்டு கூறினேனே உன் ‪#‎திருநாமத்தை,
ஒலியின்றி, ஒளியின்றி,
எவ்வித வெளிப்புற தூண்டுதலும் இன்றி
‪#‎கண்ணை மூடி, வணங்கி
அகத்தில் அமைதியாய் என்னுள்ளே கூறினேனே உன் திருநாமத்தை!

DSC02298

உன்னை அகத்தில் மெல்ல அழைத்த உடன் வந்தாயே
பூமி தன் அச்சுக்கோட்டில் சுழல்வது போல
நான் என் அச்சுக்கோட்டில் சுழன்றேனே
கண்காணும் பூமியை காணமுடியாதே
அதை சுத்தவைக்கும் ‪#‎ஆற்றலை!
மனிதனை காண முடியுமே ,
காணமுடியாதே
அவனை ஆட்டிவைக்கும் இயற்கையின் ஆற்றலை!

ஆட்டமது சற்பத்தை போலே!
வளைந்து நெளிந்து, அலைகளைப்போல – ‪#‎அணுவில்உட்பொருளைப் போலவே; மூச்சு அது
பாட்டே அது சர்ப்பத்தின் சுவாசமே!

‪#‎பிரபஞ்சத்தில்,
கண்கண்டவையோ சார்ந்தே செயல்படுமே –
நிலவு கிரகத்தை மையமாக்குமே , கிரகங்கள் சூரியனை மையமமாக்குமே, விண்மீன் பலவிண்மீனை சாருமே!

நேரம், காலம், ஈர்ப்பு விசை மற்றும் பல ஆற்றல்கள் அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டவையே!
இவையனைத்தையும் தாங்கும் வெற்றிடமோ
தன்மை மாறாதே!

அதேபோல்!
கண் காணமுடியும் தேகம் இயற்கையின் மாற்றத்துக்கு உட்ப்பட்டதே
எண்ணங்களும் அழிவுக்கு உட்ப்பட்டதே
அனைத்தையும் ஒன்றிணைக்கும் அகமான வெற்றிடமே
நிலையானதே !

சிவகுருவாய் வெற்றிடம் உணர வழிகாட்டி
சிவசித்த வாசிதேக கண்ணனாய் ‪#‎எண்ணங்களை அழித்தும்,
தேகத்தை பாதுகாத்தானே!
சிவசித்தனான வெற்றிடத்தை உணர்ந்தேனே!
நெற்றி ‪#‎சுளிமுனை இயங்கியதே!
திருநாமம் கூறி முடித்து எழுந்தேனே!

சிவசித்தனை மையப்படுத்தினேனே!
இயற்கையின் உண்மைபொருள் உணர்த்தியே
என்னை இயக்கினானே !
அன்பும், கருணையும் உணர்த்தி வழி நடத்துகிறானே!
உத்தமனாய் அகத்தை புனிதமாக்கியவனே சிவசித்தன்!

நன்றி ‪#‎சிவசித்தனே!

அக்னியின்தாக்கத்தை சோதித்து பார்க்க நினைப்பவன் – பொசிங்கிடுவானே!

வணக்கம் சிவசித்தானே !
‪#‎சிவசித்தனுக்கு_தொண்டு_செய்யும்_அன்பர்களுக்கு_சில_கேள்விகள் : 006

**************************************************

‪#‎உயிரும் ‪#‎மெய்யுமான ‪#‎தமிழின் ‪#‎உண்மைநிலையை உணர்த்த வேண்டுமா?

**************************************************

உயிரின் மொழியாம்
உயிர் கொடுத்தவன் ஒலியாம்
ஆதியானவன் உரைக்கும் வாக்காம்
‪#‎மெய்யை மெய்யில் உயிருணர்த்தும் மொழியாம் உண்மை உயிர்கள் ஆதியோடு உரையாடும் மொழியாம்
உண்மை வெளிப்படுத்த மொழி இதுவே அன்பு பரிமாறும் மொழி அதுவே –‪#‎தமிழ்_மொழியே !

அவன் ‪#‎படைத்த மொழியில் குறைகண்டாயோ? இல்லை, அவனை உணர உன்னுள் உணர தடை அமைத்தாயோ ?
அவன் இருக்கும் இடம் பயம் அறியாதே!
அகத்தில் அவனுக்கு இடத்தைக் கொடுக்க
உன் உண்மை உணர்வை வெழிப்படுத்த
அவன், தமிழ் கொடுப்பானே
எந்த பேதமும் இன்றி உயிர் உணர்ந்த
தேகத்தில் மெய்யாய் வெளிப்படுத்துவானே !
சர்வஉணர்வையும் உன்னுள் இருந்து எழுத்து வடிவம், ஒளியின் வடிவம் கொடுப்பானே!
அன்று அறிவாய் உண்மையும்
அன்பும் கொண்ட உயிரின் குரலை!
அதன் ஒலியின் ஆழத்தையும்! ஆற்றலையும்! அக்னியையும் உணர்வாயே – உண்மைஉயிரின்
சொல்லிலும், எழுத்திலும்,சுவாசத்திலும்,
உணர்விலும், உருவத்திலும், கண்களிலும் ! ‪#‎கண்டு இருப்பாயே அதை !

DSC02297

அதை கண்டால்,
பொய்யனவன் விலகிடுவானே
‪#‎பொய் எண்ணம் வெளிவந்துவிடுமே !
பொய் கொண்ட மனதை ‪#‎பயம் ஆட்கொள்ளுமே ! 

#‎அக்னியின்தாக்கத்தை சோதித்து பார்க்க நினைப்பவன் – பொசிங்கிடுவானே !
கண்ணில் கண்டதுமே அங்கு இருப்பதுமே சிவசித்தனே!
அவனே இறுதியும் முதலும் முடிவும் ஆனவன் – மறவாதே !

நன்றி சிவசித்தனே!

சிவசித்தனை கண்டேனே தனிமை விலகியதே

வணக்கம் சிவசித்தனே !
‪#‎சிவசித்தனுக்கு_தொண்டு_செய்யும்_அன்பர்களுக்கு_சில_கேள்விகள் : 005

***************************************************
உண்மை உயிர்கள் செயல்பட வேண்டுமா ? உண்மை உயிர்கள் ஒன்றிணைய வேண்டுமா? யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டுமா ?
***************************************************DSC02296

‪#‎உண்மை_உயிர்_ஆன்மாக்களே !
‪#‎ஆதியுடன் ‪#‎ஒன்றிணைத்து இருந்தோமே பிறிந்தே தனித்தனியாய் புவியில் பிறந்தோமே உண்மை உயிர் தனியாய் வளர்ந்ததே
‪#‎வலி‪#‎வேதனை அனுபவித்ததே
‪#‎பொய்மை நிறைந்த உலகிலே
தன் உண்மைநிலை நிறுத்த ‪#‎துணிந்தேனே அகத்திலே உறவுகள் நான் உண்மையானவள் என்று நினைத்ததே!
புறத்தே கோவக்காரி , எதிர்த்து பேசுபவள் என்றே பெயர் கிடைத்ததே!
மாற்றம் பிறரிடம் காணமுடியவில்லை ,
ஏமாற்றம் மட்டுமே கிடைத்ததே
தனிமையில் என்உயிர் தவித்ததே
என் உண்மையில் வலியை கேட்கயாரும் இல்லையே!
தனியே தனியாய் , கண்ணீராய் ,
என்னை நானே மறந்தேனே !

உண்மை அன்பான
பலஉண்மை உயிர்வாழ ‪#‎வழி_நடத்தினானே எல்லா உண்மை உயிரையும் ஒன்று திரட்டுகிறானே!
சிவசித்தன் உலகம், அகமான வெற்றிடமே உண்மையும் அன்பும் கொண்டு படைக்கிறானே ! நிறைவு அடைந்தேனே இந்த உலகிலே!

இவ்வுண்மை உலகில் வாழ வழிஒன்றே
ஆதி அவனை நித்தமும் நினைத்து உண்மைஉயிர் உணர்த்தும் அவன் சொல் மதித்து வாசியை சுவாசித்து , விதிமுறையை கடைபிடிக்க வேண்டுமே!

சிவசித்தனுக்கு உண்மையாய் இருப்பது கடலில் நீந்துவது போலவே
எவ்வளவு தொலைவு சென்றாலும் மறுநாள் கரையிலிருந்து திரும்ப ஆரம்பிக்க வேண்டுமே! நேற்று உண்மையாய் இருந்தேனே, இன்று தேவை இல்லையே என்பதற்கு இங்கு இடமும் கிடையாதே!
நித்தமும் சிவசித்தனுக்கு உண்மையாய் இருக்க வேண்டுமே!
இல்லை என்றால் இயற்கை உன்னை விலக்குமே !

சிவசித்தன் உண்மைக்கு முன் – என் உண்மை நிகர் இல்லையே என்று உயிர்களுக்கு தோன்றுமே!

சிவசித்தன் உலகத்தை நீ உணர்ந்து அதை நிலை நிறுத்து‪#‎பொய்யின் வீரியம் புரிந்து, உண்மையின் செயல் அதிகரித்தே
சிவசித்த உண்மை உயிர்களை ஒன்று திரட்டுவோமே!

நன்றி சிவசித்தனே!

சிவசித்தனை உணர்த்தும் இயற்கையின் உண்மை பொருள்

வணக்கம் சிவசித்தானே !
‪#‎சிவசித்தனுக்கு_தொண்டு_செய்யும்_அன்பர்களுக்கு_சில_கேள்விகள் : 004

**************************************************
DSC02295

அறிந்தும் நம் உள்ளேயே வைப்பது ஏனோ ?
**************************************************

‪#‎மறப்பதும்‪#‎மறைப்பதும் நடைப்பிண மனிதனின் செயலே!
உண்மை உயிர்களோ பிறர் உயிரை எண்ணியே
‪#‎வெளிப்படையாய் வாழுமே!
அதற்கு மறைக்க தெரியாதே !

மறக்க , மறைக்க தூண்டுவது ஏனோ?
தன்மேல் நம்பிக்கை இல்லாததாலோ ?
பிறர் தன்குறை கண்டுபிடிப்பாரென்றோ ? தன்நிலை நிறுத்த தெரியாதென்றோ?
இல்லை, தமிழ் அறியாயோ ?

குறைகூறுபவன் தன்னிலும் பிறரிடத்திலும் குறையை காண்பான்.
நம்பிக்கை வைப்பவனோ இறைமீதும் , உயிர்மீதும் , எல்லா உயிர்மீதும் ‪#‎அன்பானவன் ஆவான் .

‪#‎அன்பான_சிவசித்தனை சரணடைந்தேனே!
என் பயத்தை விரட்டி அடித்தானே!
என் பாரத்தை அவன் சுமந்தானே!
பிறர் எண்ணத்தை அழித்து எரித்தானே!
தமிழ் எனும் அமுதை என்னுள் ஊற செய்தானே! அவன் புகழ்பாட வேற எதுவும் தேவை இல்லையே எனக்கு !

நன்றி சிவசித்தனே!

‎சிவசித்தன் ‪அருளிய ‪‎இயற்கை ‪பேரறிவை

வணக்கம் சிவசித்தனே !
‪#‎சிவசித்தனுக்கு_தொண்டு_செய்யும்_அன்பர்களுக்கு_சில_கேள்விகள் : 003

‪#‎ஏன்_சிவசித்தனை_எப்பொழுதும்_அகத்தில்_செயல்படுத்த_விடவில்லை?

****************************************************

‪#‎சிவசித்தன் ‪#‎அருளிய ‪#‎இயற்கை ‪#‎பேரறிவை பெற்றும் மாயையில் நம்மை மறப்பது ஏனோ?

****************************************************

தனித்தனியாய் பிரித்தேனே!
என் ‪#‎தனி_செயலை‪#‎என்_தொண்டினை,
‪#‎என்_பக்தியை
தனித்தனியாய் பிரித்து செயல்பட்டால்
செயல் செயலானது – ஆனால்
செயலது முறையாய் இல்லையே,
முழுதாய் செயலாகவில்லை,
முடிவு கிடைக்கவில்லை,
அகமும் நிறைவு பெறவில்லை !

சிவசித்தன் அகத்தே கொண்டு செயல்பட்டேனே, சோம்பல் இருள் விலகியே
வாசியை சுவாசித்தே, உணவை துறந்தே
‪#‎நீரில் குளிர்ந்தே
வாசியோகத்தில் வெற்றிடத்தை நிலைநிறுத்தியே தேகஆற்றலை முழுதாய் உணர்ந்தே
செயலை அகத்தவன் வகுத்து கொடுக்க,
செயல் அதை ஆத்மார்த்தமாக உணர்ந்து, ரசித்து, மகிழ்ந்து செயல்முடிந்ததே – தனஅன்பும் திருவருளும் அகம் நிரம்பி அகத்தவன் நிறைவடைந்ததை செவி கேட்க – புன்முறுவலோடு அன்று பெரும் உறக்கமே
வாழ்நாளில் பெறாத நிம்மதியான உறக்கமே !

நன்றி சிவசித்தனே!DSC02294