“சிவகுரு உணர்த்தும் முதலும் முடிவும்

“சிவகுரு உணர்த்தும் முதலும் முடிவும்

#Sivasithan (21)

 

உணர்த்துமே ஒரு வழிப் பாதையை

உணர்த்துமே நெறியான வழியினை

உணர்த்துமே உடலே அனைத்தும்,

அதை அனைத்துமான நேர்மறை எண்ணங்களின்

பிறப்பிடமாக ஆக்குவது சிவசித்தரின் வாசியே!”

 

 

உண்மை ஒளியே ஏகன்; அவனே(ரே) சிவசித்தன்

என உணர்த்தியது

உண்மை ஒளியே ஒரு வாசலுக்கான சாவி என

விளக்கமளித்தது

உண்மை ஒளியே ஓங்காரம் அரியவைக்குமென

அறிவித்தது

உண்மை ஒளியே மெளவலாய் மலருமுள்ளேயென

மணம் பரப்பியது

உண்மை ஒளியே இஃதொரு கேடில்லை

சிவசித்தனிருக்கவென சிந்தை தெளியவைத்தது…

 

“உண்மையின் உருவமே! சிவசித்தனே!

உண்மையும் நீயே! ஒளியும் நீயே! சரணடைந்தோம்

ஒளியின் வழியில் உம்மிடம்!”

 

 

சிவகுரு பக்தை ,

விக்னேஸ்வரி ராஜேஷ்குமார்.

சின்னமனூர்.

வாசியோக வில்வம் எண்: 12 05 313

 

 

 

Previous Post

Leave a Reply