வாசிதேகம்

சிவசித்த தேகப் பாடல்கள்

சிவசித்த தேக தவமிவன், தேகத்தில் ஆற்றலாய் நிறைகையில், சற்பங்கள் செயலாகும் சிவசித்தன் நெருப்பதுவாய், அங்கே நெருப்பது சிவசித்தன் பார்வையே, பார்வையாலே கழிவில்லா தேகம் பெறுமே தீட்சை சிவகுரு சிவசித்தன் சொல் கேட்டால், பொன்னாய் மின்னிடுமே, மானுடம் தேடிய எல்லாம் விடையாகும் அங்கே, ஏதும் இல்லா நிலைகண்டே, அனைத்தும் உணரும் நிலை காண பாடல்கள் நிறையுமே தேகத்தை உணர்ந்த செயல் எண்ணியே.

தேக வாசிப் பாடல்கள்

தேகம் கொண்ட உன்னதங்கள், நிஜமாக உணர்கையில், வாசியது சற்பம் என்றே உணர்கையில், தேகத்தில் கழிவெல்லாம் சற்பமது கக்கிடும் நவமும் அறிகின்றனர், விஷமது நவத்திலும் வெளியேற, ஐம்புலனும், ஐம்பூதமும் ஐயம் தொலைக்கும் மானுடனுள்ளே,
கழிவில்லா பாடலது உருவாகும், அனைவருள்ளும், பாமாலையது பக்தனால்,பக்தையால் பாடப்பட,

இருவொளி கண்டே,
இருவினை ஏற்றே,
முக்காலம் முப்பால் முற்றுணர்ந்தே,
முத்தொழில் தேகத்துள் மும்மலம் நீக்க,
நான்கதில் நாகத்தால் யுகமும், நிலமும் கண்டு,
நான்கதுவாய் உட்கருவிஎல்லாம் நாவலனிடம்(சிவகுரு) சமர்ப்பித்தே,
ஐம்புலனும்,பொறியும் ஐம்புலனால் ஐயம் தெளிந்தே,
ஐம்பூதமே ஐந்திலக்கணம் ஆகிட,
ஐவகை பயமும் நீங்கியதே ஐக்கியத்தால்
அறுசுவை பிண்டத்தில் சிறுபொழுதும், பெரும்பொழுதும் உணர்வாக,
அகத்திணையது அகத்துள் அறிந்தே,
அட்டமல்ல குணமதுவே ஆயிரம் கண்டிங்கே,
அட்டதிக்கும் ஒன்றதுவே ஒன்றதுவும் சிவகுருவே,
நவமணிகள் நாங்களே நவரசம் பொழிந்தோமே,
பத்ததிலே காட்டினார் சிவகுருவே பிறப்பதன் முழுமையே…

பிறப்பதன் பொருள் கண்டோம் பிறந்த இடமது, உயிர்த்த இடமது உயிர் கண்டபோழுதில். அங்கிருந்தே பிறக்குதே பாமாலை பகலவனுக்கே. பகலவன் எங்களுக்கென்றும் சிவகுரு சிவசித்தனே.

தேக உணர்வுப் பாடல்கள்

சிவகுரு சிவசித்தன் வாசிதேகக் கலையிது
தினமும் செம்மையாய் செய்திட, கழிவது நீங்கும் அன்றன்று தேகத்தில் உணர்கையிலே, சுளிமுனையும் காண்போரே நித்தம் சுடராய். மின்னுமே சிவகுரு சிவசித்தன் கலையிதன் சிறப்பே அவரவர் தேகத்துள், ஆன்மா அதன் உணர்வில், வாசியது நகரும் இடமெல்லாம் இடம்வலம் காட்டுமே, உணர்வது சுடுவது – வலியா, இன்பமா, நகர்தலா, ஆடலா, பாடலா, பயிற்சியா, சுவையா, சொல்லா, கருத்தா, கேள்வியா, விடையா, இடமா, பொருளா, இறைமையா, அசுரமா, அகமா, புறமா, விளையாடலா, புதிரா, உன்னதமா, கூடலா, பிரிதலா, குளிரா, நெருப்பா?
இன்னதென்று இருக்கென்றோ, இல்லை என்றோ ஏதும் இல்லை, ஆற்றலில் அடங்குமே அத்தனையும் சிவகுரு சிவசித்தன் செய்வாரே அற்புதங்கள் வாசியால், சிவகுருவே அக்னிதற்பரனே…
அக்னிதற்பரன் செயலது பக்தனின்/பக்தையின் விரல் வழி வெளிவருதே உணர்வுக் குவியலாய், தேக உணர்வுப் பாடல்களாய்..

தேக எண்ணப் பாடல்கள்,

சிவகுரு சிவசித்தன் வாசி தேகப்பயிற்சிகள், உணர்வுகளில் இயற்கை செயல்கள் காட்டிட, தேகமே அனைத்திற்கும் மூலதனம் என்பதையும், சிவகுரு சிவசித்தன் அருளிய பொன் தேகத்தின் அழகது அகமும் புறமும் ஒளியாய் வீசிட, காண்போரெல்லாம் சிவகுரு செயல் கண்டு வியக்க, அவரே அனைத்துமென எண்ணிய ஆன்மாக்கள், அவரோடு வாழத் துவங்குமே, எண்ணத்தில் எக்கணமும், எண்ணத்தால் குருவாய்,
தாயாய், தந்தையாய், நண்பனாய், காதலனாய், மகனாய், தலைவனாய், தமையனாய், பிறப்புகளாய், அவதார புருஷர்களாய், அனைத்துமானவனாய். அப்போது, எண்ணத்தில் சிவகுரு சிவசித்தனை தாங்கள் எண்ணியபடியும், உணர்ந்தபடியும் வடித்திடுவர், எண்ணங்களை எழுத்துகளில். எண்ணங்களில் உறவுகள் எனும் சொல் அறிந்தே அவற்றிருந்து விலகியே தனிமனித ஆற்றல் உணர்த்த சிவகுரு உணர்த்தும் செயலும் ஆகும் இதுவும், அனைத்தும் ஒன்றே.

நம் எண்ணமே பிரித்தறிந்து பார்க்கின்றது என்பதை உணர்த்தி, அனைவரையும் ஒன்றாய் பாவித்தே வாழ்தல் நலம் என்பதை உணர்த்தவே இந்நிலையும் ஆகும்.

எண்ணங்களின் வலிமை காட்டிய அன்பும் , இறைமையும் போறாது என்றே அனைத்தும் உணர்த்துவார் சிவகுருவே, அங்கே மானுட குணம் எல்லாம் அறியச் செய்வாரே, பிரபஞ்சம் கொண்ட கழிவெல்லாம் அறிவிப்பாரே, அங்கு அன்பது வெறுப்பு காட்டும் கழிவின் மீதே, கழிவுடல் கொண்டோர், எண்ணங்களில் கழிவுகள் கண்டோர் சிவகுருவையோ, சிவகுருவின் செயல்பாடுகள், அவருடைய பக்தர்/பக்தைகளையோ ஏதேனும் கூறினாலோ அல்லது எண்ணினாலோ உணர்வுகளில் வலிகள் அறியும் நிலையும் காண, எழுத்துகள் அறம்பாடும், அறம்பாடியவை அரங்கேறும் செயலும் அறியலாம். உணர்வுகள் அனைத்தும் கண்ணீர்க் குவியல்களே, வார்த்தைகள் தேடோம், அகத்தில் அழிவேனும் சிந்தை அழிவைக் காட்டும், ஆக்கம் என்ற சிந்தனை ஆக்கம் காட்டும், அக எண்ணமே அகத்தை அழிப்பதும் உணர்கின்றனர்,அகத்தைப் படைப்பதையும் உணர்கின்றனர். உணர்வும் எண்ணமுமே வார்த்தைகள் சிவகுரு சிவசித்தன் அகராதியில்,
சிவகுரு சிவசித்தன் உணர்த்தினாரே மானுடனுள்

ஆக்கவும்,

அழிக்கவும்,

காக்கவும்

அவரவர் எண்ணங்களின் செயல் என்றே…

எண்ணமதுவும் எக்கணமும் சிவகுரு சிவசித்தன் எண்ணமாகையில் அனைத்தும் ஒன்றாகி, ஒன்றெல்லாம் நன்றாகி படைப்புலகம் பல்குது நித்தம் உணர்வும் எண்ணமுமாக

“காலமுள்ள காலம் வரை நிலைக்குமே சிவசித்தன் செந்நீரது விதிஎழுதிடும் வித்தகமே”.

Leave a Reply