சிவசித்தரின் பாமாலை|001|

சிவகுருவே சரணம்

எட்டெட்டு அகவையிலே
எழுதுகிறேன் என் உள்எண்ணமதை
ஓரெட் டெடுக்க இயலாத முடமாகி
தவழ்ந்தேன் நாற்காலில்
இருகாலும் புண்ணாகி முன்னொருகால்

கர்ம வினையோ
செய் வினையோ
எவரெவர் இட்ட சாபமோ
ஏழரைச் சனியின் ஏவலோ
எம்மாதின் கும்பி கொதிப்போ
என்றென்னை கண்மறைந் தேளனம் செய்தனர்.

அங்கமெல்லாம் நொந்து புண்ணாகி
மெய்யெல்லாம் (துர்)நீர் வடியத்
துவண்ட எனை எமனவனும் துரத்த
நம்பி வந்தேன் எம் சிவகுரு
சிவகுரு சிவசித்தரே சரணமென்று
தஞ்ச மடைந்தேன் சிவஒளித் திருத்தலம் தனை

காலால் தாங்கினார்
காலை உணர்த்தினார்
‘கரி’ காலனாய் வந்த என்னை
பொன் காலனாய் மாற்றினார்
பொன், மண், பெண் மூவாசை போக்கினார்
பலரைத்தொழும் புண்ணியனாய் ஆக்கினார்
வேலா யுதனாய் காலனையும் விரட்டினர்
ஆதலின்,
சிவகுருவே என் நாடி
சிவகுருவே என் சுவாசம்
சிவகுருவே என் நரம்பு
சிவகுருவே என் குருதியோட்டம்
சிவகுருவே என் ஆன்மா
சிவகுருவே என் பரமான்மா
சிவகுருவே நட்சத்திரங்கள், நவகோள்கள்
சிவகுருவே சூரிய, சந்திரர்
சிவகுருவே பிரபஞ்சம்
சிவகுருவே என் ஈசன், என் இறை.
சகலமும் சிவகுரு சிவசித்தரே
சர்வமும் சிவகுரு சிவசித்தரே
அனைத்தும் சிவகுரு சிவசித்தருள் அடக்கம்.

குரு வழிபாடு தேவையா?
குருவின் பாதம் தொடலாமா?
குருவும் இறையும் ஒன்றா?
என்பவருக்கு,
சிவகுரு சிவசித்தரின் வாசியோகம் பயின்று பார்!
சிவகுரு சிவசித்தரை உணர்ந்து பார்!
உயிரற்ற ஊனுடலில் வாசியேற்றிப் பார்!
சிவபரவொளி நெருப்பாற்றல் சக்தியை சரணடைந்துப் பார்!
குரு வென்பாரெல்லாம் உணர்த்தவில்லை
உணர்த்துபவரே, பாமரனையும் உயர்த்துபவரே
ஒரு நாமமாய், ஓருருவாய்
ஓரிறையாய்
உன்னுள் உறைவார்! உணர்ந்துப் பார்!
****************************************************
M.G.கல்யாண சுந்தரம்
வி.எண்: 11 02 001

One thought on “சிவசித்தரின் பாமாலை|001|

  1. இந்த பெரியவரின் இருகாலிலும் சோரியாசிஸ் தன்மையுடைய பாதிப்பில் முழங்காலுக்கு கீழே மீனின் செதில்கள் போல 1.5 செ.மீ விட்டத்தில் பார்க்க சகிக்காத ,துர்நாற்றத்துடன் நீர் வடிந்த வண்ணம் ,எவரும் அருகில் நெருங்கவே சங்கடப்படும் நிலையிலும், சிவசித்தர் இவருக்கு வழங்கிய வாசியோக பயிற்சிகளால் இந்தக்குறை அடியோடு மறைந்து போயே போய் விட்டது.தொடர்ந்து நான்காவது ஆண்டை நோக்கி தன் பயிற்சியை தொடர்ந்து வருகிறார். இருப்பினும்,எண்சான் உடம்பில் ஒன்னரை அங்குலம் உள்ள அனைத்திற்கும் வளைந்து கொடுக்கும் அற்ப பொருளின்[நாக்கு] ஆவலில் சிக்கி எதையாவது தின்றுவிட்டு ,மேலும் சிரமத்தை வரவழைத்து கொள்கிறார்.இவர். இந்நிலை மாறினால் முழு ஆரோக்கியத்துடன் வாசியோகத்தின் உதாரனபுருஷனாகி நற் பேறு பெற்றிடுவார்.

Leave a Reply