உன்னொளி அறிய உள்ளொலிக்கு புறம்பாய் நீ…

சிவகுருவே சரணம்

 

 

#Sivasithan (17)சிந்தையில் சிவம் தூண்டும் சிவகுரு சிவசித்தரை

சிந்திப்பாயோ சிவகுரு சிவசித்தரை

ஆதாரம் பல தேடும் மானிடா

உனது ஆதாரம் செயல்படுவதே – சிவகுரு சிவசித்தராலே!

உனது உண்மை செயல்பட

உன்னுள் வாசியாய் – எம் சிவகுரு

உண்மை தேடினாயோ

உண்மைக்குப் புறம்பாய்!

உனது எண்ணமும் உண்மையும் செயல்பாடாகுதே

உன் அக உண்மையால்

உன்னொளி அறிய உள்ளொலிக்கு புறம்பாய் நீ

இதுவும் சிவகுரு சிவசித்தரின் எண்ணமோ!

 

**********************

 

என் எண்ணமது செம்மையாகவில்லை

ஏகாந்தமதை உணரவில்லை

கழிவது குறையவில்லை

காட்சி ஏதும் காணவில்லை

பிறவிப்பயன் பெறுவேனோ!

பிறவாநிலை அறிவேனோ!

உனதெண்ணம் என்னுள் செயலாவது எப்போது!

எற்றமதை உணர்வது எப்போது!

உண்மை தனில் நான் நிலைக்க என்னைப் பண்படுத்துவீரோ!

– சிவகுருவே.

 

 

சிவகுருவின் பக்தை,

K.B.சுபாசினி

வாசியோக வில்வம் எண்: 13 02 106

 

 

Previous Post
Next Post

Leave a Reply