சிவசித்தரின் பாமாலை|001|

சிவகுரு சிவசித்தர் ஆசியால்,

உணவதனை அளவோடு உண்டு உடலதனைக் கொண்டு உண்மைதனைக் காண்பாய் வாசியால்
கழிவகற்றி மெய்யுணர்வு கண்டபின்!

மலம் சேர்ந்து மாயையாய் இருந்த உன்னை
வாசியால் சீர் செய்து, சிரம்தொட்டு, வாசியேற்றச் செய்து, உன்னுள் ஒளியேற்றி, உள் ஒளியை உன்னால் உணரச் செய்து உன்னை உய்விப்பதே எங்கள் சிவசித்தரின் வாசியோகம்!

உள் வெப்பம் ஒன்றே போதும். வெளி வெப்பம் தேவை இல்லை.
குளிரில் வெப்பமும், வெயிலில் குளிர்ச்சியும் தருவது
எங்கள் வாசியோகமே!

ஓர் உடலில் இரு செயல்கள் ஒரே நேரத்தில் முடியுமா உன்னால்?
சிவசித்தரின் வாசியால் மட்டுமே சாத்தியமே!

தானாய் கற்பதல்ல வாசி!
தானாய் கற்றதை உணர்வதே வாசி!

Previous Post

Leave a Reply