சிவசித்தன்: வாசியே நிலையான உலகம்

சிவசித்தன்

sivssiththan 2  (30)
* மனிதன் பிறந்து தூய்மையான வழியில் சென்று
உண்மை உணர எம் வாசியோகமே உண்மையை
மனிதனுள் உணர்த்தும்.

* உடல் உண்மையை உணர், உறவுகளின் பற்றை நீக்கு
உடல் பற்றை நீக்கியப்பின் மனித உடல் உண்மையையும்
தன்னுள் செயல்படும் ஆற்றலை எம் வாசியோகத்தால்
உணர வைப்பேன்

* நிலையான வாசி நிலையான உலகம், மனிதன் எப்படி
மாற்றினாலும் உலகம் பிறந்து இறந்து பிறந்து கொண்டே
தான் இருக்கும் அது தானாய் நடக்கும் செயலாகும்.

* வாசியான எண்ணத்தால் உலகம் படைத்தேன்
வாசியே மனித உடலுக்கு உண்மை உணர்த்தும்
வாசியே மனித ஆற்றலை உடலுக்கு செயல்படுகிறது.

* வாசி இல்லையேல் உலகில்லை
உடல்(பிணி) இல்லையேல் அறிவில்லை
உண்மை இல்லையேல் ஆற்றலில்லை

* உடம்பின் அறிவு பயனற்றதாகும்
உடல் உள்ளுறுப்பு உற்பத்தியே உண்மையாகும்
உடலுக்கு வாசிதந்தால் அறிவு பேரறிவாகும்
உண்மை ஆற்றலின் செயலை உடலால் உணர்வாய்.

ஆதியான முதலும் முடிவும்.

– சிவசித்தன்

Previous Post
Next Post

Leave a Reply