“நான்” என்பதின் செயல்

#Sivasithan (25)நான் என்பதின் செயல்

 

 

“நான்” நானாக என்னுள்

“நானாகி” வந்தீர் சிவகுருவே

“நான்” நானாக்க எம்மை

நாணேற்றிணீர் சிவகுருவே

நாதன் உம்நற் செயலாலே

“நானி” யற்றினே னொருநாழி கையின் காலில்

நாயகமே நற்றுணையே நமசிவயமே

“நான்” நாணாகி விட்டேன் நற்செயல் புரிய

“நானி” லத்திலுன் புகழ்பாட இனி

நாணமும் ஓடிடும் நற்குருவாலே

நம்பினேன் நம்பியாரின் புதல்வனே

 

 

சிவகுருவின் பக்தன்

 என்.அசோக்குமார்  

வாசியோக வில்வம் எண் : 1010001

அலை பேசி : +919443931073

 

Next Post

Leave a Reply